என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » Women ODI
நீங்கள் தேடியது "Women ODI"
தென்னாப்ரிக்காவுக்கு எதிரான மகளிர் ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #ENGvSA #SAvENG
கேண்டர்பரி:
இங்கிலாந்து சென்றுள்ள தென்னாப்ரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 9-ம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் தென்னாப்ரிக்கா அணியும், 12-ம் தேதி நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றது. இந்நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று கேண்டர்பரி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தென்னாப்ரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லிசெலி லீ, லாரா வோல்வார்ட் ஆகியோர் களமிறங்கினர். லிசெலி லீ 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய அண்ட்ரி ஸ்டெயின் 19 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதைத்தொடர்ந்து லாரா உடன், டேன் வேன் நெய்கெர்க் ஜோடி சேர்ந்து ரன் குவித்தார். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். லாரா 64 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். டேன் வேன் நெய்கெர்க் 106 பந்தில் 95 ரன்கள் எடுத்து ஸ்டிம்பிங் முறையில் வெளியேறினார். இதுதவிர சோலே ட்ரையான் 19 ரன்களும், மிக்னொன் டு பிரீஸ் 17 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் தென்னாப்ரிக்கா அணி 49.5 ஓவர்களில் 228 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து அணி பந்துவீச்சில் கேத்ரின் பர்ண்ட் 3 விக்கெட்களும், லாரா மார்ஷ் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
இதையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக எமி எல்லென் ஜோன்ஸ், டேமி பியூமோண்ட் ஆகியோர் களமிறங்கினர். ஜோன்ஸ் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த சாரா டெய்லர் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து டேமி பியூமோண்ட் உடன் ஹீதர் நைட் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி ரன் குவித்தார். இருவரும் அரைசதம் அடித்தனர்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டேமி பியூமோண்ட் சதம் அடித்தார். அவர் 105 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி 44 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹீதர் நைட் 83 பந்துகளில் 80 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். தென்னாப்ரிக்கா அணி பந்துவீச்சில் அயபோங்கா காகா 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.
இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது. #ENGvSA #SAvENG
தென்னாப்ரிக்காவுக்கு எதிரான மகளிர் ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #ENGvSA #SAvENG
ஹொவே:
இங்கிலாந்து சென்றுள்ள தென்னாப்ரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 9-ம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் தென்னாப்ரிக்கா அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று ஹொவே கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக எமி எல்லென் ஜோன்ஸ், டேமி பியூமோண்ட் ஆகியோர் களமிறங்கினர். ஜோன்ஸ் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் டேமி பியூமோண்ட் உடன் சாரா டெய்லர் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி ரன் குவித்தார். இருவரும் சதம் அடித்தனர்.
டேமி பியூமோண்ட் 101 ரன்களிலும், சாரா டெய்லர் 118 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதுதவிர ஹீதர் நைட் 24 ரன்களும், டேனியெல் வயட் 20 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 331 ரன்கள் குவித்தது. தென்னாப்ரிக்கா அணி பந்துவீச்சில் ஷப்னிம் இஸ்மாயில், மரிஜேன் கப், அயபோங்கா காகா ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 332 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்ரிக்கா அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லிசெலி லீ, லாரா வோல்வார்ட் ஆகியோர் களமிறங்கினர். லாரா 32 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த சுன் லூஸ் 2 ரன்களிலும், டேன் வேன் நெய்கெர்க் 9 ரன்களுலும், மிக்னொன் டு பிரீஸ் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதிரடியாக விளையாடி சதம் அடித்த லிசெலி லீ 117 ரன்களில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய சோலே ட்ரையான் 44 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் ரன் குவிக்க தவறியதை அடுத்து தென்னாப்ரிக்கா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் மட்டுமே எடுத்தது. மரிஜேன் கப் 29 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனால் இங்கிலாந்து அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி பந்துவீச்சில் சோபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்களும், கேத்ரின் பர்ண்ட், லாரா மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் சமனானது. இரு அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி 15-ம் தேதி நடைபெறுகிறது. #ENGvSA #SAvENG
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X