என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "abudhabi"
- இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி கலந்து கொள்கிறார்.
- பல்வேறு நாடுகளின் எரிசக்தித்துறை அமைச்சர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
அபுதாபி தேசிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனம், உலகின் முன்னணி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த நிறுவனம் சார்பில் சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி மற்றும் மாநாடு இன்று தொடங்குகிறது.
இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எரிசக்தித்துறை அமைச்சர்கள் மற்றும் சர்வதேச எரிசக்தி நிறுவனங்களின் தலைவர்கள், உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த கண்காட்சியில் கலந்து கொள்ளுமாறு இந்தியாவுக்கு, ஐக்கிய அரபு அமீரக அரசு அழைப்பு விடுத்துள்ளது. அந்நாட்டின் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்புத்துறை அமைச்சர் சுஹைல் முகமது ஃபராஜ் அல் மஸ்ரூயி விடுத்த அழைப்பை ஏற்று இந்தியா சார்பில் மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இன்று ஐக்கிய அரபு அமீரக நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார்.
தமது பயணத்தின் போது அபுதாபி சர்வதேச பெட்ரோலிய கண்காட்சியில் இந்திய பெட்ரோலியம் தொழில் கூட்டமைப்பு மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து அமைத்துள்ள அரங்கையும் அவர் திறந்து வைக்கிறார். மேலும் இந்த கண்காட்சியில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எரி சக்தித்துறை அமைச்சர்கள், எரிசக்தி நிறுவனங்களின் தலைவர்களையும் அவர் சந்திப்பார்.
மேலும் ஐக்கிய அரபு அமீரகம்-இந்தியா இடையேயான எரிசக்தித்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்த அந்நாட்டு அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் புரி விரிவான ஆலோசனை நடத்துவார் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விமான நிலையத்தில் தரை இறக்குவதற்கு பதில் அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிராண்ட் பகுதியில் தரை இறக்கினார்.
- விமானி லேசான காயங்களுடன் உயிர்தப்பியதாக மீட்பு படையினர் தெரிவித்தனர்.
ஐக்கிய அரபு நாட்டின் அபுதாபிக்கு சிறிய ரக கிளைடர் விமானம் ஒன்று சென்றது. ஒற்றை என்ஜின் கொண்ட இந்த விமானம் தரை இறங்கும்போது என்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டது. எனவே விமானி விமானத்தை தலைநகரில் உள்ள தனியார் விமான நிலையத்தில் தரை இறக்குவதற்கு பதில் அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிராண்ட் பகுதியில் தரை இறக்கினார்.
அப்போது விமானம் அங்குள்ள வாகன நிறுத்த பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தின் இறக்கை பகுதி சேதமானது.
இந்த விபத்தில் விமானி லேசான காயங்களுடன் உயிர்தப்பியதாக மீட்பு படையினர் தெரிவித்தனர். விமானத்தில் வேறு யாரும் பயணிகள் இருந்தார்களா? என்ற தகவலை அவர்கள் வெளியிடவில்லை.
தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விமானம் விபத்துக்குள்ளானதாக விமான நிலைய ஆணையம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக யாரும் வதந்தி பரப்ப கூடாது எனவும் அவர்கள் எச்சரித்து உள்ளனர்.
துபாயில் இதற்கு முன்பு கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் விமான விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பலியானார்கள்
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது பெரும் சவாலாக மாறிவிட்டது. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி போலீசார் தங்களை கண்டுபிடிக்க இயலாத வகையில் குற்றவாளிகள் மிக சாதுர்யமாக செயல்படுகின்றனர்.
ஆனால், அபுதாபி காவல்துறையினர், தடயம் இல்லாத வழக்குகளையும் அலசி ஆராய்ந்து நிஜ குற்றவாளிகளை பிடித்துவிடுகின்றனர். எப்படி என்கிறீர்களா...? அவர்கள் பூச்சிகளையும் ரகசிய உளவாளிகளாக மாற்றி, அதன்மூலம் ஆதாரங்களையும், தடயங்களையும் சேகரிக்கின்றனர். இது குறித்து அபுதாபி காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
‘‘குற்றச் சம்பவம் எப்போது நடந்தது?, எங்கு நடந்தது?, கொலையானவர் இறந்து எத்தனை மணிநேரம் இருக்கும்? என்பதை அடிப்படையாக வைத்தே, கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியும். ஆனால் ஒரு இடத்தில் கொலை செய்யப்பட்டு, மறு இடத்தில் உடல் வீசப்பட்டால் மேல் குறிப்பிட்டவற்றை சரியாக யூகிக்க முடியாது.
உடற்கூறு ஆய்வுகள் குற்ற புலனாய்வு விசாரணையில் கை கொடுத்தாலும், குற்றவாளிகளை நெருங்குவதில் தாமதம் ஏற்படலாம். இல்லையேல் காவல்துறையின் நடவடிக்கைகளை அறிந்து கொண்டு குற்றவாளிகள் தப்பிக்கும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன. அதனால்தான் தற்போது பூச்சி உளவாளிகளை பயன்படுத்துகிறோம்.
ஈக்களும், பூச்சிகளும் இறந்த உடல்களில் அமரக்கூடியவை. அதேசமயம் உடலை வீசிச்செல்ல வரும் கொலையாளிகளின் மீதும் உட்காரும். சில கொசுக்கள், கொலையாளிகளின் ரத்தத்தை உறிஞ்சுகின்றன.
சில ஈக்களும், பூச்சிகளும் மனிதர்களின் உடல் திரவங்களை உறிஞ்சும் தன்மை கொண்டவை. அதனால் கொலையாளிகளின் தகவலும், கொலை செய்யப்பட்டவரின் தகவலும் பூச்சிகளின் வயிற்றில் சேமிக்கப்படுகின்றன.
அதனால் குற்றச்சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் சுற்றித்திரியும் பூச்சிகளை பிடித்து பரிசோதித்தால், எத்தனை நபர்கள் வந்தனர், யார் யார் வந்தனர், எப்போது வந்தனர் போன்ற தகவல்களை கண்டுபிடித்துவிட முடியும்.
இப்படி தடயங்களை சேமித்துக்கொடுக்கும் பூச்சிகள், உடற்கூறு ஆய்வு முடிவுகளையும் துல்லியமாக விளக்கிவிடுகின்றன. ஏனெனில் ‘புளோ பிளை’ எனப்படும் ஈக்கள்தான் இறந்த சடலத்தில் முதலில் அமரும் பூச்சியினம். இவை இறந்த சடலத்தின் மீது அமர்வதோடு, அங்கேயே முட்டைகளையும் ஈடுகின்றன.
முட்டைகள் லார்வா எனப்படும் புழுக்களாக மாறி, அந்த சடலத்திலேயே வளர்வதால் இந்த பூச்சிகளை கொண்டு விவரமான உடற்கூறு ஆய்வுகளை எழுதிவிட முடியும். உடற்கூறு ஆய்வில் கிடைக்கும் அத்தனை விவரங்களையும், இறந்த உடலில் வளர்ந்த பூச்சிகளின் மூலம் பெறமுடியும்’’ என்கிறார், அபுதாபி காவல்துறையின் உயர் அதிகாரி.
இதுவரை பூச்சி உளவாளிகளின் உதவியால் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளில் துப்பு துலக்கி, குற்றவாளிகளை கண்டுபிடித்திருக்கிறார்கள் அபுதாபி காவல்துறையினர். இங்கு கொள்ளை, கொலை நடந்த இடங்களுக்கு மோப்ப நாய் வரவழைக்கப்படுவதை போன்றே அமீரகத்தில் பூச்சிகளை சேகரிக்கும் குழுவையும் வரவழைக்கிறார்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் சுற்றித்திரியும் பூச்சிகளை பிடித்து ஆராய்ச்சி நடத்தி, தடயங்களை சேகரிக்கிறார்கள்.
20 பூச்சிகளை பிடித்தால், அதில் ஒன்றில்தான் தடயத்திற்கான சாத்தியக்கூறுகள் இருக்குமாம். அதனால் கவனமாக பூச்சி உளவாளிகளை தேடிப்பிடிக்கிறார்கள். இவற்றை தகுந்த முறையில் ஆராய்வதற்காகவே அபுதாபி நகரம், அல் அய்ன் மற்றும் அல் தப்ரா ஆகிய மூன்று இடங்களில் நவீன ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சியினால், அமீரக காவல்துறையினருக்கு மட்டுமின்றி பூச்சிகளுக்கும் குற்றவாளிகள் பயப்படுகிறார்கள். #AbuDhabi
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்