search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aadi Madham"

    • சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், உலகமே இமயமலையில் கூடியது.
    • அதனால் வடக்கு திசை தாழ்ந்த போது, தெற்கு நோக்கி அகத்தியர் அனுப்பப்பட்டார்.

    மனிதன் இருக்கும் வரை தான் அவன் பாவ ஜென்மம். இறந்து போனால் அவன் புண்ணிய ஆத்மா. அவனுக்கு நம்மை நல்வழிப் படுத்துவதற்குரிய அனைத்து தகுதிகளும் உண்டு. எனவே இறந்து போன நம்மைச் சார்ந்த அனைவருமே, வயது வித்தியாசமின்றி நம்மை பாதுகாக்க வருகிறார்கள்.

    தமிழகத்தில் காவிரிக்கரைப் பகுதி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாமிரபரணி ஆற்றங்கரை, பாபநாசம், சொரிமுத்து அய்யனார் கோயில் ஆகிய பகுதிகளுக்கு சென்றுவருவது மிகுந்த நன்மையை தரும்.

    ஏனெனில், சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், உலகமே இமயமலையில் கூடியது.

    அதனால் வடக்கு திசை தாழ்ந்த போது, தெற்கு நோக்கி அகத்தியர் அனுப்பப்பட்டார்.

    அவர் தனது கமண்டலத்தில் கங்கையைக் கொண்டு வந்தார். அப்போது விநாயகர் காகம் உருவமெடுத்து கமண்டலத்தை தட்டி விட, காவிரி உருவானது.

    விழுந்த கமண்டலத்தை அகத்தியர் படாரென பாய்ந்து எடுத்து மீதி தண்ணீருடன் பொதிகை வந்தார்.

    அந்த தண்ணீரை பொதிகையின் உச்சியில் ஊற்ற அது தாமிரபரணியாக உருவெடுத்தது. எனவே காவிரி, தாமிரபரணி ஆகிய இரண்டு மாபெரும் நதிகளும் ஆடியில், பிறந்ததாக கூறப்படுவதுண்டு.

    நதிகள் பிறந்த இந்த புண்ணிய மாதத்தில் வரும் ஆடி அமாவாசை நாளில், நீர் நிலைகளில் நீராடி, தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட வேண்டும் என கூறப்படுகிறது.

    கிராமக்கோயில்களில் இப்போது ஆடி அமாவாசை விழாவை, ஆடு வெட்டி கொண்டாடுகிறார்கள். இந்த பழக்கம் பிற்காலத்தில் ஏற்பட்டது. ஒரு முக்கியமான விஷயத்தை மக்கள் மறந்து விடுகிறார்கள்.

    ஆடி அமாவாசை தினத்தில் தான் நமது பாவங்கள் விலகுவதாக கூறப்படுகிறது. எனவே இந்த நாளில் ஆடு வெட்டுதல் போன்ற பலி வாங்கும் பாவ காரியங்களைச் செய்யாமல் முன்னோர்களை வணங்கி புண்ணியத்தை சேர்க்க வேண்டும்.

    • நாட்டில் எத்தனையோ பேர் அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் ஏக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
    • உங்கள் சக்திக்கு ஏற்ப அவர்களுக்கு உதவலாம்.

    தானம்...

    உங்களால் என்ன தானம் செய்ய முடிகிறதோ அதை செய்யுங்கள்.

    நாட்டில் எத்தனையோ பேர் அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் ஏக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    உங்கள் சக்திக்கு ஏற்ப அவர்களுக்கு உதவலாம்.

    ஏழைகளுக்கு உணவு, உடை, தானம் செய்யலாம். நீங்கள் செய்யும் தானம் ஏழை & எளிய மக்களின் மனதில் மகிழ்ச்சியையும், குளிர்ச்சி யையும் ஏற்படுத்த வேண்டும். அந்த மகிழ்ச்சி உங்கள் குடும்பத்தில் அமைதியை ஏற்படுத்தும். குலம் செழிக்க கைக் கொடுக்கும்.

    இதையடுத்து தர்ப்பணம்...

    நாளை நாம் ஒவ்வொருவரும் மறக்காமல் மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

    ஆண்டுக்கு ஒரு தடவை திதி கொடுத்தாலும் நாளை மறக்காமல் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

    நாம் கொடுக்கும் எள்ளும் தண்ணீரும்தான் அவர் களுக்கு உணவு, நம்மை சீராட்டி, பாராட்டி வளர்த்த நம் முன்னோர்களை நாம் பட்டினிப் போடாலாமா?

    அது எவ்வளவு பெரிய பாவம்?

    இந்த பாவ மூட்டை களை நீக்க மறக்காமல் தர்ப் பணம் கொடுங்கள். 

    • தீர்த்தங்கள் என்பது வெறும் தண்ணீர் மட்டுமல்ல.
    • அதில் மகத்துவம் நிறைந்துள்ளது.

    புனித நீராடல், தானம், தர்ப்பணம்

    சந்திரனின் சொந்த வீடான கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் ஆடி மாத அமாவாசை 12 மாத அமாவாசைகளுள் மிகச் சிறந்ததாக கருதப் படுகிறது.

    கோவிலுக்கு சென்று வழிபடுவது மிகவும் நல்லது.

    பொதுவாக ஆடி அமா வாசை தினத்தன்று மூன்று விஷயங்கள் முக்கி யத்துவம் பெறுகின்றன. அவை....

    1. புனித நீராடல்

    2. தானம்

    3. தர்ப்பணம்

    இந்த மூன்றையும் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.

    தமிழ்நாட்டின் பல பகுதிகளில் புனித நதிகள், புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.

    தங்கள் சந்ததிகள் நலமுடனும், வளமுடனும் வாழ சிறப்பு மிக்க தீர்த்தங்களை நமது முன்னோர்கள் பல இடங்களில் கண்டுபிடித்து நமக்கு அளித்துள்ளார்கள்.

    இந்த தீர்த்தங்களின் சிறப்பை உணர்ந்து, நாம் அங்கு புனித நீராட வேண்டும் என்பதற்காகவே, இந்த தீர்த்தங்கள் உள்ள இடங்களில் ஆலயங்களை கட்டினார்கள். ஆலயத்தையும் தீர்த்தத்தையும் ஒன்று படுத்தியதன் மூலம் பல நூற்றாண்டு களாக தீர்த்தங்களின் புனிதம் ேபாற்றப்பட்டு வருகிறது.

    தீர்த்தங்கள் என்பது வெறும் தண்ணீர் மட்டுமல்ல. அதில் மகத்துவம் நிறைந்துள்ளது. நமது நாகரிகத்தின் ஒட்டு மொத்த பண்பாடும் அதில் அடங்கியுள்ளது.

    பஞ்ச பூதங்களில் ஒன்றான இந்த தீர்த்தங்கள் அமாவாசை தினத்தில் இரட்டிப்பு சக்தி பெற்றதாக இருக்கும்.

    எனவே நாம் புனித நதியிலும், புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடி இறைவழிபாடு செய்தால் அளவற்ற பலன்களை நிச்சயம் பெறலாம்.

    இந்த தீர்த்தக்கரைகளில் பித்ருதர்ப்பணம் செய்வது மேலும் சிறப்பைத் தரும்.

    • இருவேறு சக்திகளான சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணையும் அமாவாசையன்று எந்த கிரகமும் தோஷம் பெறுவதில்லை.
    • இதன் காரணமாக அமாவாசை திதியில் சில விஷயங்களை மேற்கொண்டால் வெற்றியாக முடியுமென்பர்.

    இருவேறு சக்திகளான சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணையும் அமாவாசையன்று எந்த கிரகமும் தோஷம் பெறுவதில்லை.

    இதன் காரணமாக அமாவாசை திதியில் சில விஷயங்களை மேற்கொண்டால் வெற்றியாக முடியுமென்பர்.

    இறைவழிபாடு, மருந்து உண்ணுதல், நோயாளிகளைக் குளிப்பாட்டுதல் உள்ளிட்ட செயல்களை அமாவாசை யன்று துவங்கலாம் என்று சித்த நூல்கள் கூறுகின்றன.

    எந்தவொரு பரிகாரப் பூஜையாக இருந்தாலும், அமாவாசையன்று செய்தால் நல்ல பலன்கள் கிட்டும்.

    குரு தோஷம், ராகு- கேது தோஷம், சர்ப்ப தோஷம், சனி, செவ் வாய் கிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் ஆகியவற்றுக்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது.

    மேலும் இந்த காரியங்களுக்கு தட்சிணாயன கால ஆடி அமாவாசை உகந்த நாளாகக் கருதப் படுகிறது. அன்று நீர் நிலையில் பிதுர்பூஜை செய்து வேதவிற்பன்னருக்குரிய சன்மானம் அளித்தபின், அன்னதானம் செய்வதும், மாற்றுத்திறனாளிக்கு வசதிக்கேற்ப ஆடை தானம் வழங்குவதும் முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

    நீர்நிலையில் பிதுர்பூஜைகள் மேற் கொள்ளப்பட்டபின் வீட்டிற்கு வந்ததும், பூஜையறையில் முன்னோர்களின் படங்கள் முன் னிலையில் அவர்களை நினைத்து தலைவாழை இலையில் பலவிதமான காய்கறிகளை சமைத்து, வடை, பாயசத்துடன் பெரிய அளவில் படையல்போட்டு வழிபடவேண்டும். அவரவர் குல வழக்கப்படி இந்தப் பூஜையை மேற்கொள்ளவேண்டும் என்பது விதியாகும். இதனால் முன்னோர்களின் ஆசிகிட்டுவதுடன், வீட்டில் தீய சக்தி இருந்தால் அது விலகியோடும். இல்லத்தில் உள்ளவர் களும் சகல சவுபாக்கியங்களுடன் வாழ்வார்கள்.

    • அமாவாசையன்று நீர் நிலைகளில் ஏற்படும் மாறுதல்களால் கடலில் வாழும் ஜீவராசிகளான சங்கு, சிப்பி, பவளம் போன்றவை புத்துயிர் பெறுகின்றன.
    • அதன் சந்ததிகளும் பரம்பரை பரம்பரையாக வாழ வழிவகுக்கின்றன.

    ஒரு வருடத்தில் வரும் பன்னிரண்டு அமாவாசைகளில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை.

    அமாவாசையன்று நீர் நிலைகளில் ஏற்படும் மாறுதல்களால் கடலில் வாழும் ஜீவராசிகளான சங்கு, சிப்பி, பவளம் போன்றவை புத்துயிர் பெறுகின்றன.

    அதன் சந்ததிகளும் பரம்பரை பரம்பரையாக வாழ வழிவகுக்கின்றன.

    அதிலும், ஆடி அமாவாசையன்று ஏற்படும் மாறுதல்களால் கடல்நீரில் ஓர் புதிய சக்தி ஏற்படுகிறது. அன்றைய தினம் புனிதத்தலங்களிலுள்ள கடலில் நீராடுவது உடல்நலத்திற்கு வளம் தரும்.

    மேலும் நம்முடன் வாழ்ந்த, காலஞ்சென்றவர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பிதுர்பூஜை செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

    ஆடி அமாவாசையன்று முக்கடல் கூடும் கன்னியாகுமரி, தனுஷ்கோடி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், திருப்புல்லாணி, தேவிப்பட்டினம் நவபாஷாணம் உள்ள கடல், வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திருப்பாதிரிப்புலியூர், கோகர்ணம் போன்ற இடங்களில் கடல் நீராடுவது சிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பொதுவாக, நீர் நிலைகளை தெய்வமாக வழிபடுவது இறையன்பர்களின் வழக்கம்.

    கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, சிந்து, காவேரி ஆகிய ஏழு நதிகளும் புனிதம் வாய்ந்தவை மட்டுமல்ல; தெய்வாம்சமும் பொருந்தியவையாகும்.

    ஆடி அமாவாசையன்று, தமிழகத்தில் காவேரிப் பூம்பட்டினத்தில் காவேரி சங்கம முகத்தில் நீராடுவது சிறப்பாகப் பேசப்படுகிறது. வைகை, தாமிரபரணி, மயிலாடுதுறையில் ஓடும் காவேரி, திருவையாறு, குடந்தை அரிசலாறு, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவேரிப் படித்துறை, திருச்சிக்கு அருகி லுள்ள முக்கொம்பு ஆகிய தீர்த்தக்கரைகளில் ஆடி அமாவாசை தினத்தன்று மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.

    அன்றைய தினம் பிதுர் பூஜை செய்வதால் குடும்பத்தில் சுப காரியங்கள் தடையின்றி நடை பெறுவதுடன், முன்னோர்களின் ஆசி யும் கிட்டும் என்று ஞான நூல்கள் கூறு கின்றன.

    • பிரசாதமாக பெறப்படும் எலுமிச்சம் பழங்களை எந்த காரணம் கொண்டும் ஊறுகாய் போடவோ அல்லது ஜூஸ் போடவோ பயன்படுத்தாதீர்கள்.
    • அதன் புனிதம் உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

    மூன்றாவதாக எலுமிச்சம் பழம். அம்மன் ஆலயங்களில் எலுமிச்சையின் பயன்பாடு மிக, மிக அதிகம், ஆடி மாதம் எந்த அளவுக்கு எலுமிச்சையை பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு அது நமக்கு நன்மை தரும்.

    பொதுவாகவே எலுமிச்சை பழத்தில் தெய்வீக சக்தி மிக அதிகம் உண்டு என்பார்கள். அதனால் தான் எலுமிச்சம் பழத்துக்கு 'ராஜகனி' என்றும் ஒரு பெயர் உண்டு.

    ஆடி மாதம் துர்க்கைக்கு எலுமிச்சை மாலை சாத்தி வழிபட வேண்டும். 22,45,84,108 என்ற எண்ணிக்கையில் எலுமிச்சம் பழ மாலை இருக்க வேண்டும்.

    கெட்டுப்போன அல்லது நசுங்கி போன எலுமிச்சம் பழங்களை மாலையில் சேர்க்கக்கூடாது.

    ஆடி மாதம் செவ்வாய், வெள்ளி, பவுர்ணமி, அமாவாசை, அஷ்டமி நாட்களில் அம்மனுக்கு எலுமிச்சம்பழ மாலை அணிவித்து வழிபாடு செய்தால் உரிய பலன்கள் கிடைக்கும்.

    துர்க்கை அம்மனுக்கு அணிவித்து வழிபாடு செய்த எலுமிச்சம் பழ மாலையில் உள்ள எலுமிச்சைகளை பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகம் செய்யலாம்.

    அந்த எலுமிச்சம் பழத்தை வீட்டின் பூஜை அறையில் வைக்கலாம். அல்லது வீட்டு வாசலில் இரு பக்க ஓரங்களிலும் கால் படாதபடி வைக்கலாம்.

    இதனால் துஷ்ட சக்திகள் வீட்டுக்குள் வராது. அந்த அளவுக்கு அம்மன் கழுத்தில் இருந்து பெறப்படும் எலுமிச்சம் பழங்களுக்கு அபார எதிர்ப்பு சக்தி உள்ளது.

    பிரசாதமாக பெறப்படும் எலுமிச்சம் பழங்களை எந்த காரணம் கொண்டும் ஊறுகாய் போடவோ அல்லது ஜூஸ் போடவோ பயன்படுத்தாதீர்கள்.

    அதன் புனிதம் உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

    எனவே ஆடி மாதம் முழுவதும் வேப்பிலை, மஞ்சள், எலுமிச்சம் பழம் மூன்றையும் தாராளமாக நிறைய பயன்படுத்துங்கள்.

    • அது மட்டுமா... ஏழை எளிய பெண்களுக்கு மஞ்சளை தானமாக கொடுங்கள் என்ற நல்ல பழக்கத்தையும் ஏற்படுத்தினார்கள்.
    • இன்று கிராமங்களில் கூட பெண்கள் ஆடி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மஞ்சள் தேய்த்து நீராடுவது மிக, மிக குறைந்து விட்டது.

    ஆடி மாதம் பெரும்பாலான பெண்கள் மஞ்சள் முகத்துடன் வலம் வருவதைப் பார்க்க முடியும்.

    மஞ்சளுக்கு கிருமிகளை அழிக்கும் சக்தி உண்டு.

    எவ்வளவு பெரிய கிருமியையும் மஞ்சள் மிக, மிக எளிதாக அழித்து விடும்.

    தற்போது உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரசை மிக, மிக எளிதாக அழிக்கும் சக்தி மஞ்சளில் இருப்பதை உலக சுகாதார அமைப்பே ஏற்றுக் கொண்டுள்ளது.

    மஞ்சள் கலந்த உணவுப் பொருட்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் கொரோனாவை மிக எளிதாக விரட்டலாம்.

    குறிப்பாக பசும் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பது நோய் எதிர்ப்பு ஆற்றலை கணிசமான அளவுக்கு உயர்த்தும்.

    மஞ்சளின் அருமையை புரிந்து கொண்ட நமது முன்னோர்கள் 'ஆடிச் செவ்வாய் தேடிக் குளி, அரைத்த மஞ்சளைப் பூசிக் குளி' என்று பழமொழி சொல்லி வைத்துள்ளனர்.

    ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் அதிகாலையில், புனித நதிகளில் மஞ்சள் தேய்த்து குளித்து மாரி அம்மனை வழிபட வேண்டும் என்ற மரபை உணர்த்தி உள்ளனர்.

    அது மட்டுமா... ஏழை எளிய பெண்களுக்கு மஞ்சளை தானமாக கொடுங்கள் என்ற நல்ல பழக்கத்தையும் ஏற்படுத்தினார்கள்.

    இன்று கிராமங்களில் கூட பெண்கள் ஆடி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மஞ்சள் தேய்த்து நீராடுவது மிக, மிக குறைந்து விட்டது.

    பாத்ரூம் பக்கெட்டில் நாலு தடவை ஊற்றுவதோடு குளியல் முடிந்து விடுகிறது.

    நம் முன்னோர்கள் சொல்லியபடி அரைத்த மஞ்சளை பூசி குளிக்க வேண்டும், இது தற்போதைய கொரோனா பரவல் காலத்தில் வைரஸ்களிடம் இருந்து பெண்களை நிச்சயம் பாதுகாக்கும்.

    • அப்படியே கிருமிகள் வந்தாலும் அவற்றை தடுத்து நிறுத்தும் ஆற்றல் வேப்பிலைக்கு உண்டு.
    • இதை கருத்தில் கொண்டு தான் ஆலய விழாக்களில் வேப்பிலைக்கு பிரதான இடம் கொடுத்தனர்.

    வேப்பிலை இருக்கும் இடத்தில் கிருமிகள் வராது.

    அப்படியே கிருமிகள் வந்தாலும் அவற்றை தடுத்து நிறுத்தும் ஆற்றல் வேப்பிலைக்கு உண்டு.

    இதை கருத்தில் கொண்டு தான் ஆலய விழாக்களில் வேப்பிலைக்கு பிரதான இடம் கொடுத்தனர்.

    வீட்டு வாசலில் வேப்பிலை சொருகி வைப்பதை கடை பிடித்தனர்.

    ஒரு கொத்து வேப்பிலை இருந்தால் போதும் அம்மன் நம் அருகில் பாதுகாப்பாக இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தினார்கள்.

    இதனால் தான் ஆடி மாத கொண்டாட்டங்களில் வேப்பிலை பிரிக்க முடியாத ஒன்றாக இரண்டர கலந்து விட்டது.

    • வேப்பிலை, மஞ்சள், எலுமிச்சை மூன்றும் முக்கியம்
    • இந்த மூன்றும் ஆடி மாத காற்றில் வரும் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டவை.

    ஆடி மாதம் பருவகால நிலைகளில் மாற்றம் உண்டாகும்.

    இதன் காரணமாக ஆடி மாதம் காற்றின் வேகம் அளவுக்கு அதிகமாக இருக்கும்.

    ஆடி காற்றில் அம்மியே பறக்கும் என்பார்கள்.

    காற்று மிக வேகமாக வீசும் காரணத்தால் அதில் உள்ள கிருமிகளும் மிக வேகமாக மக்களிடையே பரவும்.

    இதை அறிந்த நமது முன்னோர்கள் ஆடி மாதம் காற்றில் பரவும் கிருமிகளிடம் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள ஆன்மிகத்துடன் இணைந்து சில பழக்க வழக்கங்களை உருவாக்கி கடைபிடித்தனர்.

    ஆடி காற்றில் வரும் கிருமிகள் உடலில் புகுந்து விட்டால் நோய் தாக்கம் ஏற்படுவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து விடும்.

    இதை கருத்தில் கொண்டு நமது முன்னோர்கள் ஆடி மாதம் முழுவதும் வேப்பிலை, மஞ்சள், எலுமிச்சை ஆகிய மூன்றையும் பயன்படுத்தும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

    வேப்பிலை, மஞ்சள், எலுமிச்சை மூன்றும் முக்கியம்

    இந்த மூன்றும் ஆடி மாத காற்றில் வரும் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டவை.

    எனவே இதன் முக்கியத்துவத்தை மக்கள் மனதில் ஆழமாக பதிய செய்வற்காக ஆடி மாத அம்மன் வழிபாட்டுக்குள் இவற்றை கொண்டு வந்தனர்.

    • சிவனிடம் இருந்து சக்தியை ஒரு போதும் பிரிக்க முடியாது. உலகமே சிவசக்தி மயமாக உள்ளது.
    • எனவே ஆலயங்களிலும் வீடுகளிலும் அம்பிகையை பராசக்தியாக போற்றி அவசியம் வழிபட வேண்டும்.

    ஆடி மாதம் வந்து விட்டது. ஆடி மாதம் முழுவதும் தமிழ்நாட்டில் அம்மன் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறும்.

    அம்மன் வீற்றிருக்கும் தலங்களில் விதம், விதமான வழிபாடுகள் நடத்தப்படும்.

    எங்கு பார்த்தாலும் "ஓம் சக்தி... பராசக்தி" என்ற கோஷம் ஆத்மார்த்தமாக, அருள் அலையாக பரவி நிற்கும்.

    சக்தி வழிபாடு என்பது மிக, மிக தொன்மையானது. ஆதி காலத்தில் இந்த வழிபாட்டை 'தாய்மை வழிபாடு" என்றே கூறினார்கள்.

    உலகின் முதல் வழிபாடாக சக்தி வழிபாடு கருதப்படுகிறது. சதாசிவன், மகேஸ்வரன், ருத்ரன், விஷ்ணு, பிரம்மா ஆகிய 5 பேரை தனது அம்சமாக உருவாக்கிய அன்னை, பிறகு "ஹ்ரீம்" எனும் பீஜத்தில் எழுந்தருளியதாக திருமூலர் கூறியுள்ளார்.

    "ஹ்ரீம்" என்ற மந்திரம் ஓம் எனும் பிரணவ மந்திரம் போல சிறப்பு வாய்ந்தது.

    "ஹ்ரீம்" என்ற பீஜ மந்திரத்தை மனதில் இருத்தி, மனதை அலைபாய விடாமல், ஒருமுகப்படுத்தி படித்தால், முக்காலமும் உணர்ந்து மரணத்தை வென்று மகத்தான வாழ்வை பெற முடியும் என்று திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.

    அம்பிகையைச் சரண் அடைந்தால் அதிக வரம் பெறலாம் என்பது மகாகவி பாரதியாரின் வாக்கு. "முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே" என்கிறார் அபிராமிபட்டார். கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் தருபவள் சக்தியே.

    சிவனிடம் இருந்து சக்தியை ஒரு போதும் பிரிக்க முடியாது. உலகமே சிவசக்தி மயமாக உள்ளது.

    எனவே ஆலயங்களிலும் வீடுகளிலும் அம்பிகையை பராசக்தியாக போற்றி அவசியம் வழிபட வேண்டும்.

    வீட்டில் தினமும் காலை, மாலை இரு வேளையும் விளக்கேற்றி வைத்து செம்பருத்தி, அரளி ஆகிய மலர்களால் அர்ச்சித்து வழிபடலாம்.

    குறிப்பாக செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் அம்பிகையை பூஜிக்க மிகவும் ஏற்ற தினங்களாகும்.

    அதிலும் முறைப்படி, பயபக்தியுடன் அன்னையை வழிபட்டால் நிறைய பலன்களைப் பெறலாம்.

    • கண்ணுக்குத் தெரியாத எதிரியையும் துவம்சம் செய்யக்கூடியவள்.
    • இவளை வழிபட தடைகள் மற்றும் துன்பங்கள் அகலும். திருமணத்தடை அகலும்.

    கன்னி தெய்வ வழிபாட்டின் மகத்துவத்தை புராண வரலாறுகள் சப்த கன்னிகள் வழிபாட்டின் வாயிலாகவும் நமக்கு உணர்த்துகிறது.

    பூலோக வாசிகளின் கவலைகளை தீர்க்கவே அவதரித்தவர்கள் சப்த கன்னிகள்.

    சந்தோஷம் நிலைக்கச் செய்யும் இவர்கள் பராசக்தியின் அம்சங்களாக, அவளிடமிருந்து தோன்றியவர்கள். இந்த சப்த கன்னிகள் என்னும் ஏழு பேரின் தோற்றத்தை புராண வரலாறுகள் இரண்டு சம்பவங்களாக கூறுகிறது. புராண வரலாற்றில் இருவேறு விதங்களில் சப்த கன்னிகளின் தோற்றம் பற்றி விவரித்துள்ளனர்.

    முதல் வரலாறாக மனித கருவில் பிறக்காத வலிமையற்ற பெண்களால் தங்கள் மரணம் நிகழவேண்டுமென்ற வரம் பெற்ற அசுரர்களின் ஆணவத்தை அழிக்க பராசக்தியின் சொரூபமாக உருவாக்கப்பட்டவர்கள் சப்த கன்னிகள்.

    இரண்டாவது வரலாறாக, அந்தகாசுரன் எனும் அசுரனுடன் சிவபெருமான் போரிட்டார். காயம்பட்ட அந்தகாசுரனின் உடலில் இருந்து வெளிப்பட்ட ரத்தத்தில் இருந்து அவன் பெற்ற வரத்தின்படி பல்லாயிரக்கணக்கான அசுரர்கள் தோன்றினர்.

    அவர்களை அழிக்கும் பொருட்டு சிவன் தன் வாய் அக்னியில் இருந்து யோகேஸ்வரி எனும் சக்தியையும் வெளிப்படுத்தினார். யோகேஸ்வரி மகேஸ்வரியை உருவாக்கினாள்.

    அந்த மகேஸ்வரிக்குத் துணையாக பிரம்மா பிரம்மியையும், விஷ்ணு வைஷ்ணவியையும் இந்திரன் இந்திராணியையும், முருகன் கவுமாரியையும், வராகமூர்த்தி வராகியையும், எமன் சாமுண்டியையும் தோற்றுவித்ததாக புராணங்கள் கூறுகின்றன.

    மகேஸ்வரி, பிராம்மி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னிகை களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

    மகேஸ்வரி: பரமேஸ்வரனின் அம்சமானவள். இவள் சிவனைப் போன்ற தோற்றத்தைக் கொண்டவள். சாந்த சொருபிணி- கோபம் மற்றும் உடலின் பித்தத்தை நீக்கி சுகம் தருபவள்.

    பிரம்மி: சரஸ்வதியின் அம்சமாக பிரம்மனிடம் இருந்து தோன்றியவள். இவள் கல்வி மற்றும் கலைகளில் தேர்ச்சி பெற வைப்பவள். சிந்தித்து செயல்படும் மூளையின் திறனை அதிகரித்து வெற்றியைத் தருபவள். தோல் நோய் இருப்பவர்கள் இவளை வழிபட்டால் நல்ல குணம் தெரியும்.

    கவுமாரி: முருகனின் அம்சமான இவள் சஷ்டி என்றும், தேவசேனா என்றும் அழைக்கப்படுபவள். குழந்தைப் பேறு அருள்பவள்.

    செவ்வாய் தோஷம் அகலவும், வீடு, மனை வாங்க விற்க எற்படும் பிரச்சினைகளுக்கு இவளை வழிபடலாம். உடல், உஷ்ணம் தொடர்பான பிரச்சினைகள் அகலும்.

    வைஷ்ணவி: நாராயணி எனப்படும் இவள் திருமாலின் அம்சம். திருமாலின் வடிவில் சங்கு, சக்கரம் ஏந்தி காட்சி தருபவள். வறுமையை விரட்டுவதில் வல்லவள்.

    வராகி: சிவன், விஷ்ணு, சக்தி ஆகிய மூவரின் அம்சமும் கொண்ட இவள், வராக மூர்த்தியின் அம்சமாக தோன்றியவள். பெரும் வலிமையை பெற்றவள்.

    கண்ணுக்குத் தெரியாத எதிரியையும் துவம்சம் செய்யக்கூடியவள். இவளை வழிபட தடைகள் மற்றும் துன்பங்கள் அகலும். திருமணத்தடை அகலும்.

    இந்திராணி: மகாலட்சுமியை போன்ற அழகானவள். செல்வச் செழிப்பை தரும் இவளை வழிபட கடன் பிரச்சினைகள் தீரும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். இழந்த வேலையை திரும்ப பெறலாம்.

    அல்லது புதிய வேலை கிடைக்கும்.

    சாமுண்டி: வீரத்திற்கு அதிபதியான இவளை மனதில் நினைத்து வணங்கினாலே யானை பலம் கிட்டும்.தீய சக்திகள் அண்டாது. நரம்பு தொடர்பான பிரச்சினைகள் அகலும். குழந்தை பாக்கியம் கிட்டும்.

    கன்னி வழிபாடு நடத்தும் வழக்கம் இல்லாத குடும்பத்தினர் அசுரர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்ட உருவெடுத்த சப்த கன்னிகளை ஆடி மாதத்தில் வணங்கும்போது காலத்தால் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும்.

    பெரும்பாலும் எல்லா சிவன் கோவில்களிலும் சப்த கன்னிகளுக்கு தனி இடம் உண்டு.

    • வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம், பித்ரு பூஜை செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும்.
    • இதனால் முன்னோர்களின் ஆசி கிட்டுவதுடன் வீட்டில் தீய சக்தி இருந்தால் அது விலகி ஓடும்.

    ஆடி அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம் என்பது அனைவருக்கும் தெரியும்.

    தட்சிணாயண காலத்தில் வரும் ஆடி அமாவாசை, முன்னோர் வழிபாட்டிற்கு முக்கியமான நாள்.ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கிறார்.கடகம், சந்திரனின் ஆட்சிபெற்ற வீடு. சூரியன் சிவ அம்சம், ஆடி அமாவாசையின் போது சிவ அம்சமான சூரியன், சக்தி அம்சமான சந்திரனுடன் ஒன்று சேர்வதால் சந்திரனின் ஆட்சி பலமடைகிறது.

    ஆகவேதான், ஆடி அமாவாசை வழிபாட்டுக்கு உகந்த நாளாகக் கூறப்பட்டுள்ளது. ஆடி அமாவாசையன்று ஏற்படும் மாறுதல்களால் கடல்நீரில் ஓர் புதிய சக்தி ஏற்படுகிறது. எனவே அன்று புனித தலங்களில் கடலில், நீர் நிலைகளில் நீராடுவது உடல்நலத்திற்கு வளம் தரும். மேலும் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம், பித்ரு பூஜை செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும்.

    அன்று நீர் நிலையில் பித்ருகள்பூஜை செய்து வேதவிற்பன்ன ருக்குரிய சன்மானம் அளித்தபின், அன்னதானம் செய்வதும், மாற்றுதிறனாளிக்கு வசதிக்கேற்ப ஆடை தானம் வழங்குவதும் முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

    அதன் பின் வீட்டிற்கு வந்து முன்னோர்களின் படங்கள் முன் தலைவாழை இலையில் பலவிதமான காய்கறிகளை சமைத்து வடை, பாயாசத்துடன் படையல் போட்டு வழிபட வேண்டும். அவரவர் குல வழக்கப்படி இந்தப் பூஜையை மேற்கொள்ள வேண்டும்.

    இதனால் முன்னோர்களின் ஆசி கிட்டுவதுடன் வீட்டில் தீய சக்தி இருந்தால் அது விலகி ஓடும். அமாவாசை நாட்களில் பித்ருக்கள் பூஜையை முறையாகச் செய்யாத குடும்பத்தில் குழப்பம், சண்டை, வியாதி, வம்ச விருத்தி இன்மை போன்றவை ஏற்படும்.

    முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை அன்று சிரார்த்தம், தர்ப்பணம் போன்றவற்றை செய்பவர்களுக்கு நீண்ட ஆயுள், ஆரோக்கியம், கடன்நிவர்த்தி, வம்ச விருத்தி ஏற்படும்.

    ×