என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » aap mla amanatullah khan
நீங்கள் தேடியது "AAP MLA Amanatullah Khan"
டெல்லி தலைமைச் செயலாளர் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகையில் உள்ள தகவல்களை வெளியிடுவதாக கூறி கோர்ட்டில் ஆம் ஆத்மி வழக்கு தொடர்ந்துள்ளது. #DelhiChiefSecretary #AamAadmi
டெல்லி:
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 20-ம் தேதி நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் அமனாதுல்லா கான் மற்றும் பிரகாஷ் ஜார்வால் தாக்கியதாக புகார் எழுந்தது.
இதனை அடுத்து, தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷ் துணை நிலை ஆளுநரைச் சந்தித்து புகாரளித்தார். இதனை அடுத்து தாக்குதல் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் எம்.எல்.ஏ.க்கள் பிரகாஷ் ஜார்வா, அமனாதுல்லா கானை கைது செய்தனர்.
தற்போது இருவரும் நிபந்தனை ஜாமினில் உள்ளனர். இந்த வழக்கில் போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்பட 11 மந்திரிகளின் பெயர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கு வரும் 25-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், குற்றப்பத்திரிகையில் உள்ள தகவல்களை போலீசார் ஊடககங்களுக்கு வழங்குவதாக கூறி ஆம் ஆத்மி கட்சி டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
டெல்லி தலைமைச் செயலாளர் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 11 மந்திரிகளின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. #DelhiChiefSecretary #ArvindKejriwal
டெல்லி:
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 20-ம் தேதி நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் அமனாதுல்லா கான் மற்றும் பிரகாஷ் ஜார்வால் தாக்கியதாக புகார் எழுந்தது.
இதனை அடுத்து, தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷ் துணை நிலை ஆளுநரைச் சந்தித்து புகாரளித்தார். இதனை அடுத்து தாக்குதல் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் எம்.எல்.ஏ.க்கள் பிரகாஷ் ஜார்வா, அமனாதுல்லா கானை கைது செய்தனர்.
தற்போது இருவரும் நிபந்தனை ஜாமினில் உள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கில் போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்பட 11 மந்திரிகளின் பெயர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கு வரும் 25-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. டெல்லி முழுவதும் சிசிடிவி கேமரா அமைக்கும் அரசின் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடுவதாக அன்ஷு பிரகாஷை தலைமை செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என டெல்லி சட்டசபையில் கடந்த வாரம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
×

X