search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Afghan forces"

    ஆப்கானிஸ்தான் நாட்டின் 3 மாகாணங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 24 மணி நேரத்தில் 32 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #Afghanforces #Talibanfighters
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.

    பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசார் ஆகியோரை கொண்ட கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில், கந்தஹார் மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள மரூஃப் மற்றும் ஷோராபக் மாவட்டத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற தேடுதல் வேட்டையில் 16 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.



    ஃபர்யாப் மாகாணத்தின் கைசர் மாவட்டத்தில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.  கிழக்கு கஸ்னி மற்றும் மேற்கு பட்கிஸ் மாகாணத்துக்குட்பட்ட பகுதிகளில் மேலும் 11 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருதரப்பு மோதல்களின் ராணுவத்தை சேர்ந்த 5 வீரர்கள் மற்றும் பொதுமக்களில் 4 பேர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Afghanforces #Talibanfighters #Afghanfighting
    ஆப்கானிஸ்தானில் அதிபர் அறிவித்த போர்நிறுத்தத்துக்கு இடையில் தலிபான் பயங்கரவாதிகளால் இன்று கடத்தப்பட்டவர்களில் 149 பேரை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். #Afghanforces #149hostagesfreed #Talibanambush
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசு படைக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே சுமார் 17 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. 

    நாட்டின் பல பகுதிகளை பிடித்து வைத்துள்ள தலிபான்கள் கஸ்னி நகரை கைப்பற்றுவதற்காக கடந்த 15 நாட்களாக ஆவேசமாக போரிட்டு வருகின்றனர். இந்த நகரம் அவர்கள் கையில் சிக்காமல் இருப்பதற்காக அரசுப் படையினரும் தீவிரமான எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

    இருதரப்பு மோதல்கள் கடந்த புதன்கிழமை முடிவுக்கு வந்துள்ள நிலையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மீண்டும் ஒரு இடைக்கால போர்நிறுத்தத்துக்கு அதிபர் அஷ்ரப் கானி நேற்று அழைப்பு விடுத்தார். 

    இன்றிலிருந்து (20-ம் தேதி) முஹம்மது நபியின் பிறந்தநாளான மீலாதுன்நபி விழா (நவம்பர் மாதம் 21-ம் தேதி) வரை இந்த போர்நிறுத்தம் அமலில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

    இந்நிலையில், அந்நாட்டின் குன்டுஸ் மாகாணத்துக்கு உட்பட்ட கான் அபாட் மாவட்டம் வழியாக இன்று காலை சென்ற மூன்று பேருந்துகளை துப்பாக்கி முனையில் தலிபான் பயங்கரவாதிகள் வழிமறித்து மடக்கினர். அவற்றில் வந்த பயணிகள் அனைவரையும் கீழே இறக்கி சுமார் 170 பேரை கடத்திச் சென்றனர். 

    பிணை கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டவர்கள் எங்கே கடத்திச் செல்லப்பட்டனர்? என்பது தெரியாத நிலையில் அவர்களை மீட்க குன்டுஸ் மாகாணம் முழுவதும் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த வேட்டையில் பிணைகைதிகள் வைக்கப்பட்டிருந்த இடத்தை கண்டுபிடித்த பாதுகாப்பு படையினர் தலிபான்களின் கடுமையான துப்பாக்கிச் சூட்டை எதிர்கொண்டனர். பாதுகாப்பு படையினர் எதிர் தாக்குதலில் 7 தலிபான்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து 149 பேர் விடுவிக்கப்பட்டதாகவும், மீதமுள்ளவர்களை மீட்பதற்காக அங்கு தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாகவும் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
    #Afghanforces #149hostagesfreed #Talibanambush
    ஆப்கானிஸ்தானில் போர்நிறுத்தத்தை அதிபர் அறிவித்த பிறகு நடந்த சண்டையில் தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த 10 பேரை ராணுவம் சுட்டுக்கொன்றது. #AfghanAttack #AfghanTalibanKilled #AfghanCeasefire
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில்  ரம்ஜான் நோன்பை முன்னிட்டு தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் உள்நாட்டு போர் 5 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அதிபர் அஷ்ரப் கனி நேற்று அறிவித்தார். அதே சமயம், இன்ன பிற வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளான அல் கொய்தா மற்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் தொடர்ந்து நடைபெறும் என கூறியிருந்தார்.

    இந்த போர்நிறுத்த அறிவிப்பை தலிபான்கள் தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? இல்லையா? என்ற தகவல் வெளியாகவில்லை.

    இந்நிலையில் கிழக்கு பகுதியில் உள்ள நங்கார்கர்  மாகாணத்தில் நடந்த சண்டையில் தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த 10 பேரை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.

    நங்கார்கர் ஆபரேசன் முடிந்துவிட்டதாகவும், அதன்பின்னர் போர்நிறுத்தத்தை பின்பற்ற உள்ளதாகவும் அதிகாரி ஒருவர் கூறினார். போர்நிறுத்தம் நடைமுறையில் இருந்தாலும், தலிபான்கள் தாக்கினால் பதிலடி கொடுப்போம் என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல், நங்கார்கரில் உள்ள எம்.பி. ஒருவரின் வீட்டைக் குறிவைத்து அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர். #AfghanAttack #AfghanTalibanKilled #AfghanCeasefire

    ×