என் மலர்
நீங்கள் தேடியது "AIADMK"
- தமிழக அரசியலில் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு விசிக துருப்புசீட்டாக உள்ளது.
- திமுக கூட்டணியை உடைப்பதற்கு சிலர் கூலி வாங்கிக்கொண்டு வேலை செய்து வருகிறார்கள்.
விசிக மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் தென்பள்ளிபட்டில் விசிக தேர்தல் அங்கீகார வெற்றி விழா நடைபெற்றது.
விழாவில் கவுதம புத்தர், அம்பேத்கர், அன்னை மீனாம்பாள், அன்னை சாவித்திரி பாய் பூலே, அன்னை ரமாபாய் ஆகியோரின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
விசிக தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் திருமாவளவன் கூறியதாவது:-
* திமுக கூட்டணியை உடைப்பதற்கு சிலர் கூலி வாங்கிக்கொண்டு வேலை செய்து வருகிறார்கள். அதற்கு நாம் ஒருபோதும் இடம்கொடுத்து விடக்கூடாது.
* தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கும் பாஜக, முதலில் அதிமுகவை தான் பலவீனப்படுத்த நினைக்கும். தப்பித்தவறி பாஜகவுடன் கூட்டணி வைத்தால் எடப்பாடி பழனிச்சாமியின் கதை முடிந்துவிடும்.
* தமிழக அரசியலில் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு விசிக துருப்புசீட்டாக உள்ளது.
* விசிகவிற்கு எத்தனை சீட்டு கிடைக்கும். 6 சீட்டு 7, 8 ஆகுமா என்று கேட்கிறார்கள். 6 சீட்டு 10 சீட்டு ஆனாலும் 20 சீட்டு ஆனாலும் நாங்கள் ஆட்சியை பிடிக்க போவதில்லை. ஆனால் நாங்கள் இருக்கும் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு நாங்கள் வலுவான ஒரு சக்தி என்பதை வரும் தேர்தலிலும் நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துவோம்.
- யார் யாரோடு சேர்கிறார்கள் என்ற கவலை இல்லை
- யார் யாரை சந்தித்தாலும் அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
வேலூர்:
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்காததை கண்டித்து இன்று தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நடிகர் விஜய் தி.மு.க.வுக்கும் அவரது கட்சிக்கும் தான் போட்டி என கூறியிருக்கிறார். யார், யாருக்கு போட்டி என்பது குறித்து எங்களுக்கு கவலை இல்லை.
நாங்கள் உழைப்போம், ஜெயிப்போம். யார் யாரோடு சேர்கிறார்கள் என்ற கவலை இல்லை. எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தாலும் சரி யார் யாரை சந்தித்தாலும் அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. காட்பாடி ரெயில்வே மேம்பாலப் பணிகள் அடுத்த மாதம் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாமக எம்.எல்.ஏக்களுடன் பேசிக்கொண்டே அதிமுக எம்.எல்.ஏ திண்டுக்கல் சீனிவாசன் சட்டப்பேரவைக்கு வந்தார்.
- கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் முடிவு செய்வார்.
சட்டப்பேரவைக்கு வரும்போது பாமக எம்.எல்.ஏக்கள் ஜி.கே.மணி, அருள் உள்ளிட்டோருடன் அதிமுக எம்.எல்.ஏ திண்டுக்கல் சீனிவாசன் பேசிக்கொண்டே வந்தார்.
அப்போது "பாஜக, நம்ம (அதிமுக), அப்புறம் பாமக" என சிரித்துக்கொண்டே பேசி வந்த திண்டுக்கல் சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது "நாங்க கூட்டணிங்க" எனச் சொல்லிச் சென்றதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இன்று மதியம் திண்டுக்கல் சீனிவாசனிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், "பாமகவுடன் கூட்டணி என நான் யாரிடமும் கூறவில்லை. கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் முடிவு செய்வார்" என்று கூறிவிட்டு சென்றார்.
- இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
- 2015ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.
அ.தி.மு.க. நிர்வாகியும், முன்னாள் எம்.எல்.ஏ.-வுமான கருப்பசாமி பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவர் அ.தி.மு.க. நெல்லை மாவட்ட செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
அதிமுகவில் இருந்து 1977, 1980 தேர்தல்களில் சட்டப்பேரவைக்கு தேர்வான இவர், 2000ம் ஆண்டில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் தி.மு.க.வில் இணைந்தார். 2006 தேர்தலில் தென்காசி தொகுதியில் இருந்து தி.மு.க. எம்.எல்.ஏ.-வாக தேர்வான இவர், 2015ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
2016ல் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு திரும்பிய அவருக்கு, சசிகலா பொதுச் செயலாளராக இருந்தபோது அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர், 2017ல் கட்சியில் இருந்து விலகி 2020ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் அ.தி.மு.க.-வில் இணைந்தார்.
- சோலார் பேனல் குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கருப்பண்ணன் பேசினார்.
- சாரி... சாரி.. பழக்க தோஷத்தில் பேசிட்டேன்" என்று கருப்பண்ணன் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று வினாக்கள், விடைகள் நேரம் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
அப்போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கருப்பண்ணன் "தனியார் நிறுவனங்களில் சோலார் பேனல் நிறைய அமைத்து வருகிறார்கள். அதில் EB கொள்திறன் 100 கிலோவால்ட் தான் அனுமதி வழங்குகிறார்கள். வெயில் காலங்களில் 100 கிலோவால்ட் போதுமானதாக இல்லை ஆகவே 120 கிலோவால்ட் அனுமதி கொடுத்தால் நன்றாக இருக்கும். இது மாப்பிள்ளைக்கு (செந்தில் பாலாஜி) தெரியும்" என்று பேசவே அவையில் சிரிப்பலை எழுந்தது.
இதனையடுத்து, சாரி... சாரி.. பழக்க தோஷத்தில் பேசிட்டேன்" என்று கருப்பண்ணன் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "இது தொடர்பாக துறை அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும்" என்று தெரிவித்தார்.
- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
- நாங்களும் அவரை அணுகவில்லை.
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அ.தி.முக. அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சசிகலா, டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பே இல்லை என்று தெரிவித்தார்.
இது குறித்து பேசும் போது, "திருப்பி திருப்பி நாங்கள் கூறிவிட்டோம். அ.தி.மு.க. மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நீங்களாகவே கற்பனையில் கூறுகிறீர்கள். நீங்கள் சொல்லும் அவர்களை, கட்சியில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பு இல்லை. பா.ம.க.-வுக்கு, ராஜ்யசபா சீட் கேட்கப்படுகிறதா என கேட்கிறீர்கள். இன்னும் ராஜ்ய சபா தேர்தல் பற்றி அறிவிக்கப்படவில்லை.
நீங்களே கற்பனையாக கேள்வி கேட்கிறீர்கள். ராஜ்யசபா தேர்தல் அறிவிப்பு வரும்போது நாங்கள் தெரிவிப்போம். த.வா.க. வேல்முருகன் எங்களை அணுகவில்லை. நாங்களும் அவரை அணுகவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தான், கூட்டணி பற்றி பேசுவோம்.
கொள்கை என்பது வேறு, கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது நிலையானது. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் எதிரிகளை வீழ்த்த வியூகம் அமைப்பது. வாக்குகள் சிதறாமல் அதிக வாக்குகளை பெற வியூகம் அமைப்பது வழக்கம் தான். கூட்டணி என்றும் நிலையானது இல்லை.
முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த விருப்பம் இல்லை. அதனால், ஏதேதோ காரணம் சொல்லி தள்ளிப் போடுகிறார்," என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
- திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் அவல நிலை குறித்து நான் விளக்க வேண்டிய அவசியமே இல்லை
- ஊடகங்கள் மைக்கை நீட்டினால் மக்களே "உரிய மரியாதையுடன்" அதனை சொல்வார்கள்.
நெல்லை டவுன் தடிவீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி (வயது 57). இவர் காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார்.
அதன்பிறகு இவர் நெல்லை டவுன் முர்த்திம் ஜைக்கான் தைக்காவில் நிர்வாகியாக இருந்து வந்தார். தற்போது ரம்ஜானையொட்டி நோன்பு இருந்து வந்த நிலையில், இன்று அதிகாலை தொழுகையை முடித்துவிட்டு கிளம்பியபோது அவரை பின்தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் ஜாகீர் உசேன் பிஜிலியை அரிவாளால் வெட்டி கொலை செய்தது. பின்னர் அந்த கும்பல் தப்பிச்சென்றுவிட்டது.
இதனை தொடர்ந்து, ஜாகிர் உசேன் பிஜிலி கொலை தொடர்பாக அக்பர்ஷா, தவ்ஃபீக் ஆகிய இருவர் நெல்லை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "திருநெல்வேலியில் அதிகாலை தொழுகை முடித்துவந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாஹீர் உசேன், மர்மநபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
அதே போல், நேற்று கோட்டூர்புரத்தில் ரவுடிகளுக்கு இடையிலான தகராறில் இரட்டைக் கொலை நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் அவல நிலை குறித்து நான் விளக்க வேண்டிய அவசியமே இல்லை; ஊடகங்கள் மைக்கை நீட்டினால் மக்களே "உரிய மரியாதையுடன்" அதனை சொல்வார்கள்.
ரமலான் மாதத்தில் அதிகாலை தொழுகை முடித்து ஒரு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி, அதுவும் உங்கள் தந்தையின் தனிப்பிரிவு அதிகாரியாக பணியாற்றியவர், வீட்டிற்கு பாதுகாப்புடன் செல்ல முடியவில்லை. தன் உயிருக்கு ஆபத்து இருப்பது குறித்து அவரே ஒரு காணொளியை வெளியிட்டும் இருந்திருக்கிறார்.
இதற்கெல்லாம் என்ன தான் பதில் வைத்திருக்கிறீர்கள் மு.க.ஸ்டாலின் அவர்களே? வழக்கம் போல உங்கள் அமைச்சர்களை விட்டு, "அது தனிப்பட்ட பிரச்சனை" என்று கடந்துவிடப் பார்ப்பீர்கள். அவ்வளவு தானே? இந்த பதிலை சொல்ல உங்கள் திமுக அரசுக்கு அவமானமாக இருக்காதா?
உங்கள் வழிக்கே வருகிறேன்- தனிப்பட்ட பிரச்சனை என்றாலும் கொலை செய்வதற்கான துணிச்சல் எங்கிருந்து வருகிறது? உங்கள் ஆட்சியில் சட்டத்தின் மீதான அச்சம் துளி கூட இல்லாமல் போனதால் தானே? இதனை நீங்கள் எப்படி மறுப்பீர்கள்?
"கோட்டூர்புரத்தில் ரவுடிகள் இடையிலான தகராறில் நாங்கள் என்ன செய்ய முடியும்?" என்று நீங்கள் நிச்சயம் கேட்கக் கூடும். ஏனெனில், பொறுப்பற்ற பதில்களை அளிப்பது மட்டும் தானே உங்கள் அரசு செய்து வருவது? ஆனால், அந்த கேள்வியைக் கேட்பதற்கு முன், "தமிழ்நாட்டில் தலைதூக்கும் ரவுடியிஸத்தைத் தடுக்கத் தவறியதற்கு யார் பொறுப்பு?" என்று மக்கள் கேட்பார்கள் என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.
திரு. ஜாஹீர் உசேன் கொலையில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்; தன் நேரடி கட்டுப்பாட்டில் சட்டம் ஒழுங்கு இருப்பதாக போட்டோஷூட் வசனம் பேசியதை நினைவிற்கொண்டு, அந்த இரும்புக்கரத்தின் துரு நீக்கி இனியேனும் செயல்படுத்த வேண்டுமென வெற்று விளம்பர திமுக மாடல் அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- தி.மு.க ஆட்சியில் சொத்துவரி, மின் கட்டணம், பால், விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து ஆர்பாட்டம்.
- போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் ஒரு மணி நேரம் வாகனங்கள் பைபாஸ் வழியாக போலீசார் அனுப்பி வைத்தனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே இன்று செங்கல்பட்டு மேற்கு, கிழக்கு, ஒன்றிய கழகம் மற்றும் மாமல்லபுரம் அ.தி.மு.க வினர் சார்பில், தி.மு.க ஆட்சியில் சொத்துவரி, மின் கட்டணம், பால், விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு என குற்றம் சாட்டி, அதை கண்டித்து முன்னாள் எம்.எல்.ஏ தனபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், பேரூர் கழக செயலாளர் தினேஷ்குமார், புதுப்பட்டினம் ஊராட்சி தலைவர் காயத்ரி தனபால், மாமல்லபுரம் பேரூராட்சி துணைத்தலைவர் ராகவன் உள்ளிட்ட அ.தி.மு.க வினர் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் ஒரு மணி நேரம் அரசு பஸ், கார், வேன் போன்ற வாகனங்களை நகருக்குள் விடாமல் பைபாஸ் வழியாக போலீசார் அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் காவல் பணியில் ஈடுபட்டனர்.
- இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965-ம் ஆண்டு ஜனவரி 25-ந்தேதி தமிழகத்தில் போராட்டம் தொடங்கப்பட்டது.
- அ.தி.மு.க. மாணவர் அணி சார்பில் மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
சென்னை:
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965-ம் ஆண்டு ஜனவரி 25-ந்தேதி தமிழகத்தில் போராட்டம் தொடங்கப்பட்டது. அந்த தியாக வேள்வியில் உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வருகிற 25-ந் தேதி அ.தி.மு.க. மாணவர் அணி சார்பில் மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்போர் விவரம் வருமாறு:-
வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம்-அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பொன்னையன், அமைப்பு செயலாளர் நா.பாலகங்கா. வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம்-அமைப்புச் செயலாளர் டி.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் அப்துல் ரகீம், வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம்-முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா, மாவட்ட கழக செயலாளர் ராஜேஷ், சென்னை புறநகர் மாவட்டம்-இலக்கிய அணி செயலாளர் வைகைச் செல்வன், வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம்-அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தாடி. ம.ராசு, மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு.
தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம்-அமைப்பு செயலாளர் ஆதிராஜாராம், தென்சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம்-கொள்கை பரப்பு துணை செயலாளர், முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன், மாவட்ட செயலாளர் தி.நகர் சத்யா. தென் சென்னை தெற்கு (மேற்கு மாவட்டம்-முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி, தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம்-முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், மாவட்ட செயலாளர் அசோக்.
திருவள்ளூர் மத்திய மாவட்டம்-அமைப்பு செயலாளர் பா.பென்ஜமின், திருவள்ளூர் வடக்கு மாவட்டம்-மருத்துவ அணி செயலாளர்
டாக்டர் பி.வேணுகோபால், திரு வள்ளூர் கிழக்கு மாவட்டம்-மாணவர் அணி செயலாளர் விஜயகுமார், மாவட்ட செயலாளர் மாதவரம் வி.மூர்த்தி.
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம்-மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி. காஞ்சீபுரம் மாவட்டம்-மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம், அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், கே.பி.முனுசாமி
கோவை புறநகர் தெற்கு மாவட்டத்தில்-அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், தலைைம நிலைய செய லாளர் எஸ்.பி.வேலுமணி, அமைப்பு செயலாளர் தாமோதரன் எம்.எல்.ஏ. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்-துணை பொதுச் செயலாளர் கே.பி.முனு சாமி, மாவட்ட செயலாளர் அசோக்குமார், திண்டுக்கல் மேற்கு மாவட்டம்-பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்-துணை பொதுச் செயலாளர் நத்தம் விசுவநாதன், அமைப்பு செயலாளர் ஜக்கையன்.
கடலூர் கிழக்கு மாவட்டம்-முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம்-கொள்கை பரப்பு செயலாளர் டாக்டர் தம்பிதுரை, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம்-அமைப்பு செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, நாமக்கல் மாவட்டம்-அமைப்பு செயலாளர் பி.தங்கமணி, திருப்பூர் மாநகர் மாவட்டம்-தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன்.
விழுப்புரம் மாவட்டம்-அமைப்புச் செயலாளர் சி.வி.சண்முகம், சேலம் மாநகர் மாவட்டம்-அமைப்பு செயலாளர் செம்மலை, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்-அமைப்பு செயலாளர்கள் தளவாய்சுந்தரம், பச்சைமால், மதுரை மாநகர் மாவட்டம்-அமைப்பு செயலாளர் செல்லூர்ராஜூ, முன்னாள் அமைச்சர் மணிகண்டன், கோவை புறநகர் வடக்கு மாவட்டம்-முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் அமைச்சர் செல்வராஜ்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டம்-அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம்-அம்மா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார், விருதுநகர் மேற்கு மாவட்டம்- அமைப்பு செயலாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, நெல்லை மாவட்டம்-அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், இசக்கி சுப்பையா, சி.த. செல்லப்பாண்டியன், முருகையா பாண்டியன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
- தமிழக மக்கள் தி.மு.க. அரசு மீது கொண்டுள்ள எதிர்ப்பு உணர்வு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு வருகிறது.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம் தலைவர் தி. மு. தனியரசு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டபின் அ.தி.மு.க. மாநகராட்சி மன்றகுழு செயலாளர் டாக்டர் கே. கார்த்திக் நிருபர்களிடம் கூறியதாவது:
கிராம தெரு ரயில்வே சுரங்க பாதை பணிகள் மிக மந்தமாக நடைபெறுகிறது. கடந்த 10 மாதங்களுக்கு முன்பு அங்குள்ள வீடுகள் அகற்றப்பட்டன. ஆனால் இதுவரை எந்த பணியும் செய்யவில்லை. வீடுகளை அகற்றியவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்படவில்லை. ரெயில்வேயும் தமிழக அரசும், மாநகராட்சியும் ஒருவருக்கொருவர் காரணங்களை கூறி கொண்டிருக்கின்றனர். விரைவாக பணிகளை முடிக்க வேண்டும். குப்பைகள் அகற்றுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதிக ஊழியர்கள் விடுமுறையில் செல்கின்றனர். அவர்களுக்கு மாற்று ஆட்கள் நியமிக்கப்படுவதில்லை. மழைக்காலத்தில் மாநகராட்சிக்காக வேலை பார்த்த அடிமட்ட ஊழியர்களுக்கு மாநகராட்சி ஒரு மாத சம்பளத்தை நிறுத்தி உள்ளனர். அதை உடனே வழங்க வேண்டும். திருவொற்றியூர் சுடுகாட்டில் தனி நபர் ஒருவர் பண வசூல் செய்கிறார். இது குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற பின்பும் பண வசூல் தொடர்கிறது.
இதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். எனது வார்டில் உள்ள கோத்தாரி என்ற நிறுவனம் மழை நீர் கால்வாயை உள்ளடக்கி தனது எல்லையை பென்சிங் கட்டி ஆக்கிரமிப்பு செய்து உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ. தி.மு.க. வேட்பாளர் தென்னரசு வெற்றி பெறுவது உறுதி. தமிழக மக்கள் தி. மு.க. அரசு மீது கொண்டுள்ள எதிர்ப்பு உணர்வு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு வருகிறது. எங்கள் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி வருவதற்கு இந்த வெற்றி முதல் படியாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு துப்பாக்கி சூடு சம்பவங்கள் சாதாரணமாக நடைபெற்று வருவகிறது.
- தி.மு.க. அத்துமீறல்கள், அநியாயங்கள் செய்தாலும் அதையும் தாண்டி அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி.
சென்னை:
சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிங்காரவேலர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தி.மு.க. அரசில், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தீக்குளிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கிறது. தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டது.
எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்யும் கனிமொழிக்கு பழைய வரலாறு தெரியாது. அ.தி.மு.க. ஆட்சியை கலைத்த இந்திரா காந்தியுடன் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி செய்தவர் கருணாநிதி.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆம்லேட், டீ போடும் தி.மு.க. அமைச்சர்கள் பாத்திரத்தை மட்டும்தான் கழுவவில்லை. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இலங்கை பயந்து இருந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு துப்பாக்கி சூடு சம்பவங்கள் சாதாரணமாக நடைபெற்று வருவகிறது.
ஈரோடு கிழக்கு தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு காங்கிரஸ் மீது தி.மு.க. பழியை போடும். தி.மு.க. அத்து மீறல்கள், அநியாயங்கள் செய்தாலும் அதையும் தாண்டி அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
- வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது.
புதுடெல்லி :
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த தனி நீதிபதி பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு அளித்தார்.
இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு ஐகோர்ட்டில் அமர்வில் முறையிட்டது. இதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, அ.தி.மு.க. சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்று கூறி பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உத்தரவிட்டனர்.
இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஜனவரி மாதம் விசாரித்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஜனவரி 11-ந் தேதி ஒத்திவைத்தது.
இதற்கிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க உத்தரவிட்டது.
இதன்பின்னர் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலின்பேரில் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி அணிக்கு தற்காலிகமாக ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனையடுத்து வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு இன்று கூறுகிறது.
தீர்ப்பை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி கூறுகிறார். ஏற்கனவே இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தற்காலிகமாக கிடைத்து விட்டது. இதனால் அந்த அணி உற்சாகத்தில் உள்ளது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. இந்த தீர்ப்பை இரு தரப்பினரும் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.