என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Additional police"
- காவலர்களில் 4 பேர் அன்றாட நீதிமன்ற வழக்கு தொடர்பான பணிகளிலும் ஈடுப்படுத்தப்படுகின்றனர்.
- போக்குவரத்து இன்னலுக்கு தீர்வு காண முடியும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் ஒரு இன்ஸ்பெக்டர். 3 சப் இன்ஸ்பெக்டர்கள், 7 சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், 5 தலைமை காவலர்கள், 14 முதுநிலை காவலர்கள், 4 காவலர்கள் உள்ளனர். கண்டமங்கலம் காவல் நிலைய எல்லை பகுதியில்100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. காவலர்களில் 4 பேர் அன்றாட நீதிமன்ற வழக்கு தொடர்பான பணிகளிலும் ஈடுப்படுத்தப் படுகின்றனர். மேலும் வாகன சோதனை, அபராதம் விதித்தல் போன்ற செயல்களிலும் போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இதனால் முக்கியமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களில் முழு நேர போலீசார் நிறுத்த முடியாத சூழ்நிலை இருப்பதாகவும் அரசு இப் பிரச்சனையில் தலையிட்டு கூடுதல் காவலர்களை நியமித்தால் மட்டுமே போக்குவரத்து இன்னலுக்கு தீர்வு காண முடியும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உடனடியாக தமிழக அரசு கண்டமங்கலம் காவல் நிலையத்திற்கு கூடுதலாக காவலர்களை நியமிக்க வேண்டும். இல்லையெனில் கண்டமங்கலத்தில் போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைத்து புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.