search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tourists Allowed Bathing"

    ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து மேலும் குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    கபினி, கிருஷ்ணராஜ சாகர் போன்ற அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. நேற்று முன்தினம் 19 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 17 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

    இன்று நீர்வரத்து மேலும் குறைந்து 14 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. கடந்த 23 நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்று நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    அதேபோல பரிசல் இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பரிசல் ஓட்டிகள் இன்று பரிசலை இயக்க மறுத்து விட்டனர். தண்ணீர் அதிகமாக வரும் காலங்களில் மாற்று பாதையில் பரிசல் இயக்க அனுமதி வழங்கினால் மட்டுமே பரிசலை இயக்குவோம் என்று அவர்கள் அறிவித்து விட்டனர். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

    நேற்று கலெக்டர் மலர்விழி அதிகாரிகளுடன் சென்று ஒகேனக்கல்லில் பரிசல் இயக்குவது குறித்து ஆய்வு செய்தார். அதன் பிறகு இன்று முறைப்படி பரிசல் இயக்கவும், பயணிகள் குளிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. நாளை ஆடிப்பெருக்கை யொட்டி பொதுமக்கள் காவிரி ஆற்றில் புனித நீராடுவார்கள். முன்னோர்களுக்கு தர்ப்பணமும் கொடுப்பார்கள். இதற்காக ஒகேனக்கல்லில் முதலைப்பண்ணை அருகேயும், நாகர்கோவில் அருகேயும் 2 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. #Hogenakkal #Cauvery

    ×