search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Advisory Board Member"

    • மதுரை கோட்டத்தில் நெல்லைக்கு பிறகு அதிக வருமானம் ஈட்டி தருவது கோவில்பட்டி ரெயில் நிலையம் ஆகும்.
    • வியாபாரிகள் தொழில் சம்பந்தமாக, வர்த்தக ரீதியாக ரெயில் போக்குவரத்தையே நம்பியே உள்ளனர்.

    கோவில்பட்டி:

    முன்னாள் தெற்கு ரெயில்வே மதுரை கோட்ட ஆலோசனை குழு உறுப்பினர் மகேந்திரன், ரெயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    அதிக வருமானம்

    மதுரை கோட்டத்தில் நெல்லைக்கு பிறகு அதிக வருமானம் ஈட்டி தருவது கோவில்பட்டி ரெயில் நிலையம் ஆகும். இந்த சுற்று வட்டாரத்தில் விவசாயத்தை நம்பி அதிகம் பேர் வசித்து வருகின்றனர். மேலும் வியாபாரிகள் தொழில் சம்பந்தமாக வர்த்தக ரீதியாக ரெயில் போக்குவரத்தையே நம்பியே உள்ளனர்.

    கோவில்பட்டி ரெயில்வே நிலையம் ஏ கிரேடு அந்தஸ்தில் உள்ளது. ஆண்டுக்கு சுமார் ரூ. 10 கோடி வருவாய் ஈட்டி தருகிறது. கடந்த கொரோனா காலகட்டத்தில் இங்கு ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் ரெயில்வே போக்குவரத்தை தொடங்கிய போதும் கொரோனா காலகட்டத்திற்கு முன்பு கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நின்று சென்ற ரெயில்கள் தற்போது நிற்காமல் செல்கிறது.

    உடனடியாக நடவடிக்கை

    இதனால் இந்த பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் விவசாயிகள், மாணவர்க ள்பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். எனவே தாங்கள் பொதுமக்களின் நலன் கருதி மீண்டும் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் கோவில்பட்டி ரெயில்நிலையத்தில் நிற்காமல் செல்லும் தினசரி ரெயில்களான மதுரை- புனலூர், சென்னை- கன்னியாகுமரி, வாரந்திர ரெயில்கள் கன்னியா குமரி- ராமேஸ்வரம், நிஜாமுதீன்- கன்னி யாகுமரி, நாகர்கோவில்- சென்னை எழும்பூர், செங்கோட்டை- சென்னை உள்ளிட்ட ரெயில்களை கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதேபோல் கோவில்பட்டி ரெயில்வே நிலையத்தில் உள்ள 2-வது நடைமேடையில் கழிப்பறை வசதி இல்லாமல் பொதுமக்கள் சிரம படுகின்றனர். மேலும் ரெயில் பெட்டிகள் நிற்கும் இடம் தெரியவில்லை. முதியோர்களை அழைத்துச் செல்ல பேட்டரி வாகனம் போன்ற வசதிகளை இல்லாமல் உள்ளது. எனவே இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    ×