என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ADMK District Secretaries meeting"
- கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- பிற மாநிலங்களைச் சேர்ந்த மாநில செயலாளர்கள் கூட்டமும் வருகிற 6-ந்தேதி நடைபெறுகிறது.
சென்னை:
2026-ம் ஆண்டு தமிழக சட்டசபைக்கு நடக்கும் தேர்தலை எதிர்கொள்ள இப்போதே அனைத்து கட்சிகளும் தயாராக தொடங்கியுள்ளன.
தி.மு.க. குறைந்தபட்சம் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து பணிகளை தொடங்கி உள்ளது. 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை தி.மு.க. மேலிடம் நியமனம் செய்து பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
அடுத்தகட்டமாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 234 தொகுதிகளுக்கும் சூறாவளி சுற்றுப் பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் புதிதாக கட்சி தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறார்.
இதன் காரணமாக தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தி.மு.க. அ.தி.மு.க. கூட்டணிகளில் உள்ள தோழமைக் கட்சிகளும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க தங்களை தயார்படுத்த தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் அ.தி.மு.க.வும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு பல புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக கட்சியில் நிர்வாகிகள் மாற்றம் பற்றி விரைவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர தேர்தல் கூட்டணி, பிரசாரம் தொடர்பாகவும் முக்கிய முடிவுகளை எடுக்க எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இது தொடர்பாக ஆலோசனை நடத்த அவர் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளார்.
அதன்படி வருகிற 6-ந் தேதி (புதன்கிழமை) அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி மு. பழனிசாமி தலைமையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் வருகிற 6-ந்தேதி (புதன் கிழமை) காலை 10 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த, மாநிலக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் பிற மாநிலக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.
திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்பட 20 தொகுதிகளுக்கும் பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதால் அதை எதிர்கொள்வது குறித்து கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இடைத்தேர்தல் நடைபெற்றால் தொகுதி வாரியாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் அந்தந்த மாவட்டச் செயலாளர்களுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர் பட்டியலை சரி பார்த்து வாக்குச்சாவடி முகவர்களையும் அ.தி.மு.க. தயார் நிலையில் வைத்திருப்பதால் தேர்தல் தேதியை எப்போது அறிவித்தாலும் அதை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து இதில் பேச உள்ளனர்.
இது தவிர கட்சியின் பொதுக்குழுவை எப்போது கூட்டலாம் என்பது பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். #ADMK
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்