search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Srinellaiyapar Temple"

    • சுமார் 2,000 ஆண்டுகள் பழைமையானது.
    • நெல்லையப்பர் தேர் தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய தேர்.

    திருநெல்வேலியில் மிகவும் பிரசித்திபெற்ற பழைமையான சைவத் திருத்தலமாக நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயில் விளங்குகிறது. இந்த திருத்தலம் சுமார் 2,000 ஆண்டுகள் பழைமையானது.

    ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்து சைவத் தொண்டாற்றிய திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற சைவத் தலம். இந்தக் கோயிலில் உள்ள மூலவர், `நெல்லையப்பர்', `சுவாமி வேணு நாதர்', `நெல்வேலி நாதர்' என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

    இந்த கோயிலில் ஆனித் திருவிழாவும், ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழாவும் முக்கியமான வைபவங்களாக நடை பெற்று வருகின்றன. ஆனிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக நடப்பது திருத்தேரோட்டம். விழாவின் 9-ம் நாளில் நடக்கும் இந்த தேரோட்டம் மிகச் சிறப்பானது.

    இக்கோயில் நெல்லையப்பர், அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் என ஐந்து தேர்கள் உள்ளன. இதில் நெல்லையப்பர் தேர் தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய தேர் என்னும் பெருமையைக் கொண்டதாகும். சுமார் 70 அடி உயரமும், 450 டன் எடையுடன் மிகவும் கம்பீரமாக இந்த தேர் காணப்படும். மிகச் சிறப்பான தேர் விழா இன்று. 

    ×