search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sanithosham nivarthi"

    நவக்கிரகங்களுக்கும் சனிபகவானுக்கும் பைரவர்தான் குரு.

    சனிபகவான் அர்த்தாஷ்டம, அஷ்டம, கண்டகம், ஏழரை ஆண்டு சனி காலம், சனி திசை காலங்களில் ஆட்டிப்படைப்பவர்.

    இப்படி சனி பகவானால் ஏற்படக்கூடிய துன்பங்களைத் தீர்ப்பவர் பைரவர்.

    ராகு காலத்தில் பைரவருக்கு வடை மாலை மற்றும் வெற்றிலை மாலை அணிவித்து புனுகு பூசி கறிவேப்பிலை சாதம், பாகற்காய் கூட்டு, பால் பாயாசம், படையலிட்டு அல்லது கறிவேப்பிலை மாலை, பாகற்காய் மாலை அணிவித்து ஒரு பூசணியில் மிளகு தீபம், ஒரு பாகற்காய் மிளகு தீபம் ஏற்றி ஸ்ரீ பைரவருக்கு அர்ச்சனை செய்தால் சனி பகவான் பிடியிலிருந்து விடுபடலாம்.

    இது பொதுவான பரிகார பூஜை. இதை எவர் வேண்டுமானாலும் செய்யலாம்.

    சனிஸ்வர பகவானுக்குனு எள் சட்டி தீபம் ஒரு போதும் ஏற்றவே கூடாது.

    நெய் தீபம் ஏற்றவும். அல்லது எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணையில் பைரவருக்கு தீபமேற்றினால் சனி தோஷம் நிவர்த்தியாகும்.

    ராசிக்கு சனி பகவான் பார்வை இருந்தால் சனிக்கிழமை காலையில் ஒன்பது கருப்பு மிளகைத் தூள் செய்து வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.

    அதன் பிறகே கோவிலுக்குச் சென்று சனிஸ்வரருக்கும் ஸ்ரீபைரவருக்கும் வழிபாடு செய்து வரவேண்டும்.

    ராசிக்கு சனிபகவான் பார்வை இருக்கும் வரை பொதுவான பரிகாரத்தை சனிக்கிழமையில் செய்து வரவேண்டும்.

    இந்த விசேஷ பரிகாரத்தை மாதம் ஒரு முறை வரும் ஜன்ம அல்லது த்ரிஜன்ம நட்சத்திரம் அன்று செய்வது சிறந்தது.

    ×