search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A fine of Rs.25 thousand"

    • மோட்டார் வாகனச் சட்டம் 2019 சட்டப்பிரிவு 199-ஏ படி பெற்றோர்கள் பாதுகாவலர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதுடன் 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
    • மேலும் வாகனம் 12 மாதங்களுக்கு சாலையில் ஓடுவது ரத்து செய்யப்படும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் பள்ளி மாணவ மாணவிகள் ஓட்டுநர் உரிமம், பழகுநர் உரிமம் இல்லாமல் மோட்டார் வாகனம் ஓட்டினால் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் 2019 சட்டப்பிரிவு 199-ஏ படி பெற்றோர்கள் பாதுகாவலர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதுடன் 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும். மேலும் வாகனம் 12 மாதங்களுக்கு சாலையில் ஓடுவது ரத்து செய்யப்படும். வாகனம் ஓட்டிய சிறுவர்கள் 25 வயது வரை எந்த வாகன ஓட்டுநர் உரிமமும் பெற இயலாது. எனவே பெற்றோர்கள், பொதுமக்கள் இதில் கவனம் செலுத்தி தங்களது குழந்தைகள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா தெரிவித்து உள்ளார்.

    • புலிகள் காப்பக பகுதியில் சட்ட விரோதமாக நுழைந்ததும் தெரிய வந்தது.
    • அந்த முதியவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது‌.

    சத்தியமங்கலம், ஏப்.30-

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் புலிகள் காப்பகம் உள்ளது. இந்த வனப்பகுதிகளில் கரடி, மான், சிறுத்தை யானை, புலிகள் என பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பகுதிகளில் வன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ரோந்து சென்று கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கேர்மாளம் வனச்சரகம் குத்தியாலத்தூர் காப்புக்காட்டு பகுதியில் வனச்சரகர் தினேஷ் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டி ருந்தனர். அப்போது வனப்பகுதியில் இருந்து ஒரு முதியவர் வந்தார்.

    இதை தொடர்ந்து வனத்துறையினர் அவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கர்நாடகா மாநிலம் அண்டே குருபன்தொட்டி கிராமத்தை சேர்ந்த ராம்ஜி நாயக்கர் ( வயது 50) எனவும்,.

    அவர் பாதுகாக்கப்பட்ட அரசு காப்புக் காட்டு புலிகள் காப்பக பகுதியில் சட்ட விரோதமாக நுழைந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து ஆசனூர் வனக்கோட்ட துனை இயக்குனரின் உத்தரவின்படி அந்த முதியவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் காப்புக் காடுகளில் அத்துமீறி நுழையக்கூடாது என வனத்துறையினர் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    ×