search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TVK flag"

    • நடிகர் விஜய் இன்று காலை திடீரென சீரடி புறப்பட்டு சென்றார்.
    • விஜய் தனது தாயாருக்காக சென்னை அம்பத்தூரில் சாய்பாபா கோவில் ஒன்றை கட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கினார். சமீபத்தில் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு செப்டம்பர் 23-ந்தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை விஜய் மும்முரம் காட்டி வருகிறார்.

    இந்த நிலையில் நடிகர் விஜய் இன்று காலை திடீரென சீரடி புறப்பட்டு சென்றார். தனி விமானத்தில் அவர் சீரடியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்றுள்ளார்.

    விஜய் தனது தாயாருக்காக சென்னை அம்பத்தூரில் சாய்பாபா கோவில் ஒன்றை கட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • யானை சின்னம் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய அடையாளமாக உள்ளது.
    • தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் சட்டநிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கிய விஜய் கட்சியின் புதிய கொடியை கடந்த 22-ந்தேதி சென்னையில் அறிமுகப்படுத்தினார்.

    சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்துடன் நடுவில் 2 யானைகளுக்கு மத்தியில் வாகைப்பூ கொடியில் பொறிக்கப்பட்டு உள்ளது. கட்சி கொடி பற்றிய விளக்கத்தை அடுத்த மாதம் நடைபெறும் கட்சி மாநாட்டில் பேசுவதாக விஜய் அறிவித்துள்ளார்.

    இந்த நிலையில் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னம் எங்களுக்கு சொந்தமானது என்று பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் கமிஷனில் புகார் தெரிவித்துள்ளது. அந்த மனுவில், அங்கீகாரம் பெற்ற எங்கள் கட்சியின் தேர்தல் சின்னமான யானை சின்னத்தை இந்தியா முழுவதும் கொடியிலும் பயன்படுத்தி வருகிறோம். யானை சின்னம் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய அடையாளமாக உள்ளது.

    இந்த நிலையில் தற்போது புதிதாக கட்சி தொடங்கி இருக்கும் விஜய் தனது கட்சி கொடியில் யானை உருவத்தை பயன்படுத்தி உள்ளார். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் எந்த பதிலையும் விஜய் எங்களுக்கு தராமலும் நீக்குவதற்கான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருக்கிறார்.

    எனவே சட்டவிரோதமாக விஜய் கட்சி கொடியில் உள்ள யானை உருவத்தை அகற்ற வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் சட்டநிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதையடுத்து எடுக்கப்பட்ட முடிவில், பகுஜன் சமாஜ் கட்சி புகாருக்கு தேர்தல் கமிஷனிடம் இருந்து விளக்கம் கேட்டு முறைப்படி கடிதம் வந்தால் அதற்கு தகுந்த விளக்கம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுபற்றி தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஒருவர் கூறும்போது, "கட்சி சின்னத்தை தான் வேறொருவர் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் விதி இருக்கிறது. எங்கள் கட்சி கொடியில் யானைகள் பயன்படுத்தப்பட்டிருப்பது எந்த கட்சி சின்னத்துடனோ கொடியுடனோ பொருந்தாது. தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினால் தகுந்த விளக்கத்தை அளிப்போம்" என்றார்.

    • சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்தே களம் காண உள்ளது.
    • விஜய் தனது கட்சி பணிகளை மேற்கொள்வதற்காக அரசியல் நிபுணர் ஒரு வரையும் நியமித்துள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் களம் காணும் நிலையில் இவர்களுக்கு போட்டியாக பா.ஜனதா தனி அணியை உருவாக்கி உள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்தே களம் காண உள்ளது.

    இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி உள்ள நடிகர் விஜய்யும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் புதிய கட்சியை தொடங்கிய அவர் கட்சிக்கான கொடி மற்றும் பாடலையும் வெளியிட்டுள்ளார். அடுத்த மாதம் 22-ந் தேதி பிரமாண்டமான முறையில் மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளார்.

    இதன் பின்னர் சட்ட மன்றத் தேர்தலை எதிர் கொள்ளும் வகையில் விஜய் தீவிர கட்சி பணிகளில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளார்.

    புதிதாக ஓட்டு போட ஆயத்தமாகி வரும் இளம் வாக்காளர்கள் விஜய்க்கு ஆதரவளிப்பார்கள் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் பெண்கள் பலரும் விஜய் ரசிகர்களாக உள்ளனர்.

    இவர்களோடு மாற்றத்தை விரும்புபவர்களும் ஓட்டுபோட்டுவிட்டால் நிச்சயம் வெற்றி பெற்றுவிடலாம் என்பதே விஜய்யின் கணக்காக உள்ளது.


    இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் விஜய் கட்சியில் சேருவதற்கு முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பண்ருட்டி ராமச்சந்திரன், பழ.கருப்பையா, தமிழருவி மணியன் உள்ளிட்டோரும் விஜய் கட்சியில் சேர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மற்றும் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜனதா ஆகிய கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் விஜய் கட்சிக்கு தாவ திட்டமிட்டு காய் நகர்த்தி வருவதாக தெரிகிறது.

    இவர்களில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி.க்கள் ஆகியோரும் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. தாங்கள் தற்போது இருக்கும் கட்சியில் உரிய அங்கீகாரம் இல்லாமல் ஓரம் கட்டப்பட்டு உள்ளவர்களே விஜய் கட்சியில் சேருவதற்கு முடிவு செய்துள்ளனர்.

    அடுத்த மாதம் நடைபெற உள்ள தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டுக்கு பிறகு இந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் விஜய்யை நேரில் சந்தித்து பேசி கட்சியில் இணைவதற்கு முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

    விஜய் தனது கட்சி பணிகளை மேற்கொள்வதற்காக அரசியல் நிபுணர் ஒரு வரையும் நியமித்துள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றுடன் இதற்காக ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த அரசியல் நிபுணரின் ஆலோசனையின் பேரிலேயே கட்சி பணிகள் நடைபெற்று வருவதாகவும், அவர்தான் புதிதாக சேர உள்ள அரசியல் கட்சி தலைவர்களை இப்போதே கட்சியில் சேர்க்க வேண்டாம் என்று தடை போட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

    கொடி அறிமுக விழாவிலேயே அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க தயாராக இருந்துள்ளனர். ஆனால் அரசியல் ஆலோசகர்தான் இப்போதே வேண்டாம். சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்து முடிவு செய்யலாம் என்று கூறியுள்ளார். இதனாலேயே தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் விஜய் கட்சியில் இணைவது காலதாமதமாகி இருப்பதும் தெரிய வந்து உள்ளது. இருப்பினும் அடுத்த மாதம் நடைபெற உள்ள மாநாட்டுக்கு பிறகு விஜய் கட்சியில் புதிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • போர்க்களத்தில் விஜய் கட்சி கொடியில் இடம் பெற்றுள்ள 2 யானைகளும் நிற்கின்றன.
    • 4½ நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகளும் துள்ளல் போட வைக்கின்றன.

    தமிழக வெற்றிக் கழக பாடல் இன்று வெளியிடப்பட்டது. பின்னணியில் போர்க்கள காட்சிகளுடன் கூடிய வீடியோ பாடலாக வெளியாகி இருக்கும் அந்த பாடலை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.

    போர்க்களத்தில் 2 யானைகளில் அமர்ந்துள்ள இருவர் போர் வீரர்களை யானையை கொண்டு விரட்டி கொல்வது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இதையடுத்து மத யானைகளான அந்த 2 யானைகளையும் அடக்கி மக்களை காப்பதற்கு போர் வீரன் (விஜய்) குதிரையில் மின்னல் வேகத்தில் வருகிறார்.

    அதே போர்க்களத்தில் விஜய் கட்சி கொடியில் இடம் பெற்றுள்ள 2 யானைகளும் நிற்கின்றன. போர் வீரன் குதிரையில் வந்து இறங்கியதும் 2 யானைகளும் அவனது உத்தரவுக்கிணங்க செயல்பட்டு 2 மாத யானைகளையும் துதிக்கையில் தாக்கி கீழே சாய்ப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோக்களை பரப்பி வரும் விஜய் கட்சியினர் அரசியல் களத்தில் எதிரிகளை இப்படித்தான் விஜய் சாய்க்கப் போகிறார் என்கிற வாசகங்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.

    4½ நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகளும் துள்ளல் போட வைக்கின்றன. தமிழன் கொடி பறக்குது... தலைவன் யுகம் பொறக்குது.

    தமிழா தமிழா நாம் வாழப் போறோமே... சட்டசபையை அலங்கரிப்போம் ரெட்டை யானை பலம் கொடுக்கும் என்பது போன்ற வரிகளும் அதில் இடம் பெற்றுள்ளது.

    • சிவப்பு, மஞ்சள் வர்ணங்களில் 2 போர் யானைகள், வாகை மலர் கொண்டு தவெக கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • ஒரு அரசியல் கட்சியாக தமிழக மக்களுக்காக உழைக்க தயாராவோம்.

    சென்னை பனையூர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தி கொடிப்பாடலை நடிகர் விஜய் வெளியிட்டார்.

     

    சிவப்பு, மஞ்சள் வர்ணங்களில் 2 போர் யானைகள், வாகை மலர் கொண்டு தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

    தமிழக வெற்றிக்கழகத்தின் கொடிப்பாடலை கவிஞர் விவேக் எழுதி தமன் இசையமைத்துள்ளார்.

     

    இதைத்தொடர்ந்து தொண்டர்களின் மத்தியில் நடிகர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    தவெக கட்சியின் கொடியை கொடியாக மட்டும் நான் பார்க்கவில்லை, தமிழ்நாட்டின் வருங்கால எதிர்காலமாகவே பார்க்கிறேன். மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. விரைவில் மாநாட்டுக்கான தேதி அறிவிக்கப்படும். ஒரு அரசியல் கட்சியாக தமிழக மக்களுக்காக உழைக்க தயாராவோம். என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக நாம் அனைவரும் இணைந்து உழைப்போம் என்று கூறினார்.

    இந்த நிலையில் விஜய்க்கு அவருடைய அம்மா ஷோபா வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். அதில்,

    'இப்போது போல எப்போதும் உண்மையா இரு விஜய். நாட்டுக்கே ராஜானாலும் எனக்கு பிள்ளை. தமிழ் மொழியின் பாரம்பரியம் போற்று.

    பெண்ணியம் காப்பாற்று. புரட்சிகர திட்டங்கள் தீட்டு. வானில் பறக்கும் உன் கொடி. உன் அரசியல் வெற்றிக்கு இதுவே முதல் படி. ஏற்கனவே நான் ஒரு CM (celebrity mother). இனி நானும் ஒரு PM (proud mother)' என கூறி அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக மக்களின் வெற்றிக்கான ஒரு கொடியாக தவெக கொடி அமையும்.
    • ஒரு அரசியல் கட்சியாக தமிழக மக்களுக்காக உழைக்க தயாராவோம்.

    சென்னை:

    சென்னை பனையூர் அலுவலகத்தில் தவெக கொடியை அறிமுகப்படுத்தி கொடிப்பாடலை நடிகர் விஜய் வெளியிட்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * அரசியல் பயணத்தை தொடங்கி பிப்ரவரி மாதம் கட்சியை அறிவித்தேன். அப்போதில் இருந்து இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தேன்.

    * தவெக கட்சியின் கொடியை கொடியாக மட்டும் நான் பார்க்கவில்லை, தமிழ்நாட்டின் வருங்கால எதிர்காலமாகவே பார்க்கிறேன்.

    * தமிழக மக்களின் வெற்றிக்கான ஒரு கொடியாக தவெக கொடி அமையும்.

    * தவெக மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. விரைவில் மாநாட்டுக்கான தேதி அறிவிக்கப்படும்.

    * ஒரு அரசியல் கட்சியாக தமிழக மக்களுக்காக உழைக்க தயாராவோம்.

    * என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக நாம் அனைவரும் இணைந்து உழைப்போம்.

    * நம்பிக்கையாக இருங்க, நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்.

    * தவெக கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தியதில் பெருமை, கொடிக்கான விளக்கத்தை விரைவில் சொல்வேன் என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 45 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை விஜய் ஏற்றினார்.
    • தவெக கட்சியின் பிரசார பாடல் வெளியிடப்பட்டது.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சிக்கொடியை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜய் அறிமுகம் செய்தார். பின்னர் 45 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை விஜய் ஏற்றினார்.

    கட்சி கொடியின் மேலும் கீழும் சிவப்பு நிறமும் நடுவில் மஞ்சம் நிறமும் உள்ளது. கொடியின் நடுவில் வாகை மலர் இருக்க அதன் இருபுறமும் யானை உள்ளது.

    இந்த விழாவில் கட்சியை பிரபலப்படுத்தும் வகையில் பிரசார பாடல் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது. கவிஞர் விவேக் எழுதி தமன் இசையமைத்து இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு காரணம் கருதி குறைந்த அளவு நிர்வாகிகளே இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். விழாவின் துவத்தில் விஜய் உறுதிமொழி வாசிக்க கட்சி நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    • அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன்.
    • பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன்.

    சென்னை:

    நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக கட்சியின் கொடி அதிகாரபூர்வமாக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஏற்றி வைக்கப்படுகிறது. நிர்வாகிகள் மத்தியில் கட்சிக்கொடியை விஜய் அறிமுகம் செய்து, கொடியை ஏற்றி வைக்கிறார். இந்த விழாவில் கட்சியை பிரபலப்படுத்தும் வகையில் பிரசார பாடல் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்படுகிறது.

    இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழி வெளியாகி உள்ளது. அதில்,

    நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.

    நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன்.

    சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழக வெற்றிக்கழக கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் நடக்க இருக்கிறது.
    • பாதுகாப்பு காரணம் கருதி குறைந்த அளவு நிர்வாகிகளே கூட்டத்தில் பங்கேற்க கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.

    சென்னை:

    நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அடுத்த மாதம்  நடக்க இருக்கிறது. இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கை, சின்னம் குறித்து முக்கிய அறிவிப்புகளை விஜய் வெளியிட இருக்கிறார்.

    மாநாட்டுக்கு முன்பாக தொண்டர்கள் மத்தியில் தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சிக்கொடியை விஜய் அறிமுகம் செய்ய இருக்கிறார். இதற்காக பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் 45 அடி உயர கொடிக்கம்பம் நிறுவப்பட்டுள்ளது.

    கடந்த திங்கட்கிழமை அன்று இந்த கொடிக்கம்பத்தில் மஞ்சள் நிறத்துடன் தனது உருவம் பொறிக்கப்பட்ட கொடியை விஜய் ஏற்றி ஒத்திகை பார்த்தார்.

    இந்த நிலையில், கட்சியின் கொடி அதிகாரபூர்வமாக இன்று பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஏற்றி வைக்கப்படுகிறது. நிர்வாகிகள் மத்தியில் கட்சிக்கொடியை விஜய் அறிமுகம் செய்து, கொடியை ஏற்றி வைக்கிறார்.

    இந்த விழாவில் கட்சியை பிரபலப்படுத்தும் வகையில் பிரசார பாடல் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்படுகிறது.

    பாதுகாப்பு காரணம் கருதி குறைந்த அளவு நிர்வாகிகளே கூட்டத்தில் பங்கேற்க கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

    கூட்டத்தில் பங்கேற்க வரும் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு கட்சி அலுவலகத்திற்கு வர இருக்கிறார். காலை 9.15 மணிக்கு கொடியை ஏற்றி வைக்கிறார்.

    • தவெக கட்சியின் கொடியை நாளை விஜய் அறிமுகப்படுத்துகிறார்.
    • தமிழக வெற்றி கழகத்தின் பாடலும் நாளை வெளியிடப்படுகிறது.

    நாளை காலை 9.15 மணிக்கு பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் அக்கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்படும் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள்.

    தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன்.

    நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்.தமிழ்நாடு இனி சிறக்கும். வெற்றி நிச்சயம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகள் தொண்டர்களுக்கு புதிய வேகத்தை கொடுத்து உள்ளது.
    • தலைமை அலுவலகத்தில் சிறப்பு பந்தல் போடப்பட்டு வருகிறது.

    சென்னை:

    நடிகர் விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வேகம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மையமாக கொண்டு கட்சி பணிகள் நடந்து வருகிறது.

    இதைத் தொடர்ந்து கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    முதற்கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு அடுத்த மாதம் 22-ந்தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது.

    மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்க இருப்பதால் அதற்கேற்றவாறு மாநாடு பந்தல் அமைக்கப்பட இருக்கிறது. மாநாடு நடைபெறும் இடத்தை விஜய் ஆலோசனையின் பேரில் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    மாநாட்டில் பங்கேற்க வரும் தொண்டர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக பல ஏக்கரில் பார்க்கிங் வசதி, உணவுக் கூடம் அமைக்கப்பட இருக்கிறது.

    மாநாட்டில் தொண்டர்கள் எடுத்து வருவதற்கு வசதியாக கட்சியின் புதிய கொடியை வருகிற 22-ந் தேதி சென்னையில் விஜய் அறிமுகப்படுத்துகிறார்.

    இதற்காக பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகம் முன்பு 40 அடி உயரத்தில் கொடிக் கம்பம் நிறுவப்பட்டுள்ளது. நேற்று பவுர்ணமி என்பதால் கொடி கம்பத்தில் 'மாதிரி' கொடியை ஏற்றி ஒத்திகை பார்த்தனர். கொடி ஏற்றுவதை கட்சி தலைவர் விஜய், பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் ஆகியோர் பார்வையிட்டனர். 22-ந்தேதி கட்சியின் அறிமுக விழா நடைபெறுவதை தொடர்ந்து விழாவுக்கு 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கென தலைமை அலுவலகத்தில் சிறப்பு பந்தல் போடப்பட்டு வருகிறது.

    நிர்வாகிகள் முன்னிலையில் சிவப்பு, மஞ்சள் நிறத்துடன் வெற்றியை குறிக்கும் வாகைப்பூ நடுவில் இடம் பெற்றிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கட்சி கொடியை அறிமுகம் செய்வதுடன் கொடிக் கம்பத்திலும் விஜய் கொடி ஏற்றி வைக்கிறார்.

    தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நிர்வாகிகளுக்கு கட்சி கொடி வழங்கப்படுகிறது. கட்சிக் கொடி கிளை, நகரம், ஒன்றியம், மாநகரம் வாரியாக ஏராளமான இடங்களில் மாநாட்டுக்கு முன்பாக ஏற்றப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து மாநாட்டு பணிகள் தொடங்க இருக்கிறது. மைதானம் சீரமைப்பு, பந்தல், உணவு காண்டிராக்டர் மற்றும் பல்வேறு முன் ஏற்பாடுகளும் படிப்படியாக தொடங்கப்பட்டு நடக்க இருக்கிறது.

    கட்சிக் கொடி அறிமுகம், மாநாடு என தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகள் தொண்டர்களுக்கு புதிய வேகத்தை கொடுத்து உள்ளது.

    • த.வெ.க கட்சியின் முதல் மாநாடு செப்டம்பர் மாதம் நடத்த திட்டம்.
    • பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில், கட்சி கொடியை விஜய் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்.

    தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியை வரும் 22ம் தேதி விஜய் அறிமுகம் செய்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    முதல் மாநாட்டை செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் முன்கூட்டியே விஜய் கட்சியின் கொடியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அதன்படி, பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில், மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகளின் முன்னிலையில் கட்சி கொடியை விஜய் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், கட்சியின் கொடி, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கட்சியின் அடிப்படை கொள்கைக்கு ஏற்ப மக்களை ஒன்றுபடுத்தும் வகையில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

    ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது கடைசி படத்தில் நடித்து முடித்த பிறகு, முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×