search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National welfare project camp"

    • நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா அழகர்நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் நடைபெற்றது.
    • இதில் ஆசிரியர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே நல்லமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா அழகர்நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் நடைபெற்றது.

    இதற்கு தலைமையாசிரியர் மகேந்திரன் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினார். உதவி திட்ட அலுவலர் வீரமுத்து வரவேற்புரை ஆற்றினார். தோட்டனூத்து ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தி உரை நிகழ்த்தினார். திட்ட அலுவலர் மெட்டில்டா சாந்தி மாணவர்களுக்கு நாட்டு நலப் பணித்திட்ட பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.

    இதில் ஆசிரியர்கள் ஸ்ரீதர் ராஜா, முருகேசன், கிரி அரசன் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக ஆரம்பப் பள்ளி ஆசிரியை அனுராதா நன்றி கூறினார்.

    • ராஜீவ் நகர் பிரதான சாலையை சுத்தப்படுத்தும் பணியில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து மாணவிகள் தூய்மைபணியில் ஈடுபட்டனர்.
    • முகாம் நாட்களில் மதிய வேளையில் மாணவிகளுக்கு யோகா பயிற்சி, போட்டி தேர்விற்கான விழிப்புணர்வு, கைவினை பயிற்சி ஆகியவை வழங்கப்பட்டன.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதிய துறைமுகம் மேல்நிலை பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் 7 நாள் சிறப்பு முகாம் எம்.சவேரியார்புரம் புனித அந்தோணியார் உயர் நிலைப் பள்ளியில் நடைபெற்றது. தலைமை ஆசிரியை ஷர்மிளா ஜெனித்தா முகாமை தொ டங்கி வைத்தார். முகாமின் போது முள்ளக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சூர்யகுமார் முதல்-அமைச்சரின் மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து விளக்கினார். முகாம் நாட்களில் பனைவிதைகள் சேகரி க்கப்பட்டு விதைக்க ப்பட்டது. ராஜீவ் நகர் பிரதான சாலையை சுத்தப்படுத்தும் பணியில் மாநகராட்சி துப்புரவு பணி யாளர்களுடன் இணைந்து மாணவிகள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் டெங்கு ஒழிப்பு, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை தெற்கு மண்டல உதவி ஆணையர் சந்திரமோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் தூத்துக்குடி மாநகராட்சி 57-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜெயலெட்சுமி, முன்னாள் கவுன்சிலர் சுடலைமணி மாணவி களுடன் இணைந்து துண்டு பிரசுரங் களை மக்களுக்கு வழங்கினர். டெங்கு விழிப்புணர்வு பேரணி ராஜீவ்நகர் பகுதியில் நடைபெற்றது. இதில் 58-வது மாநகராட்சி மாமன்ற உறுப்பி னர் பச்சிராஜ், தலைமை ஆசிரியை ஷர்மிளா ஜெனித்தா கலந்து கொண்டனர்.

    நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளியின் தாளாளர் செல்வ ஜார்ஜ் அடி களார், தலைமை ஆசிரி யை அன்ன மாணிக்கம், மாமன்ற உறுப்பினர் ஜெய லெட்சுமி, தலைமை ஆசிரி யை ஷர்மிளா ஜெனித்தா, முதுகலை ஆங்கில ஆசிரியர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அனைத்து நாட்களிலும் மதிய வேளையில் மாணவிகளுக்கு யோகா பயிற்சி, போட்டி தேர்விற்கான விழிப்புணர்வு, மருத்துவரின் அறிவுரை, ஊக்கமூட்டும் உரைகள், ஓவியம், கைவினை பயிற்சி ஆகியவை வழங்கப்பட்டன. 7 நாள் முகாம் ஏற்பாடு களை திட்ட அலுவலர் சொக்கலிங்கம், உதவி திட்ட அலுவலர் திருமலைக்குமார் செய்திருந்தனர்.

    • திருப்பூா் மாவட்டத்தில் 41 இடங்களில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம் இன்று தொடங்கியது.
    • நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் இன்று முதல் தொடங்கி அக்டோபா் 4 -ந தேதி வரை நடைபெறவுள்ளது.

    திருப்பூர் : 

    திருப்பூா் மாவட்டத்தில் 41 இடங்களில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம் இன்று தொடங்கியது.

    இது குறித்து மாவட்ட என்.எஸ்.எஸ். திட்ட அலுவலா் முருகேசன் கூறியதாவது: திருப்பூா் மாவட்டத்தில் இடுவம்பாளையம், தொங்குட்டிபாளையம், பள்ளிபாளையம், கணக்கன்பாளையம், பழனியாண்டவா் நகா், கிருஷ்ணாபுரம், அண்ணா நகா், பந்தம்பாளையம், சொரியன்கிணத்துபாளையம், பழையூா், எலவந்தி, வடுகபாளையம், சேடபாளையம், நாகலிங்கபுரம், முத்தனம்பாளையம், சென்னிமலைப்பாளையம், பொலையம்பாளையம் உள்ளிட்ட 41 இடங்களில் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் இன்று முதல் தொடங்கி அக்டோபா் 4 -ந தேதி வரை நடைபெறவுள்ளது.

    இம்முகாமில் இளைஞா் உடல் நலம் காத்தல், ஆன்மிகம் பற்றிய விழிப்புணா்வு - கோயில் வளாகம் சுத்தம் செய்தல், சுற்றுப்புறச்சூழல் காத்தல், மரம் நடுதல், இயற்கை விவசாயம், பொது மருத்துவ முகாம், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுதல் நடைபெறவுள்ளது.மேலும், நோய்கள் பற்றிய விழிப்புணா்வு கருத்தரங்கம், மனநலம், உடல்நலம் காத்தல், யோகாவின் முக்கியத்துவம் போன்றவை குறித்தும் விளக்கப்படவுள்ளது.இம்முகாமில் 1, 230 மாணவா்கள் கலந்துகொள்ளவுள்ளனா் என்றாா். 

    ×