search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adanjaramman temple"

    • 48 நாட்களுக்கான மண்டல பூஜையும், பங்குனி மாத அமாவசை வழிபாடு்ம் இருபெரு விழாவாக நடைபெற்றது.
    • அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    காங்கேயம் :

    காங்கேயம் அருகேயுள்ள வீரசோழபுரம் ஸ்ரீஅடஞ்சாரம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதனையொட்டி வீர சோழபுரம் நட்டாத்தி வகையறா நாட்டுவ நாடார்களின் குல தெய்வமான இக்கோவிலின் 48 நாட்களுக்கான மண்டல பூஜையும், பங்குனி மாத அமாவசை வழிபாடு்ம் இருபெரு விழாவாக நடைபெற்றது. இதில் அம்மனுக்கு மதுரை மீனாட்சி அலங்காரம் செய்யப்பட்டு அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. விழாவில் குலத்தவர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் கரூர், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்து தரிசனம் செய்தனர்.

    அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் திருப்பணிகமிட்டி தலைவர் மங்கையர்கரசி சக்திவேல் தலைமையில் துணைத்தலைவர்கள் சுதா சேதுபதி, ஜோதி, சரஸ்வதி,கரூர் கூடலரசன், முருகேசன், இணைச்செயலாளர் சூலூர் காமராஜ், செந்தில் வடிவு, ஈரோடு தீனதாயளன், பார்த்திபன், தங்கவேல், குருசாமி,தம்பி என்கிற சிவகுமார், டாக்டர்கள் அகல்யா,யோகலெட்சுமி, அர்ச்சுணன் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர். வருகிற 26ந்தேதி கோவில் மண்டலபூஜை நிறைவு விழா நடைபெற உள்ளது.

    ×