என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Varisu pongal"
- வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு.
- வாரிசு திரைப்படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை:
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே', 'தீ தளபதி' மற்றும் சோல் ஆஃப் வாரிசு (Soul of Varisu) ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.
வாரிசு படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியாகி 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்நிலையில், வாரிசு திரைப்படம் ஜனவரி 11ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நடிகர் அஜித்தின் துணிவு படமும் ஜனவரி 11 அன்று வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.