search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADMK Councilor"

    • பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
    • பெற்றோர் கோரிக்கைகள் படிப்படியாக செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மங்கலம் ரோடு பாரப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஆட்டோ கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் லயன்ஸ் சுரேஷ், தலைமை ஆசிரியை அருணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. 42வது வார்டு கவுன்சிலரும், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவருமான அன்பகம் திருப்பதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பாரப்பாளையம் மாநகராட்சி பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பெற்றோர் ஒரு சில கோரிக்கைகள் வைத்து உள்ளீர்கள் .அதனை படிப்படியாக செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    பாரப்பாளையம் பள்ளியில் ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுக்கு தரமான கல்வியை வழங்கி வருகிறார்கள். அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவ மாணவிகள் ஒவ்வொருவரும் தங்களின் தனி திறமையை வெளிப்படுத்த வேண்டும். அதற்கு பெற்றோர் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பரீட்சையில் மதிப்பெண் குறைவாக எடுத்தாலோ அல்லது தனித்திறமையில் வெற்றி பெற வில்லை என்றாலோ அந்த குழந்தையை உதாசீனப்படுத்தாமல் ஊக்கப்படுத்த வேண்டும். அப்போதுதான் அவர்கள் புதிய முயற்சிகள் மேற்கொண்டு வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவார்கள். பாரப்பாளையம் பள்ளியில் மார்ச் மாதம் நடைபெறும் ஆண்டு விழாவை மிகச் சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் ,பெற்றோர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் .இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சுனில் குருசாமி, திருநகர் பாலு, சக்திவேல், முரளிதரன், சதீஷ்குமார் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை தேவகி நன்றி கூறினார்.

    ×