search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The teenager was rescued alive"

    • பங்களாதேஷை சேர்ந்தவர்
    • ஒரு மணி நேரம் போராடி மீட்டனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த அக்ராகரம் நாட்டான் வட்டம் பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு.

    இவருக்கு சொந்தமான 60 அடி ஆழமுள்ள விவசாய கிணறு உள்ளது. நேற்று காலை 8 மணியளவில் திருநாவுக்கரசு விவசாய நிலத்திற்கு சென்ற போது கிணற்றில் இருந்து சத்தம் கேட்டுள்ளது.

    அங்கு சென்று பார்த்த போது கிணற்றுக்குள் வாலிபர் ஒருவர் பம்பு செட் பைப்பை பிடித்தபடி தத்தளித்து கொண்டிருந்தார். இத னால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக இதுகுறித்து நாட் டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயசந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் 1 மணி நேரம் போராடி அவரை மீட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் அக்ராகரம் கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார், நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் மீட்கப்பட்ட வாலிபர் வங்காளதேசத்தை சேர்ந்தவர் என்பதும், இரவு நேரத்தில் அந்த வழியாக சென்ற போது கிணற்றில் தவறி விழுந்ததும் தெரியவந்தது.

    இதனைய டுத்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நாட்ட றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    ×