search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manakula Ganesha temple"

    • ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்தை மீட்டு கொடுத்தனர்.
    • வில்லியனூர் காவல் நிலைய போலீசார் அந்த இடத்திற்கு சென்று அந்த இடத்தை கையகப்படுத்தி கோவில் ஊழியர்களிடம் ஒப்படைத்தவர்.

    புதுச்சேரி:

    புதுவை மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலம் வில்லியனூர் பைபாஸ் சாலை அருகில் உள்ளது.

    இந்த இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கோவில் நிர்வாகம் இந்து அறநிலை துறை, வில்லியனூர் பஞ்சாயத்து ஆணையர், வில்லியனூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், வில்லியனூர் போலீஸ் நிலையம் ஆகியோரிடம் புகார் மனு கொடுத்தனர்.

    அதன் அடிப்படையில் இன்று காலை 9 மணி அளவில் மணக்குள விநாயகர் அறங்காவலர் குழுவினர் கோயிலுக்கு சொந்தமாக இடத்திற்கு சென்றனர், இந்து அறநிலைத்துறை ஊழியர்கள், கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் வில்லியனூர் காவல் நிலைய போலீசார் அந்த இடத்திற்கு சென்று அந்த இடத்தை கையகப்படுத்தி கோவில் ஊழியர்களிடம் ஒப்படைத்தவர்.

    அந்த இடத்தில் சிலர் கையகப்படுத்தி வேலிகளை அமைத்திருந்தனர் , அதை போலீசார் அப்புறப்படுத்தி சுமார் ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்தை மீட்டு கொடுத்தனர்.

    அங்கு யாரோ சிலர் சாலை வசதியை ஏற்படுத்தி அதை காலி மனையாக விற்பனை செய்வதற்கு வைத்திருந்தனர். அந்த சாலையையும் ஜேசிபி எந்திரம் மூலம் அதிகாரிகள் துணையுடன் கோவில் நிர்வாகம் அப்புறப்படுத்தியது. அந்த இடத்தை சுற்றி புதிய நகர் உருவாகி உள்ளது. அந்தப் புதிய நகருக்கு செல்வதற்கு இந்தக் கோவில் நிலத்தை பயன்படுத்தி வந்தனர் அதையும் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் கோவில் நிர்வாகம் வேலி அமைக்கும் பணியை  தொடங்கியது.

    ×