search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Abhishekam for Nandi"

    • வழிபாடுகளில், சிவராத்திரியும் பிரதோஷமும் மிகவும் முக்கியம்.
    • நந்திதேவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும்.

    சிவனுக்குரிய வழிபாடுகளில், சிவராத்திரியும் பிரதோஷமும் மிகவும் முக்கியம். மனிதர்களின் தோஷங்களையும் (குற்றங்களை) பாவங்களையும் நீக்குவதால், இந்த வழிபாடு பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. சிவாலயங்களில், சுக்ரவாரமான இன்று, மஹாபிரதோஷம் நடைபெறுகிறது. பிரதோஷ காலத்தில் சிவன் கோயிலில் வழிபாடு செய்தால், பல கோடி புண்ணியத்தை தரும்.

    குறிப்பாக, ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையில் இல்லாதவர்கள், பிரதோஷ நாளில் சிவன் கோவில்களில் அர்ச்சனைக்கு வில்வம் அளித்து வழிபட்டால், உங்கள் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் மாறும். அறிவு தெளிவாகும். மாலை 4.30 முதல் 6 மணி வரை என்பது பிரதோஷ நேரம் ஆகும். இந்த சமயத்தில், நந்திதேவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். சந்தனம், பால், தயிர், திரவியப் பொடி, பன்னீர், தேன் முதலான அபிஷேகப் பொருட்களை வழங்கி தரிசியுங்கள்.

    அதேபோல், செவ்வரளி, வில்வம், அறுகம்புல் கொண்டு நந்தி தேவருக்குச் சார்த்தி வேண்டிக் கொள்ளுங்கள். பிரதோஷ காலத்தில், அபிஷேக பொருட்கள் வாங்கிக் கொடுக்க, நன்மைகள் நடக்கும். பால் வாங்கித் தர, நோய்கள் நீங்கி நீண்ட ஆயுள் கிடைக்கும். தயிர் வாங்கித்தர, தன லாபமும் வளங்களும் உண்டாகும்.

    தேன் கொடுக்க குரல் வளம் இனிமையாகும். பழங்கள் வாங்கித்தர விளைச்சல் பெருகும். பஞ்சாமிர்தம் தர செல்வம் பெருகும். நெய் வாங்கிக் கொடுத்தால், முக்தி பேறு கிடைக்கும். இளநீர் கொடுக்க நல்ல மக்கட் பேறு கிட்டும். எண்ணெய் வாங்கித் தர, சுகமான வாழ்வும், சர்க்கரை தர எதிர்ப்புகள் மறையும். சந்தனம் வாங்கித்தர சிறப்பான சக்திகள் கிடைக்கும். மலர்கள் கொடுக்க தெய்வ தரிசனம் கிடைக்கும்.

    ×