search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Afghanistan inaugural Test"

    இந்தியாவிற்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க டெஸ்டில் நான்கு ஸ்பின்னர்களுடன் களம் இறங்குகிறது ஆப்கானிஸ்தான். #INDvAFG
    ஐசிசி கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகளுக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கியது. அயர்லாந்து வரலாற்று சிறப்புமிக்க தனது முதல் டெஸ்டில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடியது. ஆப்கானிஸ்தான் தனது முதல் டெஸ்டில் இந்தியாவை எதிர்த்து விளையாடுகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த டெஸ்ட் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஜூன் 14-ந்தேதி தொடங்குகிறது.


    முஜீப் உர் ரஹ்மான்

    இதற்கான 16 கொண்ட ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிங்கர் ஸ்பின்னர்ஸ்களான முஜீப் உர் ரஹ்மான், அமிர் ஹாம்சா, ரிஸ்ட் ஸ்பின்னர்ஸ்களான ரஷித் கான், ஜாகிர் கான் ஆகிய நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்துள்ளனர்.


    ஜாகீர் கான்

    16 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. அஸ்கார் ஸ்டானிக்சாய் (கேப்டன்), 2. நஜீப் தராகாய், 3. உஸ்மான் கானி, 4. முகமது ஷேசாத், 5. முஜீப் உர் ரஹ்மான், 6. நஜிபுல்லா சத்ரான், 7. சமியுல்லா ஷென்வாரி, 8. ஷபிக்கியுல்லா, 9. தர்விஷ் ரசூலி, 10. முகமது நபி, 11. ரஷித் கான், 12. குல்பாதின் நைப், 13. கரிம் ஜனத், 14. ஷராபுதீன் அஷ்ரப், 15. ஷபூர் சத்ரான், 16. அஃப்டப் ஆலம்.

    ரஷித் கான் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்), முஜீப் உர் ரஹ்மான் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) ஆகியோர் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஜாகிர் கான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடிதிருந்தார். ஆனால், கைவிரல் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார்.


    அமிர் ஹம்சா

    நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை ஆப்கானிஸ்தான் அணியில் ஜாகிர் கான் இடம்பிடித்திருந்தார். இதில் ஆப்கானிஸ்தான் அரையிறுதி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது
    ×