search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aadhaar PAN Linking"

    வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை (PAN) ஆதார் எண்ணுடன் இணைக்கும் தேதியை அடுத்தாண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் நேற்று உத்தரவிட்டது. #AadhaarPANlinking

    புதுடெல்லி:

    மத்திய நிதித்துறை மந்திரி அருண் ஜெட்லி, கடந்த 2017-18-ல் கொண்டு வந்த திருத்தத்தின்படி, வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யும்போது, ஆதார் எண்ணையும் குறிப்பிடுவது கட்டாயமாகிறது. அதாவது, பான் எண்ணையும் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும்.

    இதன் மூலம், ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்து, வரி ஏய்ப்பு செய்வதைத் தடுப்பது நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டது.

    எனவே, பான் எண் வைத்திருப்போர் அனைவரும், தங்கள் ஆதார் எண்ணை அதனுடன் இணைக்க வேண்டும்" என்று மத்திய வருவாய்த்துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில், ஆதார் அட்டைக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் உள்ளதா? என்பது தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன.

    இதனால், ஆதார் எண்ணுடன் வருமான வரி பான் கார்டை இணைக்கும் கடைசி தேதி 31-7-2017, 31-8-2017, 31-12-2017, 31-3-2018 என நான்கு முறை நீட்டிக்கப்பட்டிருந்தது. கடைசியாக 30-6-2018 வரை தேதி நீட்டிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்த காலக்கெடு நேற்றுடன் முடிந்தது.

    இந்நிலையில், வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை (PAN) ஆதார் எண்ணுடன் இணைக்கும் தேதியை அடுத்தாண்டு மார்ச் 31-ம் தேதி (31-3-2019) வரை நீட்டித்து மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் நேற்று உத்தரவிட்டது. #AadhaarPANlinking
    ×