search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Accused release"

    தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த அதிமுக பிரமுகர்கள் விடுதலை செய்யப்பட்டது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. #DharmapuriBusBurning #ADMK #TNGovernor #BanwarilalPurohit
    சென்னை:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நீண்ட நாட்களாக சிறையில் உள்ள சுமார் 1800 கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான கோப்புகளை கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு தமிழக அரசு அனுப்பியது. அதில், தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற அதிமுக  பிரமுகர்கள் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றிருந்தன.

    ஆனால், அவர்கள் 3 பேரையும் முன்னதாகவே விடுதலை செய்ய அனுமதிக்க இயலாது என்று கவர்னர் கூறி விட்டார். பின்னர் மீண்டும் தமிழக அரசு அனுப்பிய கோப்புகளை ஆய்வு செய்த கவர்னர், 3 பேரையும் விடுதலை செய்ய ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து மூவரும் நேற்று வேலூர் சிறையில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டனர்.


    இந்நிலையில் 3 பேரையும் விடுதலை செய்ய ஒப்புதல் அளித்தது குறித்து ஆளுநர் மாளிகை இன்று விளக்கம் அளித்துள்ளது. அதில் அரசியலமைப்பு சட்டம் 161வது பிரிவின்படி 3 பேரையும் விடுதலை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், 13 ஆண்டுகள் சிறையில் இருந்ததை கருத்தில் கொண்டு விடுதலை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #DharmapuriBusBurning #ADMK #TNGovernor #BanwarilalPurohit
    ×