என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adjournment"

    • புயல் எச்சரிக்கையால் அரசு ஊழியர்களின் மறியல் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
    • இதனால் மிக அதி கனமழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    கடலூர்:

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சார்பில், பழைய ஒய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ந் தேதியன்று, சென்னை, திருச்சி, சேலம், கடலூர், மதுரை ஆகிய இடங்களில் மறியல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    தற்போது தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மிக அதி கனமழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆகவே, நாளை நடக்க இருந்த மறியல் போராட்டம் தள்ளி வைக்கப்படுகிறது. அதன்படி வரும் 14-ந் தேதி சென்னை, திருச்சி, சேலம், கடலூர் மதுரை ஆகிய இடங்களில்மறியல் போராட்டம் நடக்கும். இவ்வாறு அறிக்கையில் உள்ளது.

    • பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதிக்க அனுமதி கோரினர்.
    • அதானி குழும விவகாரம் தொடர்பாக விவாதிப்பது தொடர்பாக, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தால் கடும் அமளி.

    2023ம் ஆண்டிற்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. பின்னர் நேற்று பாராளுமன்றத்தில் 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    இந்த பட்ஜெட்டை, பிரதமர் மோடி வரவேற்றார்.

    இன்று காலை பாராளுமன்ற மக்களவை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    ஜனாதிபதி உரை விவாதம் நடைபெற இருந்த நிலையில் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதிக்க அனுமதி கோரினர்.

    மேலும், அதானி குழும விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தால் பாராளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    பிறகு, 2 மணியளவில் இரு அவைகளும் கூடியது. இந்நிலையில், 2 மணிக்கு பிறகும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்றத்தில் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

    • ராஜபாளையம் நகராட்சி அலுவலக முற்றுகை போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
    • இதில் ஏப்ரல் 20-ந் தேதிக்குள் வரி குறைப்புக்கான அரசாணை வெளியிடப்படும்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகராட்சியில் சொத்து வரி விகிதத்தை 10 சதவீதமாக குறைக்க வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று வரி உயர்வு எதிர்ப்பு போராட்டக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன், ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போராட்ட குழுவினரிடம் வட்டாட்சியர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், நகராட்சி தலைவர் பவித்ராஷியாம். ஆணையாளர் பார்த்தசாரதி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இந்த பேச்சுவார்த்தையில் ஏப்ரல் 20-ந் தேதிக்குள் வரி குறைப்புக்கான அரசாணை வெளியிடப்படும். சொத்து வரி குறைப்பு குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும்.

    குடிநீர் இணைப்பு கட்டணம், கூடுதல் வரி அடுத்த ஆண்டில் வரவு வைக்கப்படும் என அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர். இதையடுத்து முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    • எதிர்க்கட்சிகள் முழக்கத்தால், அவை தொடங்கிய அடுத்த நிமிடமே அவையை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
    • பாராளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்றும் கருப்பு உடை அணிந்து முழக்கங்களை எழுப்பினர்.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு கடந்த 13ம் தேதி தொடங்கியது. அதானி குழும முறைகேடு குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், இந்தியாவை அவமானப்படுத்திய விவகாரத்தில் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஆளும் பாஜகவும் பாராளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

    இதனால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் 9 தினங்களாக முடங்கியது.

    இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் பேசிய அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து அதிரடியாக தீர்பு வழங்கியது.

    அதை தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி.பதவி பறிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து பாரளுமன்றத்தில் காங்கிரஸ் நேற்று பிரச்சினை கிளப்பியது. காங்கிரஸ், தி.மு.க., திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து வந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவை நடவடிக்கைகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டது. பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பும் கருப்பு உடையுடன் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பாராளுமன்றத்தில் இன்றும் ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு, அதானி விவகாரத்தால் கடும் அமளி ஏற்பட்டது.

    பாராளுமன்ற மக்களவை கூடியதும் கருப்பு உடையுடன் வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டனர்.

    காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் ஆகியோர் பேப்பர்களை கிழித்து சபாநாயகர் இருக்கையை நோக்கி வீசினார்கள்.

    மற்றொரு காங்கிரஸ் உறுப்பினர் டி.என்.பிரதாபன் சபாநாயகர் இருக்கையை நோக்கி கருப்பு துணியை வீசினார். அப்போது சபை காவலர்கள் அதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு, அதானி விவகாரம் ஆகிய பிரச்சினைகளை கிளப்பி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் சபை 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

    மேல் சபையில் இதே விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து சபைக்கு வந்தனர். சபை கூடியதுமே அவர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள்.

    இதனால் ஒரே கூச்சலும், குழப்பமும் நிலவியது. இதைதொடர்ந்து அவை 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. 11வது நாளாக பாராளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.

    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முன் ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டது.
    • மனுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    சிவகாசி அருகே உள்ள சக்தி நகரை சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற தொழிலதிபரை கடத்தி மிரட்டிய புகார் தொடர்பாக முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜவர்மன் (வயது 52), தங்கமுனியசாமி(30), நரிக்குடி ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் ரவிசந்திரன் (53), அவரது மனைவி அங்காள ஈஸ்வரி (50), ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. ராஜேந்திரன், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து மாரியப்பன் ஆகிய 6 பேர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் ஆள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ராஜ வர்மன், தங்கமுனியசாமி, ரவிச்சந்திரன், அங்காள ஈஸ்வரி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது.

    இந்நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்து மாரியப்பன் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி(பொறுப்பு) பூர்ண ஜெய ஆனந்த் 25-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    • அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
    • வருகிற 28-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    2006-2011 தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தபோது சாத்தூர் ராமச்சந்திரன், அவரது மனைவி மற்றும் உதவியாளர் உட்பட 5 பேர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக 2012-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி கிறிஸ்டோபர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை வருகிற 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • பட்டதாரி ஆசிரியர்க ளுக்கான பதவி உயர்வு பணி மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
    • இந்நிலையில் நாளை தொடங்குவதாக இருந்த பட்டதாரி ஆசிரியர்க ளுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நிர்வாக கார ணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரி யர்கள், இடைநிலை, பட்ட தாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்க ளுக்கான பதவி உயர்வு பணி மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி நடப்பு கல்வி ஆண்டிற்கான மாறுதல் கலந்தாய்வு கடந்த வாரம் தொடங்கியது. இதில் உபரி பட்டதாரி ஆசிரியர்க ளுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நாளை நடை பெறும் என அறிவிக்கப்பட்டி ருந்தது.இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பட்டியலும் வெளி யிடப்பட்டது.இதனிடையே நடப்பாண்டில் போதுமான பாடவேளை இல்லாத முதுகலை ஆசிரியர்களை 10 மற்றும் அதற்கு கீழ் உள்ள வகுப்புகளுக்கு பாடம் நடத்த அனுமதிப்ப துடன், அதன் அடிப்படை யில் பட்டதாரி ஆசிரி யர்களை உபரியாக கணக்கிட்டு பட்டியல் வெளியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த பட்ட தாரி ஆசிரியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இது தொடர்பாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரி யர் கழக மாநில பொதுச் செயலாளர் சோமசுந்தரம், தலைவர் பாஸ்கரன், பொரு ளாளர் மலர் கண்ணன் மற்றும் மாநில செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும், செயலா ளருக்கும் கோரிக்கை மனு அனுப்பினர். அதில், முதுகலை ஆசிரியர்களை கீழ் வகுப்புகளுக்கு பாடம் நடத்த அனுமதிக்க கூடாது, ஏற்கனவே உள்ள பழைய நடைமுறைபடியே பட்டதாரி ஆசிரியருக்கான பணிநிரவல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என வலியு றுத்தினார்.இந்நிலையில் நாளை தொடங்குவதாக இருந்த பட்டதாரி ஆசிரியர்க ளுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நிர்வாக கார ணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரி யர் கழகம் உள்ளிட்ட பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் வரவேற்பு தெரி வித்துள்ளது.

    • தஞ்சையில் பொதுக்கூட்டத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
    • பொதுக்கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது அமைச்சர் காமராஜ் அறிவித்தார்.

    தஞ்சாவூர்:

    அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.

    தஞ்சையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி கடந்த மாதம் 4-ந்தேதி நடைபெற இருந்த கூட்டம் மழை காரணமாக நாளைமறுதினம் 16-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தொடர் கன மழை பெய்யும் எனவும், தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி வருகின்ற 16-ந்தேதி புயல் சின்னமாக மாறும் என அறிவித்துள்ளது.

    எனவே பொது ச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதல் பெற்று 16-ந்தேதி நடைபெற இருந்த 52-ம்ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தஞ்சையில் நடந்த பூத்கமிட்டி கூட்டத்தில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பல்வேறு மசோதாக்கள் நடப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
    • இரு அவைகளிலும் இந்தியா கூட்டணியின் 146 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்.

    மக்களவையில் கலர் புகை குண்டு வீசப்பட்ட சம்பவம் நடப்பு கூட்டத்தொடரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை வரை நடைபெறுவதாக இருந்த நிலையில் இன்றுடன் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    மக்களவையில் 3 குற்றவியல் மசோதா, தொலைத்தொடர்பு திருத்த மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் நடப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    எதிர்க்கட்சிகள் இல்லாத நேரத்தில் அனைத்து முக்கிய மசோதாக்களையும் நிறைவேற்றி பாராளுமன்றத்தின் கண்ணியத்திற்கு எதிராக மோடி அரசு செயல்படுவதாக மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், இரு அவைகளிலும் இந்தியா கூட்டணியின் 146 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விதம் துரதிருஷ்டவசமானது என அவர் கூறியுள்ளார்.

    • ஜாமின் கோரி 2வது முறையாக மனு தாக்கல் செய்தார்.
    • ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்தது.

    சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, ஜாமின் கோரி 2வது முறையாக மனு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு விசாரணையின்போது, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

    • ஆபத்தான மெசேஜ்களை கண்டறிந்து அனுப்பியவர் யார் என்பதை கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமானது
    • டெல்லி ஐகோர்ட்டு இந்த வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைத்தது.

    மத்திய அரசு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய ஐடி விதிகளை அமலுக்கு கொண்டு வந்தது. இந்தியாவில் செயல்பட விரும்பும் அனைத்து சமூக வலைத்தள நிறுவனங்களும் இந்த புதிய விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.

    எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் முறையை உடைக்க கட்டாயப்படுத்தினால் இந்தியாவில் இருந்து வெளியேற நேரிடும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்தது. மேலும் இந்த புதிய சட்டத்திற்கு எதிராக வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.




    "வாட்ஸ்அப் பயனர்களின் தனியுரிமையை பாதிக்கும் வகையில் End to End Encryption-ஐ உடைக்க இந்திய அரசு எங்களை கட்டாயப் படுத்தினால், நாட்டை விட்டே இச்செயலி வெளியேற நேரிடும்" என டெல்லி உயர்நீதி மன்றத்தில் அந்நிறுவனம் வாதம் செய்தது.

    எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் என்பது யூசர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதாகவும் அதில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்தது.

    இந்த சட்டத்திற்கு இணங்குவது என்பது என்க்ரிப்ஷன் பிராசஸை அர்த்தம் இல்லாமல் செய்துவிடும் என்றும் அது தனியுரிமையை மீறும் ஒரு செயல் என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் வாதம் செய்யப்பட்டது.




    ஆபத்தான மெசேஜ்களை கண்டறிந்து ஆன்லைன் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு மெசேஜ்ஜை அனுப்பியவர் யார் என்பதை கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமானது என்று மத்திய அரசு சார்பில் வாதம் செய்யப்பட்டது.

    தவறான தகவல்களை பரப்புபவர்கள் , வன்முறையை தூண்டுபவர்களை அடையாளம் காண உதவும் பொறுப்பு சமூக வலைத்தளங்களுக்கு இருப்பதாக மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி ஐகோர்ட்டு இந்த வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைத்தது.

    • கொடநாடு எஸ்டேட் பணியாளர்கள் தேவன், ரமேஷ் மற்றும் சயானின் நண்பர்கள் பாபு, அப்துல்காதர் ஆகிய 4 பேருக்கு தற்போது சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
    • வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்காதர் வருகிற ஜூன் மாதம் 21-ந் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

    கோவை:

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த சயான் உள்பட பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி அவற்றை வாக்கு மூலமாக பதிவு செய்துள்ளனர். இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மேலும் 4 பேருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி இருக்கிறார்கள். கொடநாடு எஸ்டேட் பணியாளர்கள் தேவன், ரமேஷ் மற்றும் சயானின் நண்பர்கள் பாபு, அப்துல்காதர் ஆகிய 4 பேருக்கு தற்போது சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

    அவர்கள் 4 பேரும் தனித்தனியாக நாளை(30-ந் தேதி) கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸ்நிலையத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு இன்று ஊட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்ற த்தில் நீதிபதி அப்துல் காதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    இதில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் கேரள மாநிலத்தை சேர்ந்த வாளையார் மனோஜ் ஆஜர் ஆனார். அரசு தரப்பு வக்கீல்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ், வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்காதர் வருகிற ஜூன் மாதம் 21-ந் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

    பின்னர் அரசு தரப்பு வக்கீல் ஷாஜகான் நிருபர்களிடம் கூறியதாவது:- கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்ற பங்களாவில் தடவியல் நிபுணர் குழு உட்பட பல்வேறு துறையினர் மேற்கொண்ட ஆய்வு அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது எதிர்தரப்பினர் பங்களாவிற்குள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக புலன் விசாரணை நடைபெற்று வருவதால், எதிர்தரப்பினர் பங்களாவில் ஆய்வு மேற்கொண்டால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என அரசு தரப்பு சார்பில் நீதிபதியிடம் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

    ×