search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aalamaram"

    ஆலமரமானது காற்றில் நஞ்சுப் பொருள் கலந்திருந்தாலோ, அல்லது சுற்றுப்புறச் சூழல் மாசுபட்டிருந்தாலோ, கழிவுநீர்களில் நஞ்சு காற்றில் கலந்திருந்தாலோ நஞ்சுத்தன்மையின் நஞ்சு நீக்கி உயிர் காற்றை வெளியாக்க வல்லது.
    ஆலமரமானது காற்றில் நஞ்சுப் பொருள் கலந்திருந்தாலோ, அல்லது சுற்றுப்புறச் சூழல் மாசுபட்டிருந்தாலோ, கழிவுநீர்களில் நஞ்சு காற்றில் கலந்திருந்தாலோ நஞ்சுத்தன்மையின் நஞ்சு நீக்கி உயிர் காற்றை வெளியாக்க வல்லது. இந்த ஆலமரமானது சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் வரை படர்ந்து இருக்கும். இதன் விழுதுகள் தாய் மரமானது சில காலத்தில் அழிந்து விட்டாலும் கூட விழுதுகள் வேரூன்றி படர்ந்து வளரும். ஒரு மரம் சாலையின் அருகில் வைத்து விட்டால் படர்ந்து வளர்வது இம்மரம் என்பதாலும் இந்த ஆலமரத்தில் நஞ்சு நீக்கும் தன்மை அதிகமாக உள்ளதால் இந்த மரம் சாலை ஓரங்களிலும், கிராம எல்லைகளிலும், நகர எல்லைகளிலும் வைக்கப்படுகிறது.

    இம்மரத்தின் ஆயுள் 5ஆயிரம் ஆண்டுகள் ஆகும். இம்மரம் நிழலுக்காக மட்டும் என்பதில்லை. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு வாகனங்கள் இல்லாதபோது சாலை ஓரங்களில் ஆல மரக்கன்றுகளை ஏன் வளர்த்து வந்தார்கள் என்று கேள்வி எழலாம். அந்த காலத்தில் சாலையில் செல்லக் கூடிய ஆடு, மாடு, குதிரை, பன்றி, யானை, கழுதை ஆகியவற்றின் சாணம், கோமியம் சாலையில் கிடக்கும். சாணி சூரியசக்தியை இழுத்து கிருமிகளை அழிக்கும். அப்போது அந்த நஞ்சுக்காற்றை உறிஞ்சி உயிர்காற்றை கொடுப்பது ஆலமரம்.

    சுமைதாங்கி கல்லும், அதன் அருகில் படுக்கை கல்லும், தண்ணீர் தொட்டியும், நடைபாதை கிணறும் ஆல மரத்தின் அடியிலேயே இருக்கும். நடைபாதை கிணறு என்பது கீழே இருக்கும் தண்ணீர் வரை நடந்தே சென்று ஆடு, மாடு, குதிரை, யானை ஆகியவை கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் குடித்துவிட்டு வரும் அளவிற்கு கட்டப்பட்டுள்ள கிணறு நடைபாதை கிணறு என்று பெயர். இது நாளடைவில் வழக்கு பெயராக நடப்பாகிணறு என்று பெயர் மருவியது. இந்த கிணற்றில் போர் முனைக்குச் செல்லும் காலாட்படை, குதிரைப்படை ஆகியவை தண்ணீர் குடித்துவிட்டு ஓய்வு எடுக்கும் இடம் இந்த ஆலமரத்தின் கீழ் ஆகும்.

    சுமைதாங்கி கல்லை அதன் அருகில் படுக்க போட்டிருப்பது ஆலமரத்தின் அடியில் மட்டுமே. ஏனென்றால் வழிப்போக்கர்கள் சுமைதாங்கி கல் மீது பாரத்தை வைத்து விட்டு சிறிது நேரம் அங்கே அமரும்போது உடலில் உள்ள வலியை போக்க உயிர் காற்றை தரும். இதனால் ஏற்கனவே நடந்து வந்த தூரத்தில் இருமடங்கு தூரத்தை மீண்டும் கடக்க உடல் வலிமையையும் ஆரோக்கியத்தையும் தருகிறது.

    அவர்கள் கொண்டுவரும் சுமை காயாகவோ, ஈர விறகாகவோ இருந்தால் அதில் உள்ள நச்சுக்காற்றை பிரித்து உயிர்காற்றை தருவதால் மீண்டும் சுமையை எடுத்துச்செல்லும்போது அதன் பளு குறைவாக இருக்கும். சுமைதாங்கி கல்லும், படுக்கைக் கல்லும் கருங்கல்லாகத்தான் வைப்பார்கள், காரணம் ஆலமரம் வெளியிடும் உயிர் காற்றை இழுத்து வைக்கும் குணம் கருங்கல்லுக்கு மட்டுமே உண்டு. இதைத்தான் “காலைக்கல்லும் மாலைப்புல்லும் ஆளை வெல்லும்” என்று சொல்லப்பட்டது இதுவே ஆகும்.

    மாடு கன்று போடும் போது வெளியாகும் பனிக்குடம், நச்சுக்கொடி, பிள்ளைக்கொடி ஆகியவை கன்று போட்டு மூன்று மணி நேரம் கழித்து வெளியாகும் அவைகளை கோணிப்பையில் (சாக்குப்பை) போட்டு ஆலமரத்தில் கட்டியிருப்பதை நாம் நாடு முழுவதிலும் பார்த்து இருக்கிறோம். இதை உடுப்பு என்பார்கள். எத்தனையோ மரங்கள் இருக்கும் போது, ஆலமரத்தில் மட்டும் கட்டுவதற்கு காரணம் காற்றில் நிலவும் நச்சுக் காற்றையும் அதன் துர்வாடையும் வெளியே போகாமல் அந்த நச்சுக்காற்றை சுத்தம் செய்வது ஆலமரமே என்பதால் இம்மரத்தில் கட்டப்படுகிறது. மேலும் இந்த நச்சு காற்றினால் மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்கிறது. இதையே மற்ற மரங்களில் கட்டினால் அன்றே நாற்றம் வீசி நச்சுக் காற்று பரவி நோயை உருவாக்கும். அது மனிதன் முதல் விலங்குகள் வரை பரவும்.

    ஆலமரத்தில் கட்டும் உடுப்பு எக்காலத்திலும் நாற்றம் வீசுவது இல்லை. இதை மண்ணில் புதைத்தால் அந்த மண் கெட்டுப்போவதுடன் நோய்கிருமிகளை உருவாக்கி உயிர்காற்றை அழித்து நச்சுக்குரிய நோயை(ஒவ்வாமை என்கிற அலர்ஜி) உருவாக்கும். இந்த ஆலமரத்தின் பொது குணம் துவர்ப்பும், கார்ப்பும் அதிகம் பொருந்திய மரம். துவர்ப்பு சத்து மலம், நீர், கரு, கர்ப்பப்பை மாசு ஆகியவற்றை வெளியேற்றும் தன்மை உடையது.

    கார்ப்பு சத்து சுவாசப்பை (நுரையீரல்) ரத்தத்தில் உள்ள நச்சுப்பொருளை நீக்கி ரத்தத்திற்கு போஷாக்கை கொடுக்கும். இதன் விதை ஆண்களுக்கான கல்ப லேகியங்கள் அனைத்திலும் ஆலம் விதை இடம்பெறும். ஆலமரத்தில் நீண்டு தொங்கும் விழுதுகள் அதன் நுனிப்பகுதியில் ஒரு அடி அளவு வெட்டி எடுத்து வெயிலில் காயவைத்து இடித்து பொடி செய்து இரவில் நூறு மில்லி தண்ணீரில் அரை தேக்கரண்டி தூளை கலக்கி வைத்துவிட்டு காலையில் வடிகட்டி வெறும் வயிற்றில் ஒரு அவுன்ஸ் குடிக்கவேண்டும்.

    இப்படி 21 நாள் அல்லது 48 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் கர்ப்பப் பையில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் சமப்பட்டு உடல் ஆரோக்கியத்தை உண்டு செய்யும். இது உடல் பெருக்கும் தன்மையும் உள்ளது. வயிற்றில் வரும் எட்டு விதமான புண்களுக்கு தயாரிக்கப்படும் மருந்துகளில் இதனுடைய பட்டை பயன்படுகிறது. ஆலம்பாலை வெள்ளை துணியில் நனைத்து காயவைத்து கொளுத்தி சாம்பலாக்கி அந்த சாம்பலை பலநாட்கள் ஆறாத ரணங்களுக்கு தேங்காய் எண்ணெயில் அல்லது வெண்ணெயில் குழைத்து போட்டால் ஆறிவிடும்.

    மரத்தை கல்லால் குத்தி அதில் வரும் பாலை வாய்ப்புண், அச்சரம் போன்றவற்றிற்கு தடவினால் குணமாகும். ஆலம் இலை, கொழுந்து ஆகியவை லேகியங்களுக்கு பயன்படும். ஆலமரத்தின் விழுதில் பல்துலக்க பல் கெட்டிப்படும். இதைத்தான் “ஆலும் வேலும் பல்லுக்குறுதி” என்பார்கள். பல் மட்டுமல்ல உடலிலுள்ள அனைத்து அவயங்களுக்கும் இந்த ஆலமரம் உதவுகிறது.

    பாஸ்கரன், சித்த மருத்துவர், வேலூர்.
    ×