search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aisa cup"

    ஆசிய கோப்பை பெண்கள் டி 20 கிரிக்கெட் போட்டியில் மலேசியா அணியை 27 ரன்களில் சுருட்டி இந்தியா அபார வெற்றி பெற்றது. #AsiaCupt20 #India #Malaysia
    கோலாலம்பூர்:

    ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் 20 ஓவர் போட்டி இன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் தொடங்கியது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், தாய்லாந்து, மலேசியா ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.

    தொடக்க நாளான இன்று மூன்று ஆட்டங்கள் நடந்தன. இந்திய அணி மலேசியாவுடன் மோதியது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்தது. மிதாலிராஜ் அபாரமாக விளையாடினார். அவர் 69 பந்தில் 97 ரன் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.



    இதையடுத்து, 170 ரன்களை இலக்காக கொண்டு மலேசியா விளையாடியது. ஆனால், இந்திய அணியினரின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மலேசியா அணி 13.4 ஓவரில் 27 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    அந்த அணியில் 6 பேர் டக் அவுட் ஆனார்கள்.

    இந்திய தரப்பில் பூஜா வஸ்தர்கர் 3 விக்கெட்டும், பட்டீல், பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டும், பாண்டே ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இதன்மூலம் இந்தியா 142 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    மற்றொரு ஆட்டத்தில் வங்காளதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்றது. மூன்றாவது ஆட்டத்தில் தாய்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
    ×