search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aap suspends"

    பாராளுமன்ற தேர்தலில் தலைமையின் அனுமதியின்றி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்த கேரள மாநில ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் இடைநீக்கம் செய்யப்பட்டார். #AAPsuspends #KeralaAAP #KeralaAAPconvener #CRNeelakandansuspended
    புதுடெல்லி:

    கேரள மாநிலத்தில் ஆளும்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, மத்தியில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் தனித்தனியாக இந்த பாராளுமன்ற தேர்தலை சந்திக்கின்றன.

    இதற்கிடையில், டெல்லி, அரியானா, உ.பி. ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மியும் காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிட தீர்மானித்து பல நாட்களாக நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தை எவ்வித சுமுகமான முடிவும் எட்டப்படாமல் முடங்கி கிடக்கின்றது.

    இந்நிலையில், இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த கேரள மாநில ஆம் ஆத்மி  ஒருங்கிணைப்பாளர் சி.ஆர். நீலகண்டன் இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரிக்க ஆம் ஆத்மி தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டார். இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் கட்சியும் நன்றி தெரிவித்திருந்தது. 

    ஆனால், அடுத்த சில நிமிடங்களுக்குள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்  நிலோட்பல் பாசுவுடன்  புதுடெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த கேரள மாநில ஆம் ஆத்மி பொறுப்பாளர் சோம்நாத் பாரதி, ‘இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு ஆம் ஆத்மி ஆதரவு அளிக்கும்’ என்று குறிப்பிட்டார்.

    கட்சியின் மேலிடத்தில் அனுமதி பெறாமல் காங்கிரசுக்கு ஆதரவு என்று தெரிவித்த சி.ஆர். நீலகண்டன் ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். #AAPsuspends #KeralaAAP #KeralaAAPconvener #CRNeelakandansuspended 
    ×