search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rasipalan"

    • மதுரை ஸ்ரீசோமசுந்தரப் பெருமாள் புட்டுத் திருவிழா.
    • திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி-28 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை.

    திதி: தசமி இரவு 8.18 மணி வரை. பிறகு ஏகாதசி.

    நட்சத்திரம்: பூராடம் இரவு 6.27 மணி வரை. பிறகு உத்திராடம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். மதுரை ஸ்ரீசோமசுந்தரப் பெருமாள் புட்டுத் திருவிழா. சுவாமி, அம்பாள் விருஷபாருட தரிசனம். ராமேசுவரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தர குசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றி மலை ஸ்ரீகல்யாண வெங்கட்ரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மேன்மை

    ரிஷபம்-நலம்

    மிதுனம்-உயர்வு

    கடகம்-நன்மை

    சிம்மம்-ஆர்வம்

    கன்னி-களிப்பு

    துலாம்- மாற்றம்

    விருச்சிகம்-சிந்தனை

    தனுசு- பாராட்டு

    மகரம்-நட்பு

    கும்பம்-பணிவு

    மீனம்-பாசம்

    • திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் ஸ்ரீகாந்திமதியம்மன் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி - 26 (புதன்கிழமை)

    பிறை : வளர்பிறை.

    திதி : அஷ்டமி இரவு 7.22 மணி வரை. பிறகு நவமி.

    நட்சத்திரம் : கேட்டை இரவு 6.07 மணி வரை. பிறகு மூலம்.

    யோகம் : சித்த/மரண யோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமி சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை

    இன்று ஜேஷ்டாஷ்டமி. திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். விருதுநகர் ஸ்ரீசுவாமி ஸ்ரீஅம்பாள் விருஷபாருட தரிசனம். மதுரை ஸ்ரீசோமசுந்தரப் பெருமாள் வளையல் விற்றருளிய காட்சி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் ஸ்ரீகாந்திமதியம்மன் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. திருச்சேறை ஸ்ரீசாரநாதர் அலங்காரம் வழிபாடு.

    இன்றைய ராசி பலன்

    மேஷம் - நம்பிக்கை

    ரிஷபம் - பரிசு

    மிதுனம் - உதவி

    கடகம் - புகழ்

    சிம்மம் - நலம்

    கன்னி - நன்மை

    துலாம் - லாபம்

    விருச்சிகம் - யோகம்

    தனுசு - கீர்த்தி

    மகரம் - வெற்றி

    கும்பம் - இன்பம்

    மீனம் - சலனம்

    • விருதுநகர் ஸ்ரீசுவாமி குதிரை வாகனத்திலும், ஸ்ரீஅம்பாள் சிம்ம வாகனத்திலும் பவனி.
    • சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி - 25 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : வளர்பிறை.

    திதி : சப்தமி இரவு 7.10 மணி வரை. பிறகு அஷ்டமி.

    நட்சத்திரம் : அனுஷம் மாலை 5.13 மணி வரை. பிறகு கேட்டை.

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி, வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம்

    சுவாமி மலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம், ஆராதனை வழிபாடு. விருதுநகர் ஸ்ரீசுவாமி குதிரை வாகனத்திலும், ஸ்ரீஅம்பாள் சிம்ம வாகனத்திலும் பவனி.

    குரங்கணி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி. குலைச் சிறைநாயனார் குருபூஜை. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம் - லாபம்

    ரிஷபம் - ஆர்வம்

    மிதுனம் - செலவு

    கடகம் - உதவி

    சிம்மம் - வரவு

    கன்னி - இன்பம்

    துலாம் - முயற்சி

    விருச்சிகம் - உற்சாகம்

    தனுசு - தனம்

    மகரம் - சிந்தனை

    கும்பம் - பாராட்டு

    மீனம் - நம்பிக்கை

    • திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
    • உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திர வார திருமஞ்சன அலங்கார சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு வைகாசி-26 (சனிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: துவிதியை மாலை 5.26 மணி வரை. பிறகு திருதியை

    நட்சத்திரம்: திருவாதிரை இரவு 9.21 மணி வரை. பிறகு புனர்பூசம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பக 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீராகோபால சுவாமி, திருப்புல்லாணி ஸ்ரீஜெகநாதப்பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திர வார திருமஞ்சன அலங்கார சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் மூல வருக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆர்வம்

    ரிஷபம்-துணிவு

    மிதுனம்-பணிவு

    கடகம்-பெருமை

    சிம்மம்-உண்மை

    கன்னி-உதவி

    துலாம்- நலம்

    விருச்சிகம்-உறுதி

    தனுசு- நன்மை

    மகரம்-ஆக்கம்

    கும்பம்-பரிவு

    மீனம்-பாசம்

    • சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, வைகாசி 18 (வெள்ளிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : அஷ்டமி காலை 8.52 மணி வரை. பிறகு நவமி.

    நட்சத்திரம் : பூரட்டாதி நாளை விடியற்காலை 4.03 மணி வரை. பிறகு உத்திரட்டாதி.

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளி வாகன சேவை

    சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளி வாகன சேவை. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தர குசாம்பாள் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை, ஊஞ்சல் சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம் - அமைதி

    ரிஷபம் - ஆர்வம்

    மிதுனம் - சுகம்

    கடகம் - முயற்சி

    சிம்மம் - பொறுமை

    கன்னி - பரிவு

    துலாம் - ஆதரவு

    விருச்சிகம் - உயர்வு

    தனுசு - வாழ்வு

    மகரம் - புகழ்

    கும்பம் - பண்பு

    மீனம் - பணிவு

    மனிதர்கள் வாழும் காலத்தை நான்கு யுகங்களாக பிரித்து சொல்கிறது புராணங்கள். அதன்படி அவை கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம் என்று நான்கு பிரிவாக உள்ளன.
    மனிதர்கள் வாழும் காலத்தை நான்கு யுகங்களாக பிரித்து சொல்கிறது புராணங்கள். அதன்படி அவை கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம் என்று நான்கு பிரிவாக உள்ளன.

    கிருத யுகம்: இந்த யுகத்தில் மக்கள் அனைவரும் அறநெறியுடன் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 21 அங்குலம் (924 செ.மீ.) உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 1,00,000 வருடமும் வாழ்வார்கள். இந்த யுகமானது 17,28,000 வருடங்கள் கொண்டது.

    திரேதா யுகம்: நான்கில் மூன்று பகுதி மக்கள் அறநெறியுடனும், ஒரு பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 14 அங்குலம் (616 செ.மீ.) உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 10,000 வருடமும் வாழ்வார்கள். இந்த யுகமானது 12,96,000 வருடங்கள் கொண்டதாகும்.

    துவாபர யுகம்: சரிபாதி மக்கள் அறநெறியுடனும், மறுபகுதி மக்கள் அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 7 அங்குலம் (308 செ.மீ.) உயரம் உள்ளவர்களாகவும், 1000 வருடமும் வாழ்வார்கள். இந்த யுகம் 8,64,000 வருடங்கள் கொண்டது.

    கலியுகம்: நான்கில் ஒரு பகுதி மக்கள் அறநெறியுடனும், மூன்று பகுதி மக்கள் அறம் இல்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 3.5 அங்குலம் (154 செ.மீ.) உயரம் உள்ளவர்களாகவும், 100 வருடமும் வாழ்வார்கள். இந்த யுகம் 4,32,000 வருடங்களைக் கொண்டதாகும்.

    இந்த நான்கு யுகங்களும் சோ்ந்தது ஒரு ‘மகா யுகம்’ அல்லது ‘சதுா்யுகம்.’ 12 மகா யுகங்களைக் கொண்டது, ஒரு மனுவந்தரம். 14 மனுவந்தரங்களைக் கொண்டது ஒரு கல்பம். இப்படியாக 30 கல்பங்கள் இருக்கின்றன. தற்போது நடந்து கொண்டிருப்பது 2-வது கல்பமான ‘ஸ்வேத வராக கல்பம்’ ஆகும்.

    மனிதர்களின் கால அளவும், தேவர்களின் கால அளவும் வேறுபடும். நமக்கு ஒரு வருடம் என்பது 12 மாதங்கள். ஆனால் தேவர்களுக்கு மனிதர்களின் ஒரு வருடம் என்பது ஒரு நாள். அதன்படி 360 மனித வருடம், தேவர்களின் ஒரு வருடமாகும்.

    12,000 தேவ வருடம் என்பது ஒரு சதுர்யுகம். அதாவது 43 லட்சத்து 20 ஆயிரம் மனித ஆண்டுகள். ஒரு சதுர்யுகம் என்பது நான்கு யுகங்களை கொண்டது என்பதால், 12 ஆயிரம் தேவ வருடங்களை நான்கு யுகங்களாக பிரிக்கலாம். ஒவ்வொரு யுகத்திற்கான தேவ வருடத்தையும், மனித வருடத்தையும் அறிந்து கொள்வோம்.

    கிருத யுகம் 17 லட்சத்து 28 ஆயிரம் மனித வருடம் - 4,800 தேவ வருடம்.

    திரேதா யுகம் 12 லட்சத்து 96 ஆயிரம் மனித வருடம் - 3,600 தேவ வருடம்.

    துவாபர யுகம் 8 லட்சத்து 64 ஆயிரம் மனித வருடம் - 2,400 தேவ வருடம்.

    கலி யுகம் 4 லட்சத்து 32 ஆயிரம் மனித வருடம் - 1,200 தேவ வருடம்.

    மேற்கண்ட நான்கு யுகங்களும் இணைந்தது ஒரு மகா யுகம் அல்லது சதுர் யுகம் என்று பார்த்தோம். இப்படி 71 மகா யுகங்கள் கடந்தால் ஒரு மனுவந்தரம் என்று பெயர். மொத்தம் 14 மனுவந்தரங்கள் உள்ளன. இப்போது நாம் இருப்பது 7-வது மனுவந்தரமான ‘வைவசுவதம்’ ஆகும்.

    சரி கல்ப காலம் என்பதைப் பற்றிய விளக்கத்தைப் பார்ப்போம். ஒரு கல்ப காலம் என்பது பிரம்மனின் ஒரு பகலை மட்டும் குறிக்கும். பிரம்மனின் இரவு காலத்தில் எந்தவித படைப்பு நிகழ்வும் இருக்காது. எனவே பிரம்மனின் பகல் மட்டும் பிரம்மனின் ஒரு நாள் ஆகும். எனினும் பகலுக்கு சமமான இரவும் பிரம்மனுக்கு உண்டு. பிரம்மனின் கல்ப காலத்தில் 14 மனுவந்தரங்கள் அடங்கும். ஒவ்வொரு மனுவந்தரத்திற்கும் ஒரு மனு, ஒரு இந்திரன் வீதம், 14 மனுக்கள் 14 இந்திரன்கள் தோன்றி மறைவார்கள். (இந்திரன் என்பது ஒரு பட்டம் மட்டுமே. ஒவ்வொரு மனுவந்தரத்திற்கும் ஒவ்வொரு இந்திரன் இருப்பார். இப்போது இருக்கும் இந்திரனின் பெயர் புரந்தரா).

    2 மனுவந்தரத்திற்கு இடையில் ஒரு சிறு இடைவேளை காலம் இருக்கும். இந்த காலத்தின் பெயர் “ஸந்தியா காலம்”. இந்த காலத்தின் அளவு, நான்கு கலியுகத்தின் காலம் அடங்கியது ஆகும். அதாவது 17 லட்சத்து 28 ஆயிரம் மனித வருடங்கள். இதே போல் 14 மனுவந்தரத்திற்கு பின்பும் மீண்டும் ஒரு பெரிய இடைவெளி இருக்கும். அதுவே பிரம்மனின் இரவு ஆகும். பிரம்மனின் ஒரு பகல் என்பது 71 மகாயுகங்கள் X 14 மன்வந்தரங்கள் = 994 மகா யுகங்கள் மற்றும் 71 X 15 ஸந்தியா காலங்கள் = 2 கோடியே 59 லட்சத்து 20 ஆயிரம் மனித ஆண்டுகள். அதாவது 6 மகா யுகங்கள்.

    ஆக பிரம்மனின் ஒரு பகல் என்பது 1000 சதுர்யுகம் ஆகும் (994 + 6 சதுர் யுகங்கள்). இதையே பிரம்மனின் நாள் என்றும், கல்பம் என்றும், கல்பகாலம் என்றும் கூறுவர். இப்படி 360 கல்ப காலம் என்பது பிரம்மனுக்கு ஒரு வருடம் ஆகும். பிரம்மனின் 100 வருடம், ஒரு பிரம்மனின் ஆயுள். ஒரு பிரம்மனின் ஆயுள் முடியும்போது, பெரிய பிரளயம் ஏற்பட்டு, அவரும் கூட ஸ்ரீமன் நாராயணனின் நாபி கமலத்தில் ஒடுங்குவார். தற்போதைய பிரம்மனின் ஆயுள் சரியாக 1,97,29,44,456 மனித வருடங்கள். அதாவது தற்போது பிரம்மனின் வயது 51. பிரளயம் ஏற்பட்டு படைப்புகள் அனைத்தும் ஒடுங்கும் தருவாய் வர, இன்னும் 49 பிரம்ம ஆண்டுகள் பாக்கியுள்ளது.

    அதுவரை யுகங்கள் மாறிக்கொண்டே இருக்கும். தற்போது கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது. அது முடிந்ததும் மீண்டும் கிருத யுகம் ஆரம்பிக்கும். அடுத்து திரேதா யுகம், துவார யுகம், மீண்டும் கலியுகம் என்று பிரம்மனின் ஆயுள் முடியும் வரை தொடர்ந்து கொண்டிருக்கும்.

    கல்பங்களின் விவரம் :

    1.வாமதேவ கல்பம், 2.ஸ்வேத வராக கல்பம், 3.நீல லோகித கல்பம், 4.ரந்தர கல்பம், 5.ரவுரவ கல்பம், 6.தேவ கல்பம், 7.விரக கிருஷ்ண கல்பம், 8.கந்தற்ப கல்பம், 9.சத்திய கல்பம், 10.ஈசான கல்பம், 11.தமம் கல்பம், 12.சாரஸ்வத கல்பம், 13.உதான கல்பம், 14.காருட கல்பம், 15.கவுரம கல்பம், 16.நரசிம்ம கல்பம், 17.சமான கல்பம், 18.ஆக்நேய கல்பம், 19.சோம கல்பம், 20.மானவ கல்பம், 21.தத்புருஷ கல்பம், 22.வைகுண்ட கல்பம், 23.லட்சுமி கல்பம், 24.சாவித்ரி கல்பம், 25.கோர கல்பம், 26.வராஹ கல்பம், 27.வைராஜ கல்பம், 28.கவுரி கல்பம், 29.மகோத்வர கல்பம், 30.பிதிா் கல்பம்.

    கடகம் ராமசாமி
    ×