என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Actress Divya Sridhar"
- விமர்சனங்கள் எதிர்பார்த்தது தான். ஆனால் இவ்வளவு மோசமாக வரும் என்று யோசிக்கவில்லை.
- என் பிள்ளைகளுக்கு ஒரு தந்தை வேண்டும்.
மலையாள நடிகரான கிறிஸ் வேணுகோபால், நடிகை திவ்யா ஸ்ரீதரும் காதலித்து வந்தனர். நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் குருவாயூரில் இவர்களது திருமணம் நடந்தது.
திவ்யா ஸ்ரீதருக்கு இது 2-வது திருமணம். அவருக்கு ஏற்கனவே 2 பிள்ளைகள் உள்ளனர். அவர்களும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர். நீண்ட வெண் தாடியுடன் கிறிஸ் வேணுகோபால் மணமேடையில் திவ்யா ஸ்ரீதருக்கு தாலிகட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு வாழ்த்துகள் குவிந்த அதேவேளையில் எதிர்மறையான கருத்துகளும் வெளியானது. இதற்கு திவ்யா ஸ்ரீதர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, "ஊர் அறிய திருமணம் செய்ய ஆசைப்பட்டோம். ஆனாலும் பலரும் எங்களை வசைபாடி விட்டார்கள். திருமணம் செய்வது ஒரு தவறா? விமர்சனங்கள் எதிர்பார்த்தது தான். ஆனால் இவ்வளவு மோசமாக வரும் என்று யோசிக்கவில்லை. என் பிள்ளைகளுக்கு ஒரு தந்தை வேண்டும். சமூகத்தில் எனக்கு ஒரு அங்கீகாரம் வேண்டும். மற்றபடி செக்ஸ் மட்டுமே வாழ்க்கை கிடையாது. அது வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே. அது இல்லாமல் வாழவே முடியாதா?
அவருக்கு 49 வயது. எனக்கு 40 வயது அவ்வளவு தான். நாங்கள் ஒன்று சேருவதில் என்ன பிரச்சினை? ஆயிரம் குடங்களின் வாயை அடைக்கலாம். ஆனால் மனிதரின் வாயை அடைக்கமுடியாது" என்று கொந்தளித்துள்ளார்.