search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Noah Lyles"

    • 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற 8 வீரர்களும் 10 நொடிகளுக்குள் தங்களின் பந்தய தூரத்தை எட்டியுள்ளனர்.
    • ஒலிம்பிக் வரலாற்றில் இப்படி நடப்பது இதுவே முதல்முறையாகும்.

    பாரிஸ்:

    33-வது ஒலிம்பிக் போட்டி கடந்த மாதம் 26-ந்தேதி பாரீசில் கோலாகலமாக தொடங்கியது. மறுநாள் 27-ந்தேதி முதல் போட்டிகள் ஆரம்பமானது. இந்த நிலையில் நேற்றைய 9-வது நாளில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது.

    இந்த பந்தயத்தில் அமெரிக்காவின் நோவா லைல்ஸ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். நோவா லைல்ஸ் முதல் 30 மீட்டர் வரை 8-வது இடத்தில் தான் இருந்தார். ஜமைக்காவின் தாம்சன் முன்னிலையில் இருந்தார். ஆனால் 50 மீ தூரம் கடந்த பின் நோவா லைல்ஸ் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தினார். கடைசியாக நோவா, தாம்சன் ஆகியோர் ஒரே நேரத்தில் இலக்கை அடைந்தனர்.

    இருவரும் 9.79 நொடிகளில் வந்திருந்தாலும், நோவா லைல்ஸ் - தாம்சன் இடையில் 0.784 மைக்ரோ நொடிகள் வித்தியாசம் இருந்துள்ளது. இதனால் தாம்சன் 2-வது இடத்தை பிடித்தார். 3-வது இடத்தை அமெரிக்காவின் கெர்லி பிடித்து வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார்.

    இந்த 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மற்றொரு முக்கிய சாதனையும் படைக்கப்பட்டுள்ளது. என்னவென்றால் 100 மீட்டர் ரேஸில் பங்கேற்ற 8 வீரர்களும் 10 நொடிகளுக்குள் தங்களின் பந்தய தூரத்தை எட்டியுள்ளனர். 4-வது இடத்தில் வந்த தென்னாப்பிரிக்காவின் அகானி 9.82 நொடிகளிலும், இத்தாலியின் ஜேகப்ஸ் 9.85 நொடிகளிலும், போட்ஸ்வானாவின் டிபோகோ 9.86 நொடிகளிலும், அமெரிக்காவின் கென்னத் 9.88 நொடிகளிலும், ஜமைக்காவின் செவில் 9.91 நொடிகளிலும் பந்தயத்தை முடித்துள்ளனர்.

    ஒலிம்பிக் வரலாற்றில் இப்படி நடப்பது இதுவே முதல்முறையாகும். வெற்றிக்கு, தோல்விக்கும் இடையிலான இடைவெளி என்பது மைக்ரோ நொடிகளால் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்ததை விடவும், அதில் வெற்றி பெற்றவர்கள் யார் என்பதை முடிவு செய்வதற்கு நடுவர்கள் அதிக நேரம் எடுத்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    • உசைன் போல்ட்டுக்கும் நோவா லைல்ஸ்-க்கும் வெரும் 0.16 நொடிகளே வித்தியாசம்.
    • போட்டியில் பங்கேற்ற 8 வீரர்களில் 7 வீரர்கள் 9 நொடிகளில் போட்டியை நிறைவு செய்து இருந்தனர்.

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. ஆண் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நேற்று நடைப்பெற்றது. அதில் அமெரிக்க வீரர் நோவா லைல்ஸ் முதலிடம் பிடித்தார்.

    100 மீட்டர் தடக்களத்தை வெறும் 9.784 நொடிகளில் கடந்து தங்க பதக்கத்தை வென்றார். ஏற்கனவே உலகின் அதிவேக வீரரான உசைன் போல்ட் 9.63 நொடிகளில் முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உசைன் போல்ட்டுக்கும் நோவா லைல்ஸ்-க்கும் வெரும் 0.16 நொடிகளே வித்தியாசம்.

    போட்டியில் பங்கேற்ற 8 வீரர்களில் 7 வீரர்கள் 9 நொடிகளில் போட்டியை நிறைவு செய்து இருந்தனர். இதனால் யார் போட்டியில் முதல் இடத்தை பிடித்தார் என்று தெரிவிப்பதில் குழப்பம் ஏற்பட்டது. பின் நேரத்தை வைத்து பார்க்கும் போது நோவா 0.005 மில்லி நொடிகளில் கிஷேனை விட முன்கூட்டியே வந்ததால் போட்டியில் முதல் இடத்தை பிடித்தார்.

    நோவா - 9.784 - முதல் இடம்

    தாம்ப்சன் - 9.789 இரண்டாம் இடம்

    நோவாவின் வெற்றி பலரால் கொண்டாடப்பட்டது. வெற்றிப்பெற்ற பின் நோவா அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் "எனக்கு ஆஸ்துமா. ஒவ்வாமை, டிஸ்லக்ஸியா, ஏடிடி, மன அழுத்தம் இருக்கிறது. ஆனால் நான் கூறுகிறேன் இது எல்லாம் இருந்தும் என்னால் முடிந்தது என்றால். ஏன் உங்களால் முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.

    நோவாவின் இப்பதிவு மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று உத்வேகத்தை கொடுத்துள்ளது. இவரின் இந்த எக்ஸ் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ×