search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvannamalai Karthikai Deepatri Festival"

    • பந்தக்கால் முகூர்த்தம் இன்று காலை நடந்தது.
    • பந்தக் காலுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா வருகிற டிசம்பர் மாதம் 1-ந் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது.

    4-ந்தேதி அதிகாலை அருணாசலேஸ்வரர் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம் நடக்கிறது.

    அன்று முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு காலை மற்றும் இரவில் பஞ்ச மூர்த்திகள் மாடவீதி உலா நடைபெறும்.

    13-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. கார்த்திகை தீபத் திருவிழா பூர்வாங்க பணிகள் செய்வதற்கான பந்தக்கால் முகூர்த்தம் இன்று காலை நடந்தது.

    அருணாசலேஸ்வரர் கோவில் சன்னதியில் உள்ள சம்பந்த விநாயகர் மற்றும் பந்தக் காலுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.

    இதனை தொடர்ந்து கோவிலில் இருந்து பந்தக்கால் எடுத்து வரப்பட்டு ராஜகோபுரம் முன்பு நடப்பட்டது.

    இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழாவில் 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் திருவண்ணாமலை மாநகராட்சி செய்து வருகிறது.

    விழாவில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் பிரபாகர், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், அண்ணாமலையார் கோவில் இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு ஏற்பாடு
    • சென்னை, வேலூர், பாண்டிசேரியில் இருந்து இயக்கப்படுகிறது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு 5-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    அதன்படி 5-ந்தேதி சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு வேலூர் வழியாக திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு வருகிறது.

    இந்த ரெயில் மறுநாள் (6-ந்தேதி) அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு காலை 9 மணி அளவில் சென்னை கடற்கரையை சென்றடைகிறது.

    புதுச்சேரியில் இருந்து 5-ந்தேதி மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வழியாக திருவண்ணாமலைக்கு இரவு 10.30 மணிக்கு வருகிறது. இந்த ரெயில் 6-ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு காலை 6.20 மணிக்கு புதுச்சேரியை சென்றடைகின்றது. 6-ந்தேதி மயிலாடுதுறையில் இருந்து ரெயில் காலை 6 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வழியாக காலை 10.55 மணி அளவில் திருவண்ணாமலைக்கு வருகின்றது. அந்த ரெயில் அன்று மதியம் 12.40 மணி அளவில் புறப்பட்டு மாலை 5.40 மணிக்கு மீண்டும் மயிலாடுதுறையை சென்று அடைகின்றது.

    அதேபோல் 6-ந்தேதி கடலூர் மாவட்டம் திருபாதிரிப்புலியூரில் இருந்து இரவு 8.50 மணிக்கு ரெயில் புறப்பட்டு விழுப்புரம் வழியாக இரவு 10.55 மணிக்கு திருவண்ணாமலை வருகை தந்து அங்கிருந்து வேலூரை நள்ளிரவு 12.40 மணி அளவில் சென்றடைகின்றது.

    அதேபோல் 6-ந்தேதி சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு வேலூர் வழியாக திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு வருகிறது. இந்த ரெயில் 7-ந் தேதி அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு காலை 9 மணி அளவில் சென்னை கடற்கரையை சென்றடைகிறது.

    புதுச்சேரியில் இருந்து 6-ந்தேதி மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வழியாக திருவண்ணாமலைக்கு இரவு 10.30 மணிக்கு வருகிறது. இந்த ரெயில் 7-ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு காலை 6.20 மணிக்கு புதுச்சேரியை சென்றடைகின்றது.

    மேலும் வேலூரில் இருந்த திருபாதிரிப்புலியூர் செல்லும் ரெயில் 7-ந் தேதி வேலூரில் அதிகாலை 1.30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3 மணி அளவில் திருவண்ணாமலைக்கு வருகிறது. பின்னர் அங்கிருந்து திருபாதிரிப்புலியூரை காலை 5.40 மணி அளவில் சென்றடைகின்றது.

    7-ந்தேதி மயிலாடுதுறையில் இருந்து ரெயில் புறப்பட்டு காலை 6 மணிக்கு விழுப்புரம் வழியாக காலை 10.55 மணி அளவில் திருவண்ணாமலைக்கு வருகின்றது. அந்த ரெயில் அன்று மதியம் 12.40 மணி அளவில் புறப்பட்டு மாலை 5.40 மணிக்கு மீண்டும் மயிலாடுதுறையை சென்று அடைகின்றது. 7-ந்தேதி திருபாதிரிப்புலியூரில் இருந்து இரவு 8.50 மணிக்கு ரெயில் புறப்பட்டு விழுப்புரம் வழியாக இரவு 10.55 மணிக்கு திருவண்ணாமலை வருகை தந்து அங்கிருந்து வேலூரை நள்ளிரவு 12.40 மணி அளவில் சென்றடைகின்றது.

    அதேபோல் 7-ந்தேதி சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு வேலூர் வழியாக திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு வருகிறது. இந்த ரெயில் 8-ந்தேதி அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு காலை 9 மணி அளவில் சென்னை கடற்கரையை சென்றடைகிறது.

    புதுச்சேரியில் இருந்து 7-ந்தேதி மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வழியாக திருவண்ணாமலைக்கு இரவு 10.30 மணிக்கு வருகிறது. இந்த ரெயில் 7-ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு காலை 6.20 மணிக்கு புதுச்சேரியை சென்றடைகின்றது.

    மேலும் வேலூரில் இருந்த திருபாதிரிப்புலியூர் செல்லும் ரெயில் 8-ந்தேதி வேலூரில் அதிகாலை 1.30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3 மணி அளவில் திருவண்ணாமலைக்கு வருகிறது. பின்னர் அங்கிருந்து திருபாதிரிப்புலியூரை காலை 5.40 மணி அளவில் சென்றடைகின்றது. இந்த தகவலை ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×