search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Abolition of plastic"

    திருவெண்ணைநல்லூர் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் என் குப்பை என் பொறுப்பு, எனது நகரம் தூய்மையாக மாற்றி மக்கள் இயக்கமாக மக்களிடையே கொண்டு செல்லும் வகையில் பிளாஸ்டிக் ஒழிப்பு சம்மந்தமாக பள்ளி மா ணவிகளுக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்ற மாணவி களுக்கு பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன் பரிசுகளை வழங்கினார். அதன்பின்னர் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார்.

    மாணவிகள் பேரூராட்சி பகுதி முழுவதும் சைக்கிளில் ஊர்வலமாக சென்று கையில் பதாகைகள் ஏந்தியபடி மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தரம் பிரித்து தூய்மை பணியாளரிடம் வழங்க வேண்டும், பொதுமக்கள் மஞ்சள் துணிப்பையை பயன்படுத்த வேண்டும், பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பூக்கடை கணேசன், துணைத் தலைவர் ஜோதி, தலைமை ஆசிரியர் விஜயன், இளநிலை உதவியாளர் பாலமுருகன், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் நாசர், வரித்தண்டலர் ராஜேந்திரன், பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×