search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trade Target"

    • முன்னோர்கள் வாழ்ந்ததற்கும், வியாபாரம் செய்ததற்கான சான்று உள்ளது.
    • கடந்த மூன்று ஆண்டுகளாக திருப்பூர் பின்னலாடை உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    நொய்யல் கரையில், திருப்பூர் பொங்கல் திரு விழா, 15 ல் துவங்கி நடைபெற்றது. கலெக்டர் வினீத் நேற்று மாலை நடைபெற்ற நிறைவு விழாவுக்கு கலெக்டர் வினீத் தலைமைவகித்தார். ஜீவநதி நொய்யல் சங்க தலைவர் ரத்தினசாமி வரவேற்றார்.

    எம்.பி., சுப்பராயன், அமைச்சர் கயல்விழி, எம்.எல்ஏ., செல்வராஜ், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க நிறுவன தலைவர் சக்திவேல் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:- நொய்யலை பாதுகாப்ப தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நொய்யல் நதிக்கரைக்கு இடதுபுறம் கொடு மணல் உள்ளது. அங்கு முன்னோர்கள் வாழ்ந்த தற்கும், வியாபாரம் செய்ததற்கான சான்று உள்ளது.

    பொருட்கள்

    கொடுமணல் ஊராட்சி காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டது.கொடுமணல் சென்று அங்கு பொருட்களை அனைவரும் பார்க்க வேண்டும். தமிழ்நாடு பல்வேறு இடங்களில் தமிழர்கள் எப்படி எல்லாம் வாழ்ந்தார்கள் என கீழடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சான்று உள்ளது.

    திருப்பூர் தொழிலுக்கு நல்ல வழிவகை செய்ய ப்படும். முதலமைச்சர் தோள் கொடுப்போம் தொழிலுக்கு என்ற கூட்டத்தை திருமுருகன் பூண்டியில் நடத்தினார்.

    இந்திய அளவில் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு 13-ம் இடத்தில் இருந்தது. தற்போது 3-ம் இடத்தில் வகிக்கிறது. முதலமைச்சர் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

    பின்னலாடை உற்பத்தி தொழில்

    பஞ்சு விலையில் நிலையற்ற தன்மை, கொரோனா, தொடரும் உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளாக திருப்பூர் பின்னலாடை உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    நெருக்கடியான இந்த நிலை மாறும். தொழில் வளர்ச்சிக்கு தமிழக அரசு கைகொடுக்கும். லட்சம் கோடி ரூபாய் என்ற வர்த்தக இலக்கை திருப்பூர் பின்னலாடை துறை விரைவில் எட்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

    மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பால சுப்பிரமணியம், மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார், சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன், 'டிப்' தலைவர் மணி உள்பட பலர் பங்கேற்றனர். பொறி யாளர் சண்முகராஜ் நன்றி கூறினார்."

    ×