search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aanmiga kalanjiyam"

    • அண்ணன், தம்பிகளில் சிலருக்கு தர்ப்பணம் கொடுக்க வசதி-வாய்ப்பு இல்லாமல் இருக்கலாம்.
    • ஒன்றிணைந்து கொடுக்கும் தர்ப்பணம், சிரார்த்தத்துக்கு சக்தி அதிகம்.

    உலகம் நவீனமாக மாற, மாற அன்பும், அரவணைப்பும் குறைந்து வருகிறது. ஒரு காலத்தில் அண்ணன்-தம்பி என்றால் அப்படி ஒரு அன்யோன்யமாக இருப்பார்கள்.

    ஆனால் இப்போதெல்லாம் அண்ணன்&தம்பி பாசம் என்பது அளவு எடுத்தது போல ஆகி விட்டது. பொது இடங்களில் கூட கடமைக்காக சிலர் அண்ணன் தம்பியாக வந்து நிற்பார்கள்.

    இத்தகைய நிலையில் பெற்றோருக்கு செய்யும் பித்ரு தர்ப்பண, சிரார்த்தங்களை அண்ணன்-தம்பிகள் தனித்தனியாக செய்யலாமா? அல்லது ஒன்றாக நின்றுதான் செய்ய வேண்டுமா என்ற சந்தேகம் ஏற்படலாம்.

    அண்ணன்-தம்பிகள் தனித்தனியாக சிராத்தம், தர்ப்பணம் போன்ற பித்ரு கடமைகளை செய்யலாம். அண்ணன், தம்பிகளில் சிலருக்கு தர்ப்பணம் கொடுக்க வசதி-வாய்ப்பு இல்லாமல் இருக்கலாம்.

    அப்படிப்பட்டவர்கள் யாராவது ஒரு சகோதரருடன் சேர்ந்து கொண்டு அவர் கொடுக்கும் தர்ப்பண பூஜைகளில் கலந்து கொண்டு பலன் பெறலாம். பொதுவாகவே அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக இருந்தால்தான் பலம். அவர்கள் ஒன்றிணைந்து கொடுக்கும் தர்ப்பணம், சிரார்த்தத்துக்கு சக்தி அதிகம்.

    பிள்ளைகள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்றாக நின்று நம்மை நினைத்து வழிபடுகிறார்கள் என்பதைப் பார்க்கும் போது பித்ருக்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி உண்டாகும். அந்த மகிழ்ச்சியில் அளவற்ற பலன்களை நமக்கு தந்து அருள்வார்கள்.

    • சிரார்த்த உணவு சாப்பிட்ட பிறகு நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடாது.
    • சிரார்த்த உணவை சாப்பிடும் போது கிழக்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட மறந்து விடக்கூடாது.

    1. பசும்பால்

    2. கங்கை போன்ற புனித நீர்

    3. தேன்

    4. வெள்ளை நிற பட்டுத்துணி

    5. நெய்

    6. பகல் 11.30 மணி முதல் 12.30 மணி வரையிலான சிரார்த்தத்துக்கு ஏற்ற குதா காலம்

    7. கறுப்பு எள்

    இந்த 7 முறைகளையும் பயன்படுத்தியே சிரார்த்தம் செய்யப்பட வேண்டும். சிரார்த்த உணவை, சிரார்த்தம் செய்பவரும், பேரன்-பேத்திகள் சாப்பிட்டால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.

    சிரார்த்த உணவு சாப்பிட்ட பிறகு நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடாது. அன்று முழுவதும் பித்ருக்கள் நினைவுடன் இருக்க வேண்டும்.

    முக்கியமாக அன்றிரவு தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளக் கூடாது.

    அது போல சிரார்த்த உணவை சாப்பிடும் போது கிழக்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட மறந்து விடக்கூடாது. 

    • ஆத்மாவாக இருந்து அவர்கள் தினம், தினம் நமக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
    • பசியையும், தாகத்தையும், ஏக்கத்தையும் தணிக்க வேண்டியது நம் கடமை அல்லவா?

    நம்மை பெற்றவர்கள், தாத்தாக்கள், பாட்டிகள் மற்றும் இதர முன்னோர்கள் மறைந்த பிறகு அவர்கள் தெய்வத்துக்கு சமமாக மாறி விடுகிறார்கள்.

    இந்த பிரபஞ்சத்தில் அவர்களுக்கு என்றே பித்ருலோகம் உள்ளது. மரணத்துக்கு பிறகு அங்கு சென்று விடும் நம் மூதாதையர்கள், பாவ-புண்ணியத்துக்கு ஏற்ப அங்கிருந்து கொண்டு நமக்கு அருளாசி வழங்கி வருகிறார்கள்.

    பொதுவாக பெற்றோர் மறைந்த பிறகு, பெரும்பாலனவர்கள் அவர்களை மறந்து விடுகிறார்கள். சிலர் 3-வது நாள் விசேஷம், 16வது நாள் காரியம் என்று செய்த பிறகு கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறார்கள்.

    பிறகு ஆண்டுக்கு ஒரு தடவை, அவர்கள் இறந்த நாளில், அவர்கள் விரும்பி சாப்பிடும் உணவை சமைத்து அவர்களுக்கு படையல் போட்டு கும்பிடுவார்கள்.

    அப்புறம் ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் போட்டோவுக்கு மாலைப் போட்டு கும்பிட்டு விட்டு திருப்திப்பட்டுக் கொள்வார்கள். நாளடைவில் அந்த வழிபாடும் சுரத்து இல்லாம் போய்விடுவதுண்டு.

    அதன்பிறகு அவர்களுக்கு முன்னோர் வழிபாடு என்பது ஏதோ வருடத்துக்கு ஒரு தடவை வரும் கோவில் கொடை விழா மாதிரி ஆகிவிடும்.

    உயிரோடு இருந்த போது காணப்பட்ட பந்தம், பாசம் எல்லாம் காற்றில் கரைந்து காணாமலே போய் இருக்கும். சிலர் ஏதோ உறவே அத்து போய்விட்டது போல நடந்து கொள்வார்கள்.

    ஆனால் கண்கண்ட தெய்வங்களான நம் முன்னோர்கள் நம்மை அப்படி விட்டு விடுவது இல்லை. ஆத்மாவாக இருந்து அவர்கள் தினம், தினம் நமக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

    நீங்கள் அவர்களை கும்பிட்டாலும் சரி, கும்பிடா விட்டாலும் சரி, நினைத்தாலும் சரி, நினைக்கா விட்டாலும் சரி, அவர்கள் உங்களுக்கு உதவிகள் செய்யத் தவறுவதே இல்லை.

    உங்களை, உங்கள் அருகில் இருந்து அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கர்ம வினைகளுக்கு ஏற்ப உங்களுக்கு நல்லது செய்கிறார்கள்.

    உங்களுக்கு வரும் கெடுதல்களை அவர்கள்தான் தடுத்து நிறுத்துகிறார்கள். அந்த புண்ணிய ஆத்மாக்களின் இந்த புனித செயலால்தான், அவர்களது குடும்பம் இந்த பூ உலகில் தழைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.

    சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ஒரு குடும்பத்தையும், அதை சார்ந்துள்ள குலத்தையும் காப்பது மறைந்த முன்னோர்கள்தான்.

    நாம் கும்பிடாமலே நம் பித்ருக்கள் நமக்கு உதவிகள் செய்கிறார்கள் என்றால், நாம் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சிரார்த்தம் செய்து வணங்கினால் நம்மை எந்த அளவுக்கு அவர்கள் காப்பார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை.

    எவன் ஒருவன் தன் முன்னோருக்கு அமாவாசை தோறும் தர்ப்பணம் கொடுக்கிறானோ, அவனது குடும்பம் அமைதி பெற்று உயரிய நிலைக்கு சென்று கொண்டே இருக்கும்.

    சாஸ்திர விதிப்படி ஒருவன், மறைந்த தன் மூதாதையர்களுக்கு ஆண்டுக்கு 96 நாட்கள் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ஆனால் எல்லாராலும் 96 நாட்கள் தர்ப்பணம் செய்ய முடிவதில்லை.

    என்றாலும் முன்னோர்கள் இறந்த திதி நாளை கணக்கிட்டு பெரும்பாலனவர்கள் திதி கொடுத்து விடுகிறார்கள். அப்புறம் ஆடி அமாவாசை, தை அமாவாசையில் தவறாமல் தர்ப்பணம் செய்து விடுவார்கள்.

    இப்படி எதுவுமே செய்யாமல், அதாவது திதி, தர்ப்பணம், சிரார்த்தம் என்று எதுவுமே செய்யாமல் கணிசமானவர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

    ஏனெனில் அத்தகையவர்களுக்காகவே மகாளய பட்சகாலம் உள்ளது. புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள் தொடங்கி அமாவாசை வரையிலான 15 நாட்களே மகாளயபட்ச நாட்களாகும்.

    ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் மற்ற மாத அமாவாசை நாட்களை விட, இந்த மகாளய அமாவாசை மிக, மிக சிறப்பு வாய்ந்ததாகும். இன்னும் சொல்லப் போனால் எந்த அமாவாசையும் இதற்கு நிகரே கிடையாது.

    ஏன் தெரியுமா?

    மகாளய பட்சத்தின் 15 நாட்களும் பித்ருக்கள் அனைவரும் வான் உலகில் இருந்து, தம் குடும்பத்தாரைத் தேடி பூமிக்கு வந்து விடுவார்கள். இந்த 15 நாட்களும் அவர்கள் நம் வீட்டில்தான் இருப்பார்கள்.

    நமக்கு சாப்பாடு தர மாட்டார்களா? தாகம் தீர தண்ணீர் தர மாட்டார்களா? நல்ல உடை தரமாட்டார்களா? என்று ஏக்கத்தோடு நம்மைப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.

    நம்மை ஆசை, ஆசையாக வளர்த்து, நல்ல நிலைக்கு ஆளாக்கி விட்ட மறைந்த அந்த முன்னோர்களை நாம் அப்படி தவிக்க விடலாமா?

    அவர்களை பார்க்க வைத்து விட்டு, நாம் மட்டும் வகை, வகையாக சாப்பிட்டால், அது நியாயமா?

    அவர்களது பசியையும், தாகத்தையும், ஏக்கத்தையும் தணிக்க வேண்டியது நம் கடமை அல்லவா?

    பெத்த அம்மாவும், அப்பாவும் நாம் ஏதாவது தர மாட்டோமா என்று காத்துக் கொண்டிருக்கும் போது, அவர்களை அப்படியே விட்டு விட்டால் அவர்கள் மனம் என்ன பாடுபடும்.

    அவர்கள் மீண்டும் நம் வீட்டில் இருந்து, 15 நாள் மகாளய அமாவாசை தினம் முடிந்த பிறகு பித்ருலோகத்துக்கு போகும் போது, பசியும் பட்டினியுமாக செல்ல நேரிட்டால் அவர்கள் வேதனையின் உச்சத்தில் இருப்பார்கள்.

    நம்ம மகன், மகள் நம்மை கவனிக்கவே இல்லையே என்று கோபத்தில் சாபம் கூட கொடுக்க வாய்ப்புள்ளது. இதுதான் பாவமாகவும், தோஷமாகவும் மாறிவிடும்.

    இத்தகைய நிலை ஏற்பட விடலாமா? விடக் கூடாது.

    அதற்கு நாம் மகாளய பட்சம் 15 நாட்களும் மகாளய அமாவாசை தினத்தன்றும் கண்டிப்பாக மறைந்த நம் முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும். உரிய நாளில், உரிய வகையில் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

    முக்கியமாக மகளாய ப ட்ச நாளில் அத்தியாவசியப் பொருட்களை தானம் கொடுக்க வேண்டும். அன்னதானம் செய்ய வேண்டும்.

    நீங்கள் செய்யும் அன்னதானம் உங்கள் முன்னோர்களின் ஆத்மா பலத்தை அதிகரிக்க செய்யும் என்பதை மறந்து விடாதீர்கள்.

    இந்த தான-தர்மம் மூலம் மகிழ்ச்சி அடையும் உங்கள் முன்னோர்கள் மிகவும் திருப்தியுடன் உங்கள் வீட்டில் இருந்து பித்ருலோகத்துக்கு கிளம்பிச் செல்வார்கள். அவர்கள் மன நிறைவுடன் வாழ்த்த, வாழ்த்த உங்கள் வாழ்க்கையில் மேம்பாடு உண்டாகும்.

    15 நாட்கள் எப்படி சிறப்பானது? என்னென்ன வழிபாடு செய்ய வேண்டும்? அதனால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது போன்ற தகவல்களை இந்த இலவச தொகுப்பால் கொடுத்துள்ளோம்.

    படித்து, பயன்படுத்திப்பாருங்கள். நிச்சயம் உங்கள் வாழ்வில் மறுமலர்ச்சியும், மகிழ்ச்சியும் பூத்துக் குலுங்கும்.

    • உங்கள் முன்னோர்கள் எல்லாருமே பித்ருலோகத்தில் நல்ல நிலையில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.
    • நீங்கள் கொடுக்கும் தர்ப்பணம்தான் தாகம் தணிப்பதாக இருக்கும்.

    தர்ப்பணம் செய்ய வேண்டிய தினத்தன்று அதிகாலையில் எழுந்துவிட வேண்டும். குளித்து, சுத்தமான ஆடை அணிந்து மூதாதையர்களை நினைத்துக்கொண்டே தர்ப்பணம் செய்ய வேண்டும். காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுத்து விடுவது நல்லது.

    முடியாதவர்கள் காலையில் சீக்கிரம் தர்ப்பணத்தை முடித்து விடவேண்டும். ஏனெனில் நாம் கொடுக்கும் எள் கலந்த நீரை பித்ருக்கள் ஏற்றுக்கொள்ளும் நேரம் என்பது மிக, மிக புனிதமானது. எனவே நாம் அதில் கவனமாக இருக்க வேண்டும்.

    எந்த காரணத்தையும் கொண்டும் சூரியன் மறைந்த பிறகு தர்ப்பணம் செய்யக்கூடாது.

    நாம் தர்ப்பணம் செய்ததும் அதை பெற்றுக் கொள்ளும் ஸ்வதா தேவி கண் இமைக்கும் நேரத்துக்குள் அதை நம் பித்ருக்களிடம் ஒப்படைத்து விடுவாள். எனவே தர்ப்பணம் செய்யும் போது'ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி' என்று சொல்ல மறந்து விடக்கூடாது.

    பொதுவாக நம் வீட்டு பெரியவர்கள் இயற்கையாக மரணம் அடையும் போது, இறந்த நேரம், திதி ஆகியவற்றை ஒரு டைரியில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அந்த திதியில் தர்ப்பணம், சிதார்த்தம் உள்ளிட்டவைகளை செய்தல் வேண்டும்.

    பெரும்பாலனவர்கள் இந்த திதி தினத்தை முறையாக செய்வதில்லை. கணிசமானவர்களுக்கு அந்த திதி என்றாலே என்ன என்ற விவரம் கூட தெரியாமல் உள்ளது.

    ஆதிகாலத்தில் தமிழர்கள் 'நீத்தார் வழிபாடு' நடத்தி பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய எல்லா கடமைகளையும் செய்தனர். அதை செஞ்சோற்று கடனாக நினைத்தனர்.

    இப்போதும் பித்ருசாரியம் செய்கிறார்கள். ஆனால் அதை முறையாக, பித்ருக்கள் திருப்திபடும்படி செய்வதில்லை.

    அதனால்தான் குடும்பங்களில் மங்கள காரியங்கள் நடப்பது தடைபடுகிறது அல்லது தாமதமாகிறது. புத்திர சுகம் கிடைக்காமல் போய் விடுகிறது.

    எனவே நம் வம்சம் விளங்க வேண்டுமானால் நம்மை வளர்த்து ஆளாக்கிய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யப்பட வேண்டும்.

    அமாவாசை, மாதப்பிறப்பு, கிரகண நாட்களில் அவசியம் தர்ப்பணம் செய்தல் வேண்டும். முடியாதவர்கள் வரும் மகலாயபட்சத்தின் 15 நாட்களும் தர்ப்பண பூஜைகளை கட்டாயமாக செய்ய வேண்டும்.

    உங்கள் முன்னோர்கள் எல்லாருமே பித்ருலோகத்தில் நல்ல நிலையில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. சிலருக்கு அவர்கள் செய்த கர்ம வினைகள் தொடரக்கூடும். அப்படிப்பட்டவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் தர்ப்பணம்தான் தாகம் தணிப்பதாக இருக்கும்.

    தாத்தாவுக்கு அப்பா எல்லாம் மறுபிறவி எடுத்திருப்பார் எனவே அவருக்கு ஏன் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று சிலர் நினைக்கலாம். உங்கள் முன்னோர்கள் மறுபிறவி எடுத்திருந்தாலும் கூட நீங்கள் கொடுக்கும் தர்ப்பணம் அவர்களுக்கு பெரும்பலனை கொடுக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.

    எனவே நீங்கள் முன்னோர் வழிபாட்டை ஆழ்ந்த நம்பிக்கையுடன் செய்தல் வேண்டும். நீங்கள் வழிபாடு செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்தான் பித்ருலோகத்தில் இருந்து மகாளய பட்சத்தின் 15 நாட்களும் உங்களோடு இருக்க உங்கள் முன்னோர்கள், உங்கள் வீடு தேடி வருகிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

    • 96 நாட்களை விட தாய், தந்தையருக்கு சிரார்த்தம் செய்ய வேண்டிய திதி நாள்தான் ஒருவருக்கு மிக, மிக உயர்ந்தது
    • சிலருக்கு தங்கள் பெற்றோர் மரணம் அடைந்த தினத்துக்கான திதி தெரியாமல் இருக்கலாம்.

    ஒரு வருடத்தில் ஒருவர் தன் மறைந்த முன்னோர்களுக்காக 96 நாட்கள் சிரார்த்தம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த 96 நாட்கள் எவை-எவை என்ற விவரம் வருமாறு:-

    மாதபிறப்பு நாட்கள்-12

    மாத அமாவாசை-12

    மகாளபட்ச நாட்கள்-16

    யுகாதி நாட்கள்-4

    மன்வாதி நாட்கள்-14

    வியதீபாதம்-12

    வைத்ருதி-12

    அஷ்டகா-4

    அன்வஷ்டகா-4

    பூர்வேத்யு-4

    மொத்தம் 96

    இந்த 96 நாட்களை விட தாய், தந்தையருக்கு சிரார்த்தம் செய்ய வேண்டிய திதி நாள்தான் ஒருவருக்கு மிக, மிக உயர்ந்தது என்று ஆச்வலாயன மகரிஷி கூறி இருக்கிறார்.

    சிலருக்கு தங்கள் பெற்றோர் மரணம் அடைந்த தினத்துக்கான திதி தெரியாமல் இருக்கலாம். தர்ப்பணம் செய்து வைப்பவர்களிடம் கூறினால் அவர்கள் திதி விவரத்தை மிகச் சரியாக சொல்லி விடுவார்கள்.

    • பகவானை கண்டதும் ஹரிதாசர் தன் பணிவிடையை நிறுத்தவில்லை.
    • எந்த மாதம் சிரார்த்தம் செய்ய வேண்டியது உள்ளதோ அந்த மாதம் மற்ற சுப நிகழ்ச்சிகள் இல்லாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.

    பித்ரு வழிபாடு செய்யும் போது சிலருக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம்.

    கடவுளுக்கு முதலில் பூஜை, வழிபாடுகள் செய்ய வேண்டுமா? அல்லது நம் முன்னோர்களுக்கு முதலில் பூஜை செய்து வழிபட வேண்டுமா? என்பதே அது.

    முதலில் பித்ருக்களைதான் வணங்க வேண்டும். அதன் பிறகே தெய்வ வழிபாட்டில் ஈடுபட வேண்டும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

    இதற்கு ஒரு புராண உதாரணமும் இருக்கிறது.

    பகவான் பாண்டுரங்கன் ஒரு தடவை தன் பக்தன் ஹரிதாசரைப் பார்க்க சென்றார். அப்போது ஹரிதாசர் வயதான தன் பெற்றோருக்கு பணி விடைகள் செய்து கொண்டிருந்தார்.

    பகவானை கண்டதும் ஹரிதாசர் தன் பணிவிடையை நிறுத்தவில்லை. பகவானை பார்த்து, 'சிறிது நேரம் காத்திருங்கள் நான் என் பணி விடைகளை முடித்து விட்டு வருகிறேன்' என்று கூறி ஒரு செங்கலை சுட்டிக் காட்டினாராம்.

    உடனே பகவான் பாண்டுரங்கன் அந்த செங்கல் மீது ஏறி நின்று கொண்டார். ஹரிதாசர் பணி விடைகளை முடித்துவிட்டு வந்த பிறகு அவருக்கு பகவான் ஆசி வழங்கினாராம்.

    எனவே நம் வீட்டு பெரியவர்களுக்கே முதலில் மரியாதை கொடுக்க வேண்டும் என்பது இதன் மூலம் உறுதியாகிறது. பெற்ற தாய்-தந்தையை பட்டிப்போட்டு விட்டு கோவிலுக்கு சென்று அபிஷேகம், அன்னதானம் என்று செய்தால் ஒரு புண்ணியமும் கிடைக்காது என்பதை உணர வேண்டும்.

    ஆகையால் நீங்கள் எந்த மாதம் சிரார்த்தம் செய்ய வேண்டியது உள்ளதோ அந்த மாதம் மற்ற சுப நிகழ்ச்சிகள் இல்லாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். அதுபோல சிரார்த்தம் செய்யும் மாதங்களில் வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று சங்கல்பம் செய்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

    • அன்னதானம் பெற வரும் ஒவ்வொருவரையும் தங்களது முன்னோர்களாக கருத வேண்டும்.
    • மூதாதையர்களுக்கு பிடித்த உணவு வகைகளை அன்னதானத்துடன் சேர்த்து வினியோகம் செய்வார்கள்.

    மகாளய பட்சத்தின் மிக முக்கிய அம்சமே அன்னதானம் செய்ய வேண்டும் என்பது தான். அன்னதானத்தை கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து நின்று செய்தால் அதனால் அதிக பலன்கள் கிடைக்கும்.

    அன்னதானம் செய்யும் போது சாதி, மத குல வேறுபாடுகள் எதையும் பார்க்ககூடாது. அன்னதானம் பெற வரும் ஒவ்வொருவரையும் தங்களது முன்னோர்களாக கருத வேண்டும்.

    மேலும் ஏழைகளுக்கு அன்னத்தை தானம் செய்யும் போது, உங்கள் பித்ருக்களை மனதில் தியானம் செய்து கொண்டே மிக, மிக பணிவுடன் செய்ய வேண்டும். அன்னதானம் செய்கிறோம் என்ற அகந்தை மனதுக்குள் துளி அளவு கூட வந்து விடக்கூடாது.

    அதுவும் அன்னத்தை குடும்பத்து பெண்கள் தங்கள் கைப்பட சமைத்து வழங்கி இருந்தால், அந்த பெண்களுக்கு அபரிதமான பலன்கள் கிடைக்கும்.

    அன்னதானத்துடன் பித்ரு காரியங்களுக்கு உரியதாக கருதப்படும் எள் உருண்டை, அதிரசம், பணியாரம், தேன்குழல், உளுந்து வடை, தேங்காய்பால், பால்பழம், சுசீயம், மாவு உருண்டை மற்றும் இனிப்பு வகைகளையும் சேர்த்து கொடுக்கலாம். சிலர் தங்கள் மூதாதையர்களுக்கு பிடித்த உணவு வகைகளை அன்னதானத்துடன் சேர்த்து வினியோகம் செய்வார்கள்.

    இவையெல்லாம் பித்ருக்களை முழுமையான அளவில் திருப்திப்பட வைக்கும்.

    கர்ணன் தானம் செய்வதற்காகவே பிறந்தவன். யார் எதை கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் அவன் தானம் செய்ததாக மகாபாரத்தில் உள்ளது.

    ஆனால் துரதிஷ்டவசமான அவன் தன் வாழ்நாளில் அன்னதானம் செய்யவில்லை. அவன் மரணம் அடைந்ததும், அவன் மீது இரக்கப்பட்ட எமன், கர்ணா நீ பூலோகத்துக்கு மீண்டும் சென்று அன்னதானம், தர்ப்பணம், சிரார்த்தும் முதலியவற்றை செய்து விட்டு வா என்று அனுப்பினான். அதன்படி கர்ணன் பூமிக்கு வந்து அன்னதானம் செய்தார்.

    பூமியில் அவர் 14 நாட்கள் தங்கி இருந்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அந்த 14 நாட்கள் தான் மகாளய பட்ச தினங்களாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • சில கோவில்களும் பிதுர் பூஜை செய்ய உகந்ததாக சொல்லப்படுகின்றன.
    • வசதி படைத்தோர் அன்றைய தினம் அன்னதானம் செய்வதுடன் ஆடைதானமும் செய்வார்கள்.

    மகாளய அமாவாசை அன்று நீர்நிலைகளிலும், சில கோவில்களிலும் மறைந்த மூதாதையர்களுக்கும் உறவினர்களுக்கும் முறையாக பூஜை செய்து வழிபட்டால், எடுத்த காரியங்கள் நிறைவேறும். பிதுர்தோஷம் இருந்தால் நீங்கும்.

    பெற்றோருடன் வாழ்ந்த காலத்தில் அவர்களை சரியாக கவனிக்க முடியாதவர்கள்கூட பிதுர் பூஜை செய்து வழிபட்டால், மனச்சுமைகள் குறையும். பெற்ற பிள்ளைகளை எந்த சூழ்நிலையிலும் மன்னித்தே பழக்கப்பட்ட பெற்றோர், இந்த விஷயத்திலும் மன்னித்து அருள்புரிவார்கள்.

    காவிரிக்கரை, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை திருச்சி முக்கொம்பு, மயிலாடுதுறை நந்திக்கட்டம், பவானி முக்கூடல், உள்பட பல நீர்நிலைகளில் பக்தர்கள் அதிக அளவில் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்வார்கள். நதிக்கரைகள் மட்டுமின்றி, கடற்கரை ஸ்தலங்களான ராமேஸ்வரம், தனுஷ்கோடி , முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி, பூம்புகார், வேதாரண்யம், கோடியக்கரை ஆகிய கடற்கரைப் பகுதிகளும் பிதுர் பூஜைகளுக்கு ஏற்றவை.

    சில கோவில்களும் பிதுர் பூஜை செய்ய உகந்ததாக சொல்லப்படுகின்றன. அந்த வகையில், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மகாளய அமாவாசை அன்று மூதாதையர்களுக்காக சிறப்பு பூஜை செய்வது சிறப்பானது.

    மூங்கில் தட்டில் வெற்றிலைபாக்கு, தேங்காய், பழங்கள், மலர்ச் சரங்கள், வாழைக்காய், பூசணிக்காய் வைத்து, அதனைக் கோவில் அர்ச்சகரிடம் கொடுத்து அம்மன் சன்னிதியில் சமர்ப்பிக்கிறார்கள். மறைந்த தங்கள் பெற்றோரின் பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யச் சொல்கிறார்கள்.

    பிறகு பூஜை செய்யப்பட்ட அந்தத் தட்டினை வயதான ஒரு அந்தணரிடம் தட்சிணை கொடுத்து சமர்ப்பிக்கலாம். அல்லது வயதான சுமங்கலிப் பெண்ணிடம் கொடுத்து அவர்கள் காலில் விழுந்து ஆசி பெறலாம்.

    வசதி படைத்தோர் அன்றைய தினம் அன்னதானம் செய்வதுடன் ஆடைதானமும் செய்வார்கள்.

    தஞ்சையில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் பாதையில் கண்டியூரில் இருந்து 3கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம் திருப்பந்துருத்தி. இந்த தலமும் மகாளய அமாவாசைக்கு ஏற்ற இடமாகும்.

    • ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.
    • குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்துகொண்டிருந்தாலோ மட்டுமே தில ஹோமம் செய்யவேண்டும்.

    பித்ரு தோஷம் என்றால் என்ன?

    நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.

    பித்ரு தோஷத்தை ஜாதகத்தில் கண்டறிவது எப்படி?

    ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்த்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு.

    பித்ரு தோஷத்தக்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும்?

    ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்துகொண்டிருந்தாலோ மட்டுமே தில ஹோமம் செய்யவேண்டும்.

    அனைவரும் இயற்கை மரணம் அடைந்திருந்தால், தில ஹோமம் செய்யவேண்டியதில்லை.

    பித்ரு தோஷத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் என்ன?

    பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு சிக்கிரம் திருமணம் நடக்காது. மிகவும் தாமதமாக நடக்கும். விவாகரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியரிடையே அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது.

    ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. கலப்புத் திருமணம் நடக்கவும், பெற்றொருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. இந்த தோஷம் உள்ள சில தம்பதிகள் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாக நடந்துகொள்வதில்லை.

    எத்தகைய பாவங்கள் செய்திருந்தால், இந்த தோஷம் வரும்?

    கருச்சிதைவு செய்துகொண்டால், இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால், பித்ரு தோஷம் வரும்.

    ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்யவேண்டும்.

    ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை , சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ருதோஷம் வரும்.

    ஒரே குடும்பத்தில் சிலருக்கு மட்டும் பித்ரு தோஷம் வருவது ஏன்?

    ஒரே குடும்பத்தில் சிலருக்கு மட்டும் இந்த தோஷம் வரலாம். திருமணம் ஆன பிறகும் பிறந்த வீட்டு வழியில் சில பெண்களுக்கு பித்ரு தோஷம் தொடரும்.

    இந்த தோஷம் கடுமையாக உள்ள சில குடும்பங்களில் மூளை வளர்ச்சி இல்லாத மாற்றுத் திறனாளி குழந்தை பிறக்கலாம். 

    • மஹாளயம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது என்பது பழமொழி.
    • பித்ரு பூஜையை ஆறு, நதிக்கரைகளிலோ, குளக்கரைகளிலோ, முடியாவிட்டால் இல்லத்தில் இருந்தபடியோ செய்யலாம்.7

    தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் (திதி) செய்யாதவர்கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம் செய்ய வேண்டும். தகுந்த நபர்களை வைத்துக் கொண்டு முறைப்படி செய்ய முடியாதவர்கள், அரிசி, வாழைக்காய், தட்சிணை போன்றவற்றைக் கொடுத்தாவது பித்ருக்களை இந்த மஹாளயபட்சத்தில் திருப்தி செய்ய வேண்டும்.

    சிறுகச் செய்தாலும், பித்ரு காரியங்களை மனப்பூர்வமாக சிரத்தையாகச் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். வசிஷ்ட மகரிஷி, தசரதர், யயாதி, துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், கார்த்தவீர்யார்சுனன், ஸ்ரீராமர், தர்மர் முதலானோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள்.

    மும்மூர்த்தி உருவில் உலகுக்கே குருவாக வந்த ஸ்ரீதத்தாத்ரேயர் வேதாளம் பற்றிக்கொண்ட துராசாரனுக்கு சாப விமோசனமாக புரட்டாசி மாதம், கிருஷ்ண பட்சத்தில் மஹாளயம் செய்யுமாறு வழிகூறினார்.

    கல்யாணத்தை விரும்புகிற மனிதன் மஹாளயம் செய்ய வேண்டும். "மஹாளயம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது" என்பது பழமொழி.

    இனம்புரியாத நோய்கள், உடற்குறையுடன் பிறக்கும் குழந்தைகள், குடும்பத்தில் தள்ளிப் போகும் திருமணங்கள், செய்யும் காரியங்களில் தடைகள் - குழப்பம், பெற்றோர்களை அவர்கள் வாழ்நாளில் சரிவர கவனிக்காமை போன்ற குறைகளுக்கு ஒரு சிறந்த, எளிய பரிகாரம் இந்த மஹாளய பட்ச நாட்களில் பித்ரு தேவதைகளை பூஜை செய்வதுதான். இந்த பித்ரு பூஜையை ஆறு, நதிக்கரைகளிலோ, குளக் கரைகளிலோ, முடியாவிட்டால் இல்லத்தில் இருந்தபடியோ செய்யலாம்.

    • மூதாதயரை நினைத்து காகத்திற்கு வீட்டின் தென்மேற்கு பாகத்தில் அல்லது தென் கிழக்கு பாகத்தில் சாதம் வைத்து வழிபட்டால் மிக நன்மைகள் கிடைக்கும்.
    • சாதாரண அமாவாசையிலும், நினைவு நாட்களிலும் நாம் தரும் திதி சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் தருவது.

    புரட்டாசி அமாவாசைக்கு முன் பதினான்கு நாட்களாக விரதம் இருந்து அமாவாசை அன்று நம் மூதாதையருக்கு தரும் தர்ப்பணம் நம் குலத் தோன்றல்களுக்கும் எதிர்வரும் சந்ததியர்களுக்கும் செல்வச் செழிப்பையும் நற்பண் புகளையும் தரவல்லது.

    எனவே தினம் தினம் ஆலயம் சென்று இறைவனை வழிபட முடியாதவர்களும் இதுவரை பித்ரு பூஜை செய்யாதவர்களும் கூட இந்த மகாளய காலத்தில் பித்ருக்களை நினைத்து வழிபட வேண்டும். வீட்டில் காலம் சென்ற மூதாதையரின் படம் இருக்குமானால் அதன் முன் இக் காலத்தில் தினம் தினம் ஏதாவது ஒரு சாதம் செய்து படையல் இட்டு வழிபாடு செய்யலாம்.

    பழவகைகளில் ஏதாவது ஒன்றினை தினம் படைத்து வீட்டில் உள்ளவர்களுக்கு தரலாம். பிடித்த பலகாரங்களை செய்து அவர்களுக்கு படைத்து எள் எண்ணெய் தீபம் தனியாக போட்டு வழிபாடு செய்ய வேண்டும்.

    நம் முன்னோர்களை நினைத்து வயதானவர்களுக்கும் ஏழை முதியோர்களுக்கும் உணவு அளித்து அவர்களுக்கு துணிமணி தானம் தந்தால் நம் முன்னோர்கள் அதனைக் கண்டு மகிழ்ந்து நம் குலத்தவர்களை வாழ்த்துகின்றனர்.

    மூதாதயரை நினைத்து காகத்திற்கு வீட்டின் தென்மேற்கு பாகத்தில் அல்லது தென் கிழக்கு பாகத்தில் சாதம் வைத்து வழிபட்டால் மிக நன்மைகள் கிடைக்கும்.

    புனித நீர் தலங்கள்:

    காசி, கயா, பத்ரிநாத், திருக்கயிலை, மானஷரோவர், திதி தர ஏற்ற இடங்கள். தமிழகத்தில் ராமேஸ்வரம் சென்னை மத்திய கைலாசம், திருக்கழுக்குன்றம்., பவானி கூடுதுரை, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், பாபநாசம், கும்பகோணம் அருகில் உள்ள செதலபதி ஆதி விநாயகர் ஆலயம், பூம்புகார் சங்கமுகேஸ்வரர் ஆலயம், திருக்கோவரணம் போன்ற இடங்கள் திருவெண்காடு, உடுமலை திருமூர்த்திமலை அமண லிங்கேஸ்வரர் ஆலயம், மற்றும் ஆற்றங்கரைகளிலும் பித்ருக்களுக்காக நாம் பின்டம் பிடித்து தர்ப்பனம் செய்வது கூடுதல் பலன் தரவல்லது.

    காருண்ய பித்ருக்கள்:

    சாதாரண அமாவாசையிலும், நினைவு நாட்களிலும் நாம் தரும் திதி சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் தருவது. ஆனால் மகாளய பட்சத்தின் வழிபாடும், மகாளய அமாவாசை அன்று நாம் செய்யும் பூஜையும் நம்மீது அக்கறை கொண்டு உதவியவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், குருமார்கள், இப்பூவுலகில் சாஸ்திர உணர்வு பெற, வாழ்வியல் தெளிவு பெற நமக்கு உதவிய அத்துனை ஆன்மாக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்கிறது. எனவே அத்தனை பித்ருக்களும் ஆசி வழங்குவது இந்த மகாளய பட்ச விரத நாட்களில் தான்.

    இவர்கள் "காருண்ய பித்ருக்கள் என்று அழைக் கப்படுகின்றார்கள்''. எனவே மறைந்த நண்பர்கள், தாய் வழி, தந்தை வழி உறவினர்கள் சித்தப்பா, பெரியப்பா முதல் தங்கள் குடும்பத்திற்கு உதவிய அத்தனை ஆன்மாக்களுக்கும் என வேண்டி மகாளய அமாவாசை அன்று குறைந்தது ஒரு ஜோடி ஆண்-பெண் முதியவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் நீங்கள் வஸ்திர தானம் செய்து உணவளித்து செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து உதவுங்கள் உங்கள் வாழ்வும், வம்சமும் சிறக்கும்.

    • கறுப்பு எள்ளை பயன்படுத்தும்போது பித்ருக்கள் முழு மனத்திருப்தி அடைகிறார்கள் என்பது ஐதீகமாகும்.
    • தர்ப்பையில் படும் தர்ப்பணங்களை ஸ்வதாதேவி எடுத்து செல்வதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    பித்ருக்கள் வழிபாட்டில் முக்கியப்பங்கு வகிப்பது கறுப்பு எள்ளும், புனிதம் நிறைந்த தர்ப்பை புல்லும்தான்.

    இந்த இரண்டுமே மிக, மிக உயர்ந்த சக்தி கொண்டது.

    எள் என்பது மகா விஷ்ணுவின் மேனி வியர்வையில் இருந்து தோன்றியதாகும். தர்ப்பணம், சிராத்தம் செய்யும்போது கறுப்பு எள்ளை பயன்படுத்தும்போது பித்ருக்கள் முழு மனத்திருப்தி அடைகிறார்கள் என்பது ஐதீகமாகும்.

    தர்ப்பைப்புல் ஆகாயத்தில் இருந்து தோன்றிய தாவரமாகும். இதன் சக்தியையும் சிறப்பையும் சில நூறு ஆண்டுகளுக்கு முன்புதான் மேலை நாட்டவர்கள் உணர்ந்தனர். ஆனால் தமிழர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தர்ப்பைப்புல்லுக்கு, பூஜைகளில் முதன்மை இடம் கொடுத்து பயன்படுத்தி வருகிறார்கள்.

    தர்ப்பைப்புல்லின் இரு பக்கங்களில் பிரம்மன், சிவன் நடுவில் விஷ்ணு உள்ளனர். இதனால் தர்ப்பைப்புல்லுக்கு மந்திர சக்திகளை உள்வாங்கிக் கொள்ளும் தன்மை அதிகமாகும்.

    இந்த தர்ப்பையை மிகவும் சாதாரணமாக அது வெறும் புல்தானே என்று நினைக்கிறார்கள். ஆனால் அந்த புல் எந்த அளவுக்கு சக்தி வாய்ந்தது என்பதற்கு ஒரு உதாரணத்தைப்பாருங்கள்.

    உங்களாலோ அல்லது உங்கள் முன்னோர்களாலோ கர்ம வினைகள் ஏற்பட்டுஇருக்கலாம். இந்த கர்ம வினை உங்களை பாதிக்காத வகையில் தடுக்கும் ஆற்றல் தர்ப்பைப்புல்லுக்கு உண்டு. அது மட்டுமல்ல உங்கள் மனதை அலைக்கழிக்கும் தீய எண்ணங்களை வர விடாமல் தடுக்கும் சக்தியும் தர்ப்பைக்கு இருக்கிறது.

    நாம் பித்ருக்களுக்கு தர்ப்பணம், பூஜைகள் செய்யும்போது நம் கண்களுக்குத்தெரியாத ஒளி வடிவில் வரும் நம் மூதாதையர்கள் நம் முன்பு வைக்கப்பட்டிருக்கும் தர்ப்பை புல்கள் மீதுதான் அமர்வார்களாம். எனவேதான் தர்ப்பை புல்லை தொடும்போது மட்டும் மனசீகமாக நம் முன்னோர்களை வணங்கிவிட்டே தொட வேண்டும் என்கிறார்கள்.

    அது மட்டுமல்ல பித்ருக்களுக்கு நாம் கொடுக்கும் நீர், தர்ப்பணங்கள் அவர்களுக்கு நேரடியாக சென்று சேரவும் தர்ப்பைப்புல்லே உதவியாக உள்ளது. தர்ப்பையில் படும் தர்ப்பணங்களை ஸ்வதாதேவி எடுத்து செல்வதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    மிகவும் பரிசுத்தமான தர்ப்பைப்புல்லுக்கு கிரகணகதிர் வீச்சுகளை தடுக்கும் மாபெரும் சக்தியும் இருக்கிறது. எனவே கிரகண காலங்களில் தண்ணீர், பால், நெய், போன்றவற்றில் தர்ப்பைப்புல்லை நம் முன்னோர்கள் போட்டு வைத்ததை நீங்கள் பார்த்திருக்கலாம்.

    சிலர் ஒரு தடவை பயன்படுத்திய தர்ப்பைப்புல்லை மீண்டும் பயன்படுத்தலாமா என்று சந்தேகப்படுவதுண்டு. தர்ப்பையை மீண்டும், மீண்டும் எத்தனை தடவை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஏனெனில் தர்ப்பைக்கு எந்தவித தோஷமும் கிடையாது.

    கருட புராணத்தில் இது பற்றி விளக்கம் அளித்த மகா விஷ்ணு, தர்ப்பையை எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளார்.

    தர்ப்பைக்கு சூசைபுல் என்றொரு பெயரும் உண்டு. ஒருவர் மரணம் அடையும் தருவாயில் கையில் தர்ப்பைப்புல் வைத்திருந்தால் உன்னத நிலையை அடைவார் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த அளவுக்கு தர்ப்பைப்புல் உயர்வானது.

    எனவே இனி பித்ருக்களுக்கு பூஜை, தர்ப்பணம் செய்யும்போது தர்ப்பைப்புல்லிடம் மட்டும் சற்று பயபக்தியுடன் இருங்கள்.

    ×