search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "affected lands"

    • சாகுபடி செய்த பயிர்கள் முளைத்து கருகிவிட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
    • 5 மாதங்களாகியும் அந்நிலத்தில் புல் கூட முளைக்கவில்லை.

    திருப்பூர் :

    பல்லடம், பொங்கலூர் ஒன்றிய பகுதிகளில் காய்கறி, பயறு சாகுபடி அதிகம் நடக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம், கம்பு, சோளம், மக்காச்சோள பயிர்களுக்கு விவசாயிகள் வழக்கம் போல் களைக்கொல்லி பயன்படுத்தினர். இதையடுத்து பயிர்கள் கருகிவிட்டதாகவும், அதற்கு பிறகு சாகுபடி செய்த பயிர்களும் முளைத்து கருகிவிட்டதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:- கடந்த பிப்ரவரி மாதம் மக்காச்சோளம், கம்பு, சோளப்பயிர்களுக்கு களைக்கொல்லி மருந்து அடித்தோம். அரை கிலோ மருந்து பாக்கெட் வாங்கி 104 லிட்டர் தண்ணீரில் கலந்து பயன்படுத்திய நிலையில் ஒரு வாரத்துக்கு பின் பயிர்கள் கருகின.அதன்பின் 5 மாதங்களாகியும் அந்நிலத்தில் புல் கூட முளைக்கவில்லை. சோளம், கம்பு பயிரிட்டும் கருகிவிட்டது. இதுகுறித்து உரக்கடையில் முறையிட்டும் பயனில்லை. 10 ஏக்கரில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளோம். உரிய நிவாரணம் வழங்கி மீண்டும் மண் வளத்தை செறிவூட்டி கொடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

    வேளாண் துறை இணை இயக்குனர்(பொறுப்பு ) சின்னசாமி கூறுகையில், பாதிக்கப்பட்ட நிலங்களில் உடனடியாக மண் பரிசோதனை செய்யப்படும். அதன் அடிப்படையில் உரக்கடை மற்றும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ×