search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADMK general meeting"

    • தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அளித்த உத்தரவு ரத்தானது.
    • உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அதில் வெற்றிபெறுவோம் என்று வைத்திலிங்கம் எம். எல் .ஏ. தெரிவித்தார்.

    அதிமுக சார்பில் கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு தீர்ப்பு அளித்தது.

    இதன்மூலம் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அளித்த உத்தரவு ரத்தானது.

    சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது.

    இதுதொடர்பாக ஓ.பன்னீ ர்செல்வம் ஆதரவாளரன துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம். எல் .ஏ. அன்று அளித்த  பேட்டியில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். அதுவரை பொறுத்திருங்கள். எனவே ஓ.பி.எஸ் ஆதரவாளர்களும், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வருத்தமடைய வேண்டாம். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அதில் வெற்றிபெறுவோம் என்று குறிப்பிட்டார்.

    இந்நிலையில், வரும் திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

    • தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த உத்தரவு ரத்து.
    • உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அதில் வெற்றிபெறுவோம்.

    அதிமுக சார்பில் கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

    ஏற்கனவே ஜூன் 23-ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என தனி நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஈ.பி.எஸ் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

    இன்றைய வழக்கில், ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு தீர்ப்பு அளித்தது. இதன்மூலம் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

    இந்நிலையில், இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து ஓ. பன்னீ ர்செல்வம் ஆதரவாளரன துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம். எல் .ஏ . அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தற்காலிகமானது தான். நாங்கள் இது குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். அதுவரை பொறுத்திருங்கள். எனவே ஓ.பி.எஸ் ஆதரவாளர்களும், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வருத்தமடைய வேண்டாம். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அதில் வெற்றிபெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு தலைமையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
    • உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் ஈபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடந்தது.

    இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், பொதுக்குழு செல்லாது, ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடரவேண்டும் என்று தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

    இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் டெல்லி மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், சி.ஆரியமா சுந்தரம், விஜய் நாராயண், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியன், வைரமுத்து தரப்பில் வக்கீல் ஸ்ரீராம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த மாதம் 25-ந்தேதி உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று (வெள்ளிக்கிழமை) காலை நீதிபதிகள் பிறப்பித்தனர்.

    தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்வதாக அவர்கள் தீர்ப்பு கூறினார்கள்.

    இது தொடர்பாக நீதிபதிகள் தங்கள் உத்தரவில், "ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்கிறோம்" என்று தெரிவித்தனர்.

    சென்னையில் ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று ஏற்கனவே தனி நீதிபதி தீர்ப்பு வழங்கி இருந்தார். இந்த தனி நீதிபதியின் தீர்ப்பை செல்லாது என்று தற்போது இரு அமர்வு நீதிபதிகள் அறிவித்து உள்ளனர். இதனால் தற்போது அ.தி.மு.க.வில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    • 8-ம் தேதி நடைபெறும் குடியரசுத் தலைவர், எதிர்க்கட்சி துணைத் தலைவர் தேர்வு உள்ளிட்டவை குறித்து விவாதம்.
    • ஈ.பி.எஸ். பதவியேற்றபின் முதன்முறையாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்.

    அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த கூட்டத்தில், 18-ம் தேதி நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தல், எதிர்க்கட்சி துணைத் தலைவர் தேர்வு உள்ளிட்டவை குறித்து அதிமுக எம்எல்ஏக்கள் விவாதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    இடைக்கால பொதுச்செயலாளராக ஈ.பி.எஸ். பதவியேற்றபின் முதன்முறையாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    • கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனால் சட்ட சிக்கல்கள் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் மிகுந்த கவனமுடன் செயலாற்றி வருகிறார்கள்.
    • இதை தொடர்ந்து ஸ்ரீவாரு திருமண மண்டபத்துக்கு வெளியே பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான கருத்து வேறுபாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இரு தரப்பினரும் மாறி மாறி பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர்.

    எடப்பாடி பழனிசாமியை கட்சியின் தலைமை பதவிக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். இதற்காக வருகிற 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை நடத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடத்துவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனால் சட்ட சிக்கல்கள் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் மிகுந்த கவனமுடன் செயலாற்றி வருகிறார்கள். இதை தொடர்ந்து ஸ்ரீவாரு திருமண மண்டபத்துக்கு வெளியே பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் நாளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்கள்.

    சமூக இடைவெளியை பின்பற்றி 3 ஆயிரம் இருக்கைகள் போடப்பட உள்ளது. இதனை கருத்தில் கொண்டு விசாலமான இட வசதியுடன் பொதுக்குழு கூட்டத்துக்கு பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திட்டமிட்டபடி பொதுக்குழுவை நடத்துவதற்கு காவல்துறையில் உரிய அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

    குன்னம் அருகே உள்ள மேலமாத்தூர் கிராமத்தில் குன்னம் சட்டமன்ற தொகுதி சார்பாக காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. #ADMK
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மேலமாத்தூர் கிராமத்தில் குன்னம் சட்டமன்ற தொகுதி சார்பாக காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் என்.கே.கர்ணன் தலைமை வகித்தார். வேப்பூர் ஒன்றிய செயலாளர் புதுவேட்டக்குடி கிருஷ்ணசாமி வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் அமைப்பு செயலாளரும், காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற உறுப்பினருமான முருகுமாரன், பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி. ராமச்சந்திரன், சிதம்பரம் எம்.பி.,சந்திரகாசி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    கூட்டத்தில் முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம், தலைமை கழக பேச்சாளர்கள் முருகேசன், சாமிநாதன், மாவட்ட அணி செயலாளர்கள் ராஜாராம், ராணி, ராகேஸ்வரி, ஆலத்தூர் ஒன்றிய துணை செயலாளர் திரிசங்கு, வக்கீல் பிரிவு ராமசாமி, குன்னம் பால் கூட்டுறவு சங்க தலைவர் குணசீலன் உள்பட ஆலத்தூர், வேப்பூர், செந்துறை ஒன்றிய நிர்வாகிகள், கிளை செயலாளர் கலந்து கொண்டனர். முடிவில் செந்துறை ஒன்றிய செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார். #ADMK
    ×