search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agricultural Science College"

    • 5-ந்தேதி வரை புதுவை மாநிலத்தை சார்ந்த காரியமானிக்கம் மற்றும் பண்டசோழநல்லூர் கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது.
    • சுற்றுவட்டார பகுதியை சார்ந்த விவசாய பெருமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    புதுச்சேரி:

    மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியின் கீழ் இயங்கிவரும் வேளாண் அறிவியல் கல்லூரியின் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கான நாட்டு நலப்பணித்திட்ட முகாம் தொடக்க விழா கடந்த 30-ந்தேதி கல்லூரியின் கலையரங்கில் நடந்தது. அக்டோபர் 30-ந்தேதி முதல் நவம்பர் 5-ந்தேதி வரை புதுவை மாநிலத்தை சார்ந்த காரியமானிக்கம் மற்றும் பண்டசோழநல்லூர் கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது.

    விழாவிறகு கல்விக்குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், துணைத்தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. சுகுமாரன், செயலாளர் மருத்துவர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் மற்றும் கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடாஜலபதி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    வேளாண் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முகமது யாசின் வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பா ளராக புதுவை மாநில அரசின், விவசாய துறையின் கூடுதல் வேளாண் இயக்குனர் வசந்தகுமார் பங்கேற்று பேசினார்.

    நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ராவ் கெலுஸ்கர் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் பூச்சியியல் துறை உதவி பேராசிரியைகள் ரேவதி, சரோஜா புதுவை அரசின் காரியமானிக்கம் பகுதி வேளாண் அலுவலர் திருநாடன், பண்ணை மேலாளர் சிவகுமார் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சார்ந்த விவசாய பெருமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    நிறைவாக கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    ×