search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Music Release"

    • இந்தி திணிப்புக்கு எதிராக இடம்பெற்று அழுத்தமான வசனங்கள் டீசரில் இடம் பெற்றது.
    • இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி தற்போது இயக்குனர் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள 'ரகுதாத்தா' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுப்பெற்று டீசர் வெளியானது.

    காமெடியாகவும் 'இது எல்லாம் மீறி இந்தியை திணித்தே தீருவோம் என்றால்.. இந்தி தெரியாது போயா' போன்ற இந்தி திணிப்புக்கு எதிராக இடம்பெற்று அழுத்தமான வசனங்கள் டீசரில் இடம் பெற்றது.

    இப்படத்தில் கீர்த்தி சுரேஷுடன் எம்.எஸ் பாஸ்கர், தேவ தர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இயக்குனரான சுமன் குமார் இதற்கு முன் ஃபேமிலி மேன் என்ற பிரபல வலைத் தொடருக்கு கதையாசிரியாவார்.

    இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், ரகுதாத்தா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

    இந்த விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அப்போது, மேடையில் நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியதாவது:-

    ரகு தாத்தா.. பெண்கள் மீதான திணிப்பு பற்றியது. டீசரிலும் பார்த்திருப்பீர்கள். எல்லா விதமான திணிப்பு பற்றியும் தான் இந்த படம்.

    இந்த படத்தில் சின்ன மெசேஜ் சொல்ல முயற்சி செய்திருக்ககோம். ஆனால், உபதேசம் சொல்ற மாதிரி இருக்காது.

    இந்தப் படம் பார்க்கும்போது தெரியும். அதில், இந்தியை படத்தில் டிரை பண்ணியிருக்கோம். இதில் எந்த அரசியல் சாயலும், சர்ச்சைக்குரியதாகவும் எதுவும் இல்லை.

    படத்திற்கு வரும் மக்கள், ஜாலியாக படத்தை பார்த்து செல்லும் வகையில் கதை அமைந்திருக்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தாரகை சினிமாஸ் தயாரிப்பில் பாலு எஸ் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் "அறம் செய்".
    • முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், மக்களுக்கான முழுமையான அரசியல் படமாக உருவாகியுள்ளது

    Thaaragai cinemas தயாரிப்பில் பாலு எஸ் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் "அறம் செய்". நடிகர் ஜீவா, நடிகைகள் மேகாலி மீனாட்சி, அஞ்சனா கீர்த்தி, பயில்வான் ரங்கநாதன், திருச்சி சாதனா ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், மக்களுக்கான முழுமையான அரசியல் படமாக உருவாகியுள்ளது

    இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

    நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசியதாவது....

    ,இந்தப்படம் கண்டிப்பாகச் சர்ச்சையில் சிக்குமெனத் தெரியும். முழுக்க முழுக்க அரசியலில் நடந்த உண்மை சம்பவங்களை எடுத்திருக்கிறார் ஆனால் போஸ்ட்ரில் இப்படத்தில் அரசியல் இல்லை எனப் பொய் சொல்லியிருக்கிறார்.

    நடிகர் ஜீவா பேசியதாவது...

    பாலு எஸ் வைத்தியநாதன் இந்தப்படத்தின் நாயகன் இயக்குநர் ஒன் மேன் ஆர்மி மாதிரி செயல்பட்டு தன் மனதிலிருந்ததை படமாக எடுத்துள்ளார். மிக இளகிய மனதுக்காரர் நல்ல மனிதர். ஹீரோயின் மேகாலி நல்ல நடிகை, நன்றாக டான்ஸ் ஆடியுள்ளார், அவருடன் எனக்கு சாங்க் இருக்கிறது எனச் சொல்லிவிட்டு பாலு சார் அவரே தனியாக போய் டான்ஸ் ஆடிவிட்டு வந்துவிட்டார். என்று நகைச்சுவையாக பேசியுள்ளனர்.

    யூடியூபில் டிரெண்டான திருச்சி சாதனா முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அரசியல் கருத்துகளை முன் வைக்கும் திரைப்படமாக அமைந்துள்ளது. Thaaragai cinemas பாலு எஸ் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் இப்படத்தை, ஸ்வேதா காசிராஜ் இணை தயாரிப்பு . செய்துள்ளார். விரைவில் இப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.




     


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பொதுமக்கள் 120 ரூபாய் அல்லது 200 ரூபாய் கொடுத்து படம் பார்க்கின்றனர்.
    • நீங்க கொடுக்கிற டிக்கெட் பல குடும்பத்தை வாழ வைக்கும்.

    முண்டாசுப்பட்டி, ராட்சசன், கட்டா குஸ்தி என விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான பல படங்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றி வந்த ஷாஜி சலீம் இயக்கத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், எம். எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள லாந்தர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

    லாந்தர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய எம். எஸ். பாஸ்கர் படங்களை பார்த்து விட்டு பிடிக்கவில்லை என்றால் ரசிகர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் நல்லா இல்லை என மற்றவர்களிடம் சொல்லக் கூடாது என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பொதுமக்கள் 120 ரூபாய் அல்லது 200 ரூபாய் கொடுத்து படம் பார்க்கின்றனர். அதை வைத்து யாரும் மாடமாளிகையோ கூட கோபுரமோ கட்டப் போறதில்லை என எம்.எஸ். பாஸ்கர் பேசியதும் அரங்கத்தில் இருந்தவர்களின் முகமே மாறிவிட்டன. சினிமாவில் பலர் கஷ்டப்பட்டு உழைக்கிறோம். நீங்க கொடுக்கிற டிக்கெட் பல குடும்பத்தை வாழ வைக்கும்.

    படம் பிடிக்கவில்லை என்றால், படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தியேட்டரில் இருந்து மொக்கை, யாரும் தியேட்டருக்கு வர வேண்டாம் என போட்டு படத்தை காலி பண்ணிடுறாங்க என பேசியுள்ளார். நல்ல படத்தை எடுக்க வேண்டும் என சினிமா கலைஞர்களுக்கு அறிவுரை வழங்காமல் படம் நல்லா இல்லை என விமர்சிக்கக் கூடாது என எம்.எஸ். பாஸ்கர் பேசுவது சரியல்ல என சமூக வலைதளங்களில் அவருக்கு எதிரான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

    • இசைக் கலைஞரும், முன்னணி பாடகியும், நட்சத்திர நடிகையுமான ஸ்ருதிஹாசன் அண்மையில் 'இந்தியன் 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.
    • ஸ்ருதிஹாசன் தனது தந்தையின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பாடல்களை, தொகுத்து அதை தன் இசை மற்றும் நடனத்தால் மெருகேற்றி பார்வையாளர்களை கவர்ந்தார்.

    இசைக் கலைஞரும், முன்னணி பாடகியும், நட்சத்திர நடிகையுமான ஸ்ருதிஹாசன் அண்மையில் 'இந்தியன் 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு, அவருடைய தந்தை கமல்ஹாசனை கொண்டாடும் விதமாக அவரது ஹிட்டான பாடல்களை தொகுத்து ஒரு இசை நடன நிகழ்வை அரங்கேற்றினார்.

    ஸ்ருதிஹாசன் தனது தந்தையின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பாடல்களை, தொகுத்து அதை தன் இசை மற்றும் நடனத்தால் மெருகேற்றி பார்வையாளர்களை கவர்ந்தார். அவரது குழுவுடன் அவர் இணைந்து பாடி நடனமாடியது.. இசை வெளியீட்டு விழாவை மேலும் மிளிரச் செய்தது. இந்த தருணத்தை தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக, காணொளி ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

    அந்த காணொளியில் ஸ்ருதிஹாசன் தன் தந்தை கமல்ஹாசனின் பாதங்களை தொட்டு வணங்கி அவரது ஆசீர்வாதத்தை பெறுகிறார். அதே தருணத்தில் கமல்ஹாசன், ஸ்ருதிஹாசனை ஆரத்தழுவி அவரது அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்துகிறார். மேலும் இது தொடர்பாக சில அரிய புகைப்படங்களையும் ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ளார்.

    இந்நிகழ்வு குறித்து ஸ்ருதிஹாசன் கூறுகையில்.., '' என் தந்தையின் திரை வாழ்வை கௌரவப்படுத்துவது எனக்கு கிடைத்த கௌரவம். அதுவும் இசையால் அதை நிகழத்துவது எனக்குப் பெருமை. அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற வெற்றிப்பாடல்களில் சிலவற்றை திறம்பட ஒன்றிணைத்து, தொகுத்து, ஒரு அற்புதமான மெலடியாக தயாரித்து வழங்கியதற்கு பெரு உதவியாக இருந்த எனது குழுவினருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை ரசிகர்கள் முன் இந்நிகழ்வை அரங்கேற்றியது இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் மேடையில் பாடி நடனம் ஆடும் போது என் தந்தையின் வசீகர சிரிப்பை கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன். அவரது அன்பும், ஆதரவும், தான் என்னை இசையமைப்பாளராக வளர்த்தது. மேலும் பல இசை நிகழ்வுகளை எனது குழுவுடன் இணைந்து அரங்கேற்றுவேன்'' என்றார்.

    இந்நிகழ்வில் மேடையில் ஸ்ருதிஹாசனுடன் இசையமைப்பாளரும், பாடகருமான அனிருத் ரவிச்சந்தர், இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் மற்றும் மகள் அதிதி ஆகியோரும் இசை மற்றும் நடன நிகழ்வுகளை அரங்கேற்றினர்.

    'இந்தியன் 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும் இந்தியன் படத்தின் மூன்றாம் பாகம் இந்த ஆண்டில் இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஸ்ருதிஹாசன் தெலுங்கு நடிகர் ஆத்வி ஷேஷ் நடிக்கும் தெலுங்கு திரைப்படமான டகோயிட் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் பல அற்புதமான திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×