search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mannuyir Kaathu Mannuyir Kappom"

    • விவசாயிகளுக்கு “பசுந்தாளுர விதைகளை” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி, திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
    • வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு டிராக்டர் இயக்குவதற்கு பயிற்சி அளிப்பதற்கான டிராக்டர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    சென்னை:

    ரூ.206 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் என்ற புதிய திட்டம், ரூ.25 கோடி மதிப்பீட்டில் குறைந்த வாடகையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக டிராக்டர்கள், கொத்துக் கலப்பைகள் மற்றும் ரோட்டவேட்டர்கள் வழங்குதல் மற்றும் ஒரு கோடி மதிப்பீட்டில் கிராமப்புற இளைஞர்களுக்கு டிராக்டர் இயக்குவதற்கு பயிற்சி என மொத்தம் ரூ.232 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    2024-25-ம் ஆண்டில் ரூ.206 கோடியில், 22 இனங்களுடன் "முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்" என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, விவசாயிகளுக்கு "பசுந்தாளுர விதைகளை" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி, திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதன்மூலம் சுமார் 2 லட்சத்திற்கும் மேலான விவசாயிகள் பயன்பெறுவர்.

    வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் 10.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட 90 டிராக்டர்கள், 180 கொத்துக் கலப்பைகள் மற்றும் 90 ரோட்டவேட்டர்கள் ஆகியவற்றினை அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்த வாடகையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிராக்டர்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு டிராக்டர் இயக்குவதற்கு பயிற்சி அளிப்பதற்கான டிராக்டர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஆர். எஸ். ராஜகண்ணப்பன், அரசு முதன்மைச்செயலாளர் அபூர்வா, வேளாண்மைத் துறை சிறப்பு செயலாளர் சங்கர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×