search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pension Ordinance"

    • அனைத்து பயனாளிக ளுக்கும் மாதாந்திர ஓய்வூதியத் தொகையாக ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது
    • 1,00,000 நபர்கள் கூடுதலாக பயன்பெறும் வகையில் ஆணையிட்டுள்ளார்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு அரசு பொறுப்பேற்று 2 ஆண்டு நிறைவடைந்ததையொட்டி, சமூக பாதுகாப்புத் திட்டத்தி ன்கீழ், தமிழ்நாட்டில் புதியதாக ஒரு லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை வாயிலாக, தமிழ்நாடு அரசு சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினர்களை பாதுகா க்கும் வகையில், சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ், ஓய்வூதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் அனைத்து பயனாளிக ளுக்கும் மாதாந்திர ஓய்வூதி யத் தொகையாக ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.

    தற்போது பல்வேறு மாவட்டங்களில், முதியோர் உதவித்தொகைக்கான அனுமதி பெற்று காத்திரு ப்போர் பட்டியலில் 64,098 நபர்கள் மற்றும் புதியதாக 35,902 நபர்கள் என மொத்தம் 1,00,000 நபர்களுக்கு வரும் ஜுன் மாதம் முதல் மாதந்தோறும் ரூ.1,000 (மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,500) உதவித்தொகை பெறும் வகையில். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்தி 1,00,000 நபர்கள் கூடுதலாக பயன்பெறும் வகையில் ஆணையிட்டுள்ளார். இந்நிலையில் சிறுபா ன்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கடந்த 7 -ந்தேதி திண்டிவனத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து ெகாண்டார். பின்னர், திண்டிவனம், மரக்காணம், செஞ்சி, மேல்மலையனூர் பகுதிகளுக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு உதவித்தொகையினை வழங்கினார். விழுப்புரம் மாவட்டத்தில், 9 வட்ட த்திற்குபட்ட 950 பயனா ளிகளுக்கு உதவி த்தொகை பெறுவ தற்கான ஆணை ரூ.1.21 கோடி மதிப்பீட்டில் வழங்க ப்பட்டுள்ளது. என அவர் கூறியுள்ளார்.

    ×