search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Whale remains"

    • திமிங்கல எச்சம் கடத்தப்படுவதாக மதுரை வன உயிரின தடுப்பு பிரிவு துறைக்கு தகவல் வந்தது.
    • பல கோடி ரூபாய் மதிப்புள்ள 16 கிலோ திமிங்கல எச்சம் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    விருதுநகர்:

    கடலில் வாழும் மிகப் பெரிய உயிரினமான திமிங்கலத்தின் எச்சம் மருந்துகள், வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன் படுத்தப்படுகிறது. இவைகள் சர்வதேச அளவில் அதிக அளவில் விலை போகிறது. எனவே திமிங்கல எச்சம் கடத்துவது அதிகரித்து உள்ளது.

    குறிப்பாக கடற்கரை மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திமிங்கல எச்ச கடத்தல் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் நெல்லையில் இருந்து விருது நகருக்கு திமிங்கல எச்சம் கடத்தப்படுவதாக மதுரை வன உயிரின தடுப்பு பிரிவு துறைக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து மதுரை வன காவல் நிலைய உதவி வன பாதுகாவலர் மனிஷா அலிமா, வன பாதுகாப்பு படையை சேர்ந்த மலர்வண்ணன், வனவர் செந்தில் ராகவன் தலைமையிலான வனத்துறையினர் விருதுநகரில் முகாமிட்டு விசாரணை நடத்தினர். சில இடங்களில் வாகன சோதனையும் நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூரை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் தர்மராஜ் (வயது 45) என்பவர் திமிங்கல எச்சம் கடத்தலில் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    தர்மராஜ் கொடுத்த தகவலின்பேரில் விருதுநகர் பழைய பஸ் நிலையம் பகுதியில் அவரது நண்பர் மனோகரன் என்பவர் நடத்திவரும் பர்னிச்சர் கடையில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள 16 கிலோ திமிங்கல எச்சம் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதை பறிமுதல் செய்த வனத்துறையினர் தர்மராஜ், மனோகரன், கடத்தலுக்கு உடந்தையாக இருந்த பால்பாண்டி, நெல்லை மேலபாளையத்தை சேர்ந்த அப்துல் ரகுமான், பத்ம குமார் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    இவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திமிங்கல எச்சம் எங்கிருந்து யாருக்காக கடத்தப்பட்டது? தொடர்பாக வனத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×