search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vocational Training Centre"

    • பதிவுக்கான அவகாசம் வருகிற 20-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • 14 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக்கல்லூரி சாலையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை பதிவு, மே 24-ந்தேதி தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பபதிவு செய்ய ஜூன் 7ந்தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பதிவுக்கான அவகாசம் வருகிற 20-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 14 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.

    எலக்ட்ரீசியன் 20 இடங்கள், பிட்டர் (20), மோட்டார் வாகன மெக்கானிக் (24), இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீசியன் (40), மேனுபேக்சரிங் பிராசஸ் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோமேஷன் (40), அட்வான்ஸ்டு சிஎன்சி., மெஷின் டெக்னீசியன் (20) உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயர்மேன் (20), வெல்டர் (40) ஆகிய இரண்டு பிரிவுகளுக்கும் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

    விண்ணப்பங்களை, www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பங்களை இலவசமாக ஆன்லைனில் பதிவு செய்ய விண்ணப்பதாரரின் அசல் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், ஜாதிசான்றி தழ், ஆதார் அட்டை மற்றும் இரண்டு போட்டோகளுடன் தொழிற்பயிற்சி நிலையத்தை வேலை நாட்களில் காலை, 9 மணி முதல் மாலை5மணி வரை நேரில் அணுகலாம்.

    கூடுதல் தகவல் பெற 04252-223340, 99442 06017, 95855 39650, 73732 78939 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராஜேஸ்வரி தெரிவித்தார்.

    • பரமக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிமனை, ஆய்வகம் கட்ட பூமிபூஜை நடந்தது.
    • இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்றார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் ஆயத்த இழைப்பு சட்டக பணிமனை மற்றும் ஆய்வக கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. விழாவிற்கு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார் முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்று பூமி பூஜை செய்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி எம்.எல்.ஏ முருகேசன், தி.மு.க. மாநில தீர்மான குழு துணை தலைவர் சுப.த.திவாகர், பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது.கருணாநிதி, செயற்பொறியாளர் செந்தில்குமார், முதுகுளத்தூர், பரமக்குடி உதவி செயற்பொறியாளர் குருதிவேல்மாறன், ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான விண்ணப்பங்கள் விநியோகம் கடந்த 18ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது
    • விண்ணப்பங்கள் பெற கடைசி நாள் வருகிற 28ம் தேதி ஆகும் .

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது 

    2022 - 23ம் ஆண்டிற்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான விண்ணப்பங்கள் விநியோகம் கடந்த 18ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது

    கூட்டுறவு மேலாண்மை பட்டிய பயிற்சியுடன் கணினி மேலாண்மை மற்றும் நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் பயிற்சிக்கான சான்றிதழ் இப்பயிற்சியிலே வழங்கப்படும்.

    விண்ணப்பங்களை பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து அல்லது கீழ்கண்ட அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்கள் பெற கடைசி நாள் வருகிற 28ம் தேதி ஆகும் .

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை முதல்வர் பட்டுக்கோட்டை கூட்டுறவு தொழில் பயிற்சி நிலையம் தாலுகா அலுவலகம் அருகில், முத்துப்பேட்டை ரோடு நாடிமுத்து நகர் பட்டுக்கோட்டை - 614 602 என்ற முகவரிக்கு தபால் அல்லது கொரியர் மூலம் அனுப்பி வைக்க அனுப்பி வைக்கலாம். 1.8.22 அன்று கடைசி நாளாகும்.

    பயிற்சி சேர குறைந்தபட்சம் 17 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை 12ம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், பட்ட படிப்பு முடித்தவர்களும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விவரங்களுக்கு கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையம் முதல்வரின் அலைபேசி எண்கள் 94860 45666, 97888 25339, 63811 46217 தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×