search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Navadaniyam"

    • ஆசிரியைகள் குழந்தைகளின் கைகளை பிடித்து தமிழ் எழுத்துக்களை எழுத வைத்து கல்வியை தொடங்கினர்.
    • குழந்தைகளின் கல்வியை இன்று தொடங்கப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் விஜயதசமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வித்யாரம்பம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதில் நெல், பச்சரிசி ஆகியவற்றில் அட்சரம் எழுதி குழந்தைகள் கல்வியை தொடங்கினர்.

    மேலும் கோதுமை, நெல், துவரை, பயறு, கடலை, எள், உளுந்து, கொள்ளு, மொச்சை போன்ற நவதானியங்களில் எழுதியும் தங்களது கல்வியை தொடங்கினர்.

    ஆசிரியைகள் குழந்தைகளின் கைகளை பிடித்து தமிழ் எழுத்துக்களான உயிர் எழுத்துகளையும், மெய் எழுத்துக்களையும் எழுத வைத்து தங்களின் கல்வியை தொடங்கினர்.

    கல்விக்கு உரிய சரஸ்வதி தேவியையும், செல்வத்துக்கு உரிய லட்சுமி தேவியையும், வீரத்துக்கு உரிய பார்வதி தேவியையும் போற்றி வணங்கும் பண்டிகையாக எம் பள்ளியில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

    விழாவில் கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் கார்த்திகேயன் சிறப்பு பூஜைகள் செய்து தொடங்கி வைத்தார்.

    கார்த்தி வித்யாலயா பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். பெற்றோர்கள் இன்று தங்கள் குழந்தைகளின் கல்வியை தொடங்கப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தனர்.

    பள்ளி முதல்வர் அம்பிகாவதி பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை வரவேற்றார். விழாவில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×