என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "AIADMK General Body meeting"
- அதிமுக அலுவலகம் ஒபிஎஸ் வரவுள்ளதால் கூட்டம் அவசரமாக முடிக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்தது.
- பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம்.
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் செல்வதாக தகவல் வெளியானது.
அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில் அதிமுக அலுவலகம் ஒபிஎஸ் வரவுள்ளதால் கூட்டம் அவசரமாக முடிக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்தது.
இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி ஜூன் 23-ம் தேதி நடைபெறும். ஒற்றைத் தலைமை விவகாரம் செயல் வடிவம் பெறுமா என்பது குறித்து விரைவில் தெரியவரும். கட்சியில் எந்த முடிவாக இருந்தாலும ஒருமித்த கருத்துடன் எடுக்கப்படும்.
அதேபோல், ஓபிஎஸ் கட்சி அலுவலகம் வருகைக்கும், அதிமுக தீர்மான குழு கூட்டம் நிறைவுக்கும் சம்பந்தமில்லை. அதிமுக தீர்மானக் குழு கூட்டம் ஜூன் 18-ம் தேதி மீண்டும் நடைபெறும்.
பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொதுக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவராக தீர்மானங்களை வாசித்து வருகின்றனர்.
- 23 தீர்மானங்களை பொதுக்குழு நிராகரிக்கிறது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காட்டமாக உரையாற்றினார்.
பரபரப்பான சூழலில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வானகரம் ஸ்ரீவாருமண்டபத்தில் துவங்கியது. அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பொதுக்குழுகூட்டம் நடைபெறுகிறது.
பொதுக்குழுவை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நடத்துவதற்கு பன்னீர் செல்வம் முன்மொழிந்தார். பன்னீர்செல்வம் முன்மொழிந்ததை எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தார்.
இந்நிலையில், பொதுக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவராக தீர்மானங்களை வாசித்து வருகின்றனர்.
இப்போது 23 தீர்மானங்களை பொதுக்குழு நிராகரிக்கிறது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காட்டமாக உரையாற்றினார்.
பின்னர் பேசிய கே.பி.முனுசாமி, அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை தீர்மானம் எப்போது வருகிறதோ அப்போதுதான் 23 தீர்மானமும் நிறைவேறும் என்று கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்