search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nizhalkudai"

    • நிழற்குடை மிகவும் உயரமான நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.
    • இளம் வயதினர் மட்டுமே அதில் குதித்துக் கொண்டு ஏறி உட்கார முடியும்.

    குனியமுத்தூர்.

    கோவை-பொள்ளாச்சி ரோடு சுந்தராபுரம் காந்திநகரில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்து வருகிறார்கள்.

    பொள்ளாச்சி சாலையில் செல்லும் அனைத்து பஸ்களும் இந்த நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.

    இந்நிலையில் உக்கடம், காந்திபுரம் செல்லும் பயணிகள் பஸ் ஏறும் நிறுத்தத்தில் நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் உயரமான நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் யாரும் அதில் உட்கார முடியாத நிலை காணப்படுகிறது.

    இளம் வயதினர் மட்டுமே அதில் குதித்துக் கொண்டு ஏறி உட்கார முடியும். வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் வந்தால் அவர்கள் பஸ் வரும் வரை கால்கடுக்க நிற்க வேண்டிய சூழ்நிலையே காணப்படுகிறது. நிழற்குடை இருந்தும் பயனில்லாமல் இருப்பதால் பயணிகள் தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

    நிழற்குடை சுற்றிலும் கற்கள் பதிக்கப்பட்ட நிலையில் அந்த பகுதி கரடு, முரடாக காட்சியளிக்கிறது. நிழற்குடையை நோக்கி வரும் வயதான பயணிகள் கல் தட்டி கீழே விழுந்து எழுந்து செல்லும் சூழ்நிலையை காணப்படுகிறது.

    அதே போன்று அதற்கு எதிர் புறம் பொள்ளாச்சி செல்லக்கூடிய பயணிகள் நிற்கும் இடத்தில் நிழற்குடை எதுவுமே கிடையாது. இதனால் வெயிலில் நின்று தான் பேருந்து ஏறக்கூடிய சூழ்நிலை உள்ளது.

    எனவே பொள்ளாச்சி ரோடு காந்தி நகரில் பஸ் ஏறக்கூடிய பயணிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • 30 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிழற்குடை அமைக்கப்பட்டது.
    • புதிய நிழற்குடை அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அன்னூர்,

    கோவையில் இருந்து சத்தி செல்லும் சாலையில் உள்ளது கரியம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட தெலுங்கு பாளையம் பிரிவு பகுதி.

    இந்த கிராம மக்களின் வசதிக்காக கோவை-சத்தி சாலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிழற்குடை அமைக்கப்பட்டது. இதனை அந்த ஊர் மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் அந்த பஸ் நிழற்குடை முழுவதும் சேதம் அடைந்து மக்கள் பயன்பாடின்றி கிடக்கிறது. பஸ் நிழற்குடையில் இருக்கும் காங்கிரீட் அனைத்தும் வெளியில் தெரிந்தபடியும் விரிசலுடன் உள்ளது.

    அத்துடன் பயணிகள் அமரும் இருக்கையும் சேதம் அடைந்துள்ளது. மேலும் நிழற்குடையின் இரு புறங்களிலும் உள்ள ஜன்னல்கள் முற்றிலும் உடைந்து கீழே விழும் நிலை காணப்படுகிறது.

    இதனால் தற்பொழுது இந்த பஸ் நிழற்குடையை பொதுமக்கள் பயன்படுத்தாமல் சற்று தொலைவில் நின்று வருகின்றனர்.

    பஸ் நிழற்குடை இல்லாததால் பஸ்சுக்காக காத்திருக்கும் பெரியவர்கள், குழந்தைகள் முதியவர்கள் என அனைவரும் வெயில், மழை காலங்களில் மிகுந்த சிரம் அடைந்து வருகிறார்கள்.

    எனவே இந்த பஸ் நிழற்குடையை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தேசிய நெடுஞ்சாலைத்துறை விரிவாக்கப் பணிக்காக கடந்த சில ஆண்டுகளாக கடைவீதி பஸ் நிறுத்தம் அருகே இருந்த நிழற்குடை அகற்றினர்.
    • பயணிகள் நலன் கருதி மந்தாரக்குப்பத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.

    கடலூர்:

    கடலூரிலிருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலைத்துறை விரிவாக்கப் பணிக்காக கடந்த சில ஆண்டுகளாக கடைவீதி பஸ் நிறுத்தம் அருகே இருந்த நிழற்குடை அகற்றினர். இவ்வழியாக நுாற்றுக்கணக்கான வாகனங்கள் மற்றும் பல்வேறு பஸ்கள் தினசரி செல்கின்றன. பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கானோர் மந்தாரக்குப்பத்திற்கு வந்து செல்கின்றனர். பஸ் நிறுத்தங்களில் பஸ்சிற்காக காத்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள், முதியவர்கள் மழை, வெயிலில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இனிவரும் மழை க்காலத்தை சமாளிக்க ஏதுவாக பயணிகள் நலன் கருதி மந்தாரக்குப்பத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.

    ×