search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "State Swimming Competition"

    தமிழ்நாடு நீச்சல் சங்கம் சார்பில் 13-வது மாநில அளவிலான நீச்சல் போட்டி வருகிற 9, 10-ந் தேதிகளில் மதுரை ரேஸ்கோர்ஸ் நீச்சல் குளத்தில் நடக்கிறது. #StateSwimmingCompetition
    மதுரை:

    தமிழ்நாடு நீச்சல் சங்கம் சார்பில் 13-வது மாநில அளவிலான நீச்சல் போட்டி வருகிற 9 மற்றும் 10-ந் தேதிகளில் மதுரை ரேஸ்கோர்ஸ் நீச்சல் குளத்தில் நடக்கிறது. இது குறித்து தமிழ்நாடு நீச்சல் சங்க செயலாளர் சந்திரசேகர் கூறுகையில், ‘தமிழ்நாட்டின் மையப் பகுதியாக மதுரை இருப்பதால் மாநில அளவிலான நீச்சல் போட்டியை இங்கு நடத்த தீர்மானித்தோம். நீச்சல் வீரர்கள் அனைவரும் இங்கு வந்து செல்ல வசதியாக இருக்கும். இதற்கு முன்பு 3 முறை மாநில நீச்சல் போட்டியை நடத்தும் வாய்ப்பை மதுரை நீச்சல் சங்கத்திற்கு வழங்கியிருந்தோம்.

    இந்த போட்டி வயதின் அடிப்படையில் 8 பிரிவுகளாக 5 வயது முதல் 21 வயது வரையில் உள்ள நீச்சல் வீரர்களுக்கு நடத்தப்படுகிறது. வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நீச்சல் வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு தங்கும் வசதி, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும்’ என்றார். அப்போது மதுரை மாவட்ட நீச்சல் சங்க தலைவர் ஸ்டாலின், செயலாளர் கண்ணன் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர். #StateSwimmingCompetition
    சென்னை வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. நீச்சல் வளாகத்தில் நடந்த 72-வது சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் பிரிவில் ஜெயவீனா சாம்பியன் பட்டம் வென்றார். #JayaVeena
    சென்னை:

    72-வது மாநில சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. நீச்சல் வளாகத்தில் மூன்று நாட்கள் நடந்தது. கடைசி நாளில் நடந்த 400 மீட்டர் பிரிஸ்டைல் பிரிவில் நெல்லை வீரர் எமில் ராபின் சிங்கும், 200 மீட்டர் பேக் ஸ்டிரோக் பிரிவில் நெல்லை வீரர் சேது மாணிக்கவேலும், பெண்களுக்கான 100 மீட்டர் பிரிஸ்டைல், 50 மீட்டர் பட்டர்பிளை பிரிவுகளில் சென்னை டர்டில்ஸ் கிளப்பை சேர்ந்த ஜெயவீனாவும், 400 மீட்டர் பிரிஸ்டைல் பந்தயத்தில் கோவை வீராங்கனை பாவிகா துகாரும் தங்கப்பதக்கத்தை வென்றனர்.

    போட்டிகளின் முடிவில் தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டத்தை ஆண்கள் பிரிவில் நெல்லை வீரர் எமில் ராபின் சிங்கும், பெண்கள் பிரிவில் ஜெயவீனாவும் பெற்றனர். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை 283 புள்ளிகளுடன் சென்னை டர்டில்ஸ் கிளப் கைப்பற்றியது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை மாநில நீச்சல் சங்க தலைவர் சடையவேல் கைலாசம் வழங்கினார். பரிசளிப்பு விழாவில் செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் முரளிதரன், துணைத்தலைவர்கள் முனியாண்டி, முகுந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  #JayaVeena
    ×