என் மலர்
நீங்கள் தேடியது "Accident"
- முடிவைதானேந்தலை சேர்ந்த கணேசன் தனது மோட்டார் சைக்கிளில் மனைவி விமலாவை அழைத்து கொண்டு நேற்று இரவு கடைக்கு சென்றார்
- நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த கார் அவர்கள் மீது மோதியது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள முடிவைதானேந்தல் கீழத்தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி விமலா (வயது42).
கார் மோதி விபத்து
கணேசன் தனது மோட்டார் சைக்கிளில் மனைவி விமலாவை அழைத்து கொண்டு நேற்று இரவு கடைக்கு சென்றார்.
அவர்கள் வாகைக்குளம் அருகே உள்ள வர்த்தக ரெட்டிபட்டியில் சென்ற போது நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். தகவலறிந்ததும் புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி, சப்-இன்ஸ்பெக்டர் முத்து வீரப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை விமலா பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பஸ் மீது கண்டெய்னர் மோதி விபத்து
- 7 பயணிகள் படுகாயம்
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே உள்ள லப்பை காடு பகுதியில் இருந்து கடலூர் மாவட்டம் தொழுதூர் வழியாக பெரம்பலூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ்ஸினை பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 56) என்பவர் ஓட்டிச் சென்றார்.
பஸ்ஸில் இருபதுக்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ் கடலூர் மாவட்டத்தை தாண்டி மங்களமேடு பகுதியில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது எதிர்பாராத விதமாக அவ்வழியாகச் சென்ற கண்டைனர் லாரி எதிர்பாராத விதமாக வலது பக்கம் பஸ்ஸின் பக்கவாட்டில் மோதியது.
இதில் அந்த பஸ்ஸில் பயணம் செய்த குன்னம் பகுதியைச் சேர்ந்த ஐ.டி.ஐ. மாணவர்கள் பிரசன்னா( 16) சுதன்ராஜ்( 20 ) மற்றும் கண்ணன் (23) சரவணன்( 32) குன்னம் ஒகலூர் பகுதியைச் சேர்ந்த நதியா (24) சுவாதி( 21) மல்லிகா (21) ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து கண்டெய்னர் லாரியை ஒட்டி வந்த விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்த டிரைவர் அருளானந்தம் (39) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பஸ் இன்று அதிகாலை 4 மணி அளவில் மேலூர் நான்கு வழிச்சாலையில் மலம்பட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது.
- மேலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் ஜெயம் பாண்டியன், ஜெய கஜேந்திரன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர்:
நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை நாகர்கோவிலை சேர்ந்த கணேசன் (வயது 48) என்பவர் ஓட்டி சென்றார். பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
அந்த பஸ் இன்று அதிகாலை 4 மணி அளவில் மேலூர் நான்கு வழிச்சாலையில் மலம்பட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்ப்பாராதவிதமாக திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் பஸ்சின் டிரைவர், பஸ் பயணிகளான நெல்லையை சேர்ந்த ஹரிகிருஷ்ணன்(52), மணிமாறன் (36), விஜயா (59) உட்பட 15 பேர் காயமடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக மேலூர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து மேலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் ஜெயம் பாண்டியன், ஜெய கஜேந்திரன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நசீமின் கணவர் முகமது லத்தீப் (40) ஆபத்தான நிலையில் ராஜோரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- தம்பதியரின் மகன் பஷரத் குணமடைந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் டிகேஜி சாலையில் உள்ள பாஃப்லியாஸின் டூனர் பகுதியில் இன்று அதிகாலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
நிலச்சரிவின்போது பெரிய பாறை ஒன்று வீட்டின் மீது உருண்டு விழுந்தது. இதில், வீடு இடிந்து தரைமட்டமானது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு இந்திய ராணுவத்தின் 48 ராஷ்டிரிய ரைபிள்ஸ் படையினரும், உள்ளூர் மக்களும் இணைந்து உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த இடிபாடுகளில் சிக்கி இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை மீட்டு சூரன்கோட்டில் உள்ள துணை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதில், நசீம் அக்தர் (35) மற்றும் அவரது மகள் ரூபினா கௌசர் (12) ஆகியோர் பலத்த காயமடைந்து உயிரிழந்தனர். மேலும் நசீமின் கணவர் முகமது லத்தீப் (40) ஆபத்தான நிலையில் ராஜோரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தம்பதியரின் மகன் பஷரத் குணமடைந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
- ஆறுமுக பாண்டி தலையாரியாக வேலை பார்த்து வந்தார்.
- மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் ஆறுமுகபாண்டி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள தடியம்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுக பாண்டி (வயது 58). இவர் அதே கிராமத்தில் கிராம உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ஆறுமுகபாண்டி பணி நிமித்தமாக கூவாச்சிபட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே நாய் ஒன்று பாய்ந்தது. இதில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கவிழ்ந்ததில் ஆறுமுகபாண்டி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு ஆறுமுகபாண்டி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த2 மாதங்களுக்கு மேலாக அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளனர்.
- சாலையோரம் பாதுகா ப்புக்கு உபகரணங்கள் வைக்கவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர்:
திட்டக்குடி அருகே பெருமுலை கிராமத்து செல்லும் சாலையோரம் சாலை விரிவாக்க பணிக்காக சுமார் 1 கிலோமீட்டர் தூரம் தோண்டப்பட்ட பள்ளம் கடந்த2 மாதங்களுக்கு மேலாக அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளனர். பள்ளத்தில் ஏதும் ஜல்லி கொட்டி மூடாமல் பள்ளம் தோன்றிய நிலையில் அப்படியே உள்ளதால் அவ்வழியாக சிறுமுலை, பெருமுலை, புலிவலம், கீரனூர், வேப்பூர் வரை செல்லும் அனைத்து பஸ்களும் அவ்வழியே செல்கிறது.
மேலும் அன்றாட தேவைக்காக அருகிலுள்ள திட்டக்குடி நகரத்திற்கு சிறுகுறு விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவ மாணவிகள் ஆகியோர் வருகை தருகின்றனர். இதில் சாலை ஓரம் பள்ளம் தோண்ட ப்பட்ட நிலையில் எந்த பாதுகாப்பும் வைக்காமல் தோண்டப்பட்ட நிலையில் கிடப்பதால் விபத்துக்கள் அன்றாடம் பள்ளத்தில் சக்கர வாகனங்கள் எதிர்பாராத விதமாக விழுந்து சிக்கிக்கொள்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறைஅதிகாரிகள் சாலைபணியை விரைந்து முடிக்கவும் சாலையோரம் பாதுகா ப்புக்கு உபகரணங்கள் வைக்கவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.
- தாராபுரம் ரோட்டில் சிவசக்தி காலணி வரை பல இடங்களில் பெரிய அளவிலான குழிகள் ஏற்பட்டுள்ளன.
- நகர எல்லை வரை பழனி ரோடு மற்றும் கொழுமம் ரோட்டில் பல இடங்களில் ரோடுகள் சேதம் அடைந்துள்ளன.
உடுமலை:
உடுமலை நகரப் பகுதியில் உள்ள ரோடுகளில் மழை நீர் தேக்கம் காரணமாகவும் முறையான பராமரிப்பு இல்லாததாலும் பெரும்பாலான ரோடுகள் குண்டும் குழிமாக மாறி காணப்படுகின்றன.பஸ் ஸ்டாண்டில் இருந்து பொள்ளாச்சி செல்லும் ரோடு பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையான பாதிப்புஅடைந்து வருகின்றனர்.
மழைக்காலங்களில் நீர் தேங்கியிருப்பது தெரியாமல் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் தொடர்ந்து வருகிறது. அதே போல் நகர எல்லை வரை பழனி ரோடு மற்றும் கொழுமம் ரோட்டில் பல இடங்களில் ரோடுகள் சேதம் அடைந்துள்ளன.பாதாள சாக்கடை ஆள் இறங்கும் குழிகளின் மூடிகள் ஒரு சில பகுதிகளில் உடைந்து தாழ்வாகவும் பெரும்பாலான இடங்களில் உயரமாகும் உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் தாராபுரம் ரோட்டில் சிவசக்தி காலணி வரை பல இடங்களில் பெரிய அளவிலான குழிகள் ஏற்பட்டுள்ளன.
திருப்பூர் ரோடு, ராஜேந்திரா ரோடு , தளிரோடு என நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ள ரோடுகள் மட்டுமின்றி நகராட்சி ரோடுகளும் பரிதாப நிலைக்கு மாறி உள்ளன.நகராட்சிக்குட்பட்ட ராமசாமி நகர் ரோடு, சீனிவாசா வீதி, கல்பனா ரோடு ,வெங்கடகிருஷ்ணா ரோடு, அனுஷம் நகர் ரோடு என நகராட்சி பராமரிப்பில் உள்ள பெரும்பாலான ரோடுகளும் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் பராமரிக்கவும் இல்லாமல் சேதமடைந்துள்ளன.இந்த ரோடுகளால் போக்குவரத்து நெரிசல் விபத்துக்கள் ஏற்படும் நிலையில் மழை காலங்களில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே தேசிய நெடுஞ்சாலை உடுமலை, மடத்துக்குளம், புதுக்கோட்டை மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் குண்டும் குழியுமாக மாறி உள்ள ரோடுகளை உடனடியாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி காலனி தெருவை சேர்ந்த வர் சதீஷ்குமார்(வயது 32).
- இதில் தூக்கி வீசப்பட்ட சதீஷ்குமார் மீது லாரியின் முன் சக்கரம் ஏறி இறங்கியது.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி காலனி தெருவை சேர்ந்த கலியபெருமாளின் மகன் சதீஷ்குமார்(வயது 32). கூலித் தொழிலாளி.
இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு ஜெயங்கொண்டம்-கும்பகோணம் சாலையில் தா.பழூர் கடைவீதி பகுதியில் நடந்து வந்தார். அப்போது பின்னால் கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து காரைக்கால் நோக்கி வந்த லாரி, சதீஷ்குமார் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சதீஷ்குமார் மீது லாரியின் முன் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் கடலூரை சேர்ந்த இளங்கோவனை கைது செய்தனர்.
- மதுரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ராணுவ வீரர் பலியானார்.
- இது குறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள நீரேத்தான் நடுத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 68) முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இவருக்கு விக்ராந்த் என்ற மகன் உள்ளார். அவரும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். நேற்று இரவு கிருஷ்ணமூர்த்தி ஓட்டலில் டிபன் சாப்பிட்டு விட்டு வருவதாக கூறி சென்றார். பழைய நீதிமன்றம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
இதில் படுகாயம் அடைந்த கிருஷ்ணமூர்த்தியை வாடிப்பட்டி அரசு மருத்துவமனை க்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- அருந்து கிடந்த மின்கம்பியை கறவை மாடு மிதித்தது.
- அடிக்கடி இதுபோன்று விபத்து நடந்து வருகிறது.
திருத்துறைப்பூண்டி:
முத்துப்பேட்டை அருகே தண்டாங்கொல்லை பகுதியை சேர்ந்தவர் சகுந்தலா.
இவர் சம்பவத் தன்று மாடு மேய்த்துக் கொண்டிருந்தாள். அப்போது, கனமழை பெய்து கொண்டிருந்தது.
எதிர்பாராதவிதமாக முன்னாள் ராணுவத்தினர் காலனியில் மின்கம்பி அருந்து கிடந்தது, அதனை மிதித்த கறவை பசுமாடு பரிதாபமாக இறந்துவிட்டது.
இதேபோன்று, கடந்த முறை மூன்று மாடுகள் இறந்தன, இது இரண்டாவது முறையாகும்.
அடிக்கடி இதுபோன்று விபத்து நடந்து வருகிறது என மக்கள் தெரிவித்தனர்.
மின் வாரியத்தில் பல முறை மனுவும் கொடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
- சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலியானார்.
- சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வெங்கடேசன் என்பவர் காரை ஓட்டி வந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மாதவசேரியை சேர்ந்தவர் அமுதா (வயது 47). இவரது கணவனர் வேலு கடந்த 4 ஆண்டுக்கு முன்பு இறந்து போனார். இவர்களது மகன் முத்துசாமி (23) இவர் கச்சிராய பாளையத்திலிருந்து சின்ன சேலத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.கணியாமூர் அருகே உள்ள உணவகம் அருகே சென்ற போது கள்ளக்குறிச்சி யில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வெங்கடேசன் என்பவர் காரை ஓட்டி வந்தார். இந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் முத்துசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் முத்து சாமியின் உடலை கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இறந்து போன முத்துசாமியின் தாய் அமுதா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நிகழ்ச்சி முடிந்து சம்பவத்தன்று சென்னையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
- நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
கள்ளக்குறிச்சி:
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கனவாய்காடு தெற்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 53) இவர் தனது மனைவி திரிபுரசுந்தரி மற்றும் அண்ணன் சம்பத் ஆகியோருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டின் வளைய காப்பு நிகழ்ச்சிக்கு காரில் சென்றார். நிகழ்ச்சி முடிந்து சம்பவத்தன்று சென்னையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். காரை சம்பத் ஓட்டினார். அப்போது தியாகதுருகம் அருகே திம்மலை பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது அவருக்கு பின்னால் வந்த சிவப்பு நிற கார் இவரது காரை முந்தி சென்ற போது இவரது காரின் பக்கவாட்டில் மோதியது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த இவரது கார் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் வந்த ரவி, இவரது மனைவி திரிபுரசுந்தரி மற்றும் டிரைவர் சம்பத் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சம்பத் மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து ரவி கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து காரில் மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் டிரைவர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.