என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » afganistan militants killed
நீங்கள் தேடியது "Afganistan Militants Killed"
ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு பகுதியில் மட்டும் ஓராண்டு காலத்தில் 3,771 பயங்கரவாதிகளை கொன்று குவித்தாக அந்நாட்டின் சிறப்பு படையினர் இன்று தெரிவித்தனர். #MilitantsKilled #NorthAfganistanMilitants
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.
பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசாருக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.
அவ்வகையில், வடக்கு மற்றும் வடகிழக்கு ஆப்கானிஸ்தானுக்கு உட்பட்ட பல பகுதிகளில் கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்ற தேடுதல் வேட்டை மற்றும் மோதல்களில் 3,7,71 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவத்தின் ‘209 ஷஹீன்’ படையை சேர்ந்த துணை தளபதி ஆதம் கான் மட்டின் இன்று தெரிவித்துள்ளார்.
‘வாலித் 97’ என்ற பெயரில் நடைபெற்ற இந்த பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் மொத்தம் 88 மோதல்களில் கொல்லப்பட்ட 3,771 பயங்கரவாதிகள் 64 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ராணுவத்தின் தரப்பிலும் அதிகம் பேர் உயிரழந்ததாக உள்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. எனினும், தங்கள் உடலில் கடைசி சொட்டு ரத்தம் உள்ள வரையில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை நடத்துவோம் என்று பெரும்பான்மையான ராணுவ வீரர்கள் சபதமேற்றுள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுதவிர, ஆப்கானிஸ்தானில் உள்ள பல்க் பகுதியில் ‘வாலித் 40’ என்ற பெயரிலும், குன்டுஸ் பகுதியில் ‘தூஃபான் 25’ என்ற பெயரிலும், பாக்லான் பகுதியில் ‘ஷஹின் 1’ என்ற பெயரிலும் தொடர்ந்து ராணுவத்தின் சிறப்பு படைகளின் பயங்கரவாத ஒழிப்பு வேட்டை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. #MilitantsKilled #NorthAfganistanMilitants

×

X