என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "alcohol conflict"
புதுச்சேரி:
புதுவை குயவர்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யனாரப்பன் (வயது 28). இவர் புதுவை அண்ணா சாலையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருடைய நண்பர்கள் ராஜ்கிரண் (19), சந்தோஷ் குமார் (22). இதில், ராஜ்கிரண் கண்ணாடி கடையில் வேலை பார்த்து வந்ததால் அவரது நண்பர்கள் கண்ணாடி என்று பெயரிட்டு அழைப்பது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று இரவு அய்யனாரப்பன், ராஜ்கிரண் மற்றும் சந்தோஷ் குமார் ஆகிய 3 பேரும் சோனாம்பாளையத்தில் உள்ள ஒரு மதுக்கடையில் மது குடித்தனர். இவர்களது பக்கத்தில் மேலும் 3 வாலிபர்கள் மது குடித்து கொண்டிருந்தனர். அதில் ஒருவர் கண்ணாடி அணிந்திருந்தார்.
அப்போது அய்யனாரப்பன் எப்போதும் கூப்பிடுவது போல் ராஜ்கிரனை ஏய் கண்ணாடி என்று கூறி பேசிக்கொண்டிருந்தார். ஆனால், பக்கதது மேஜையில் மது குடித்து கொண்டிருந்த கண்ணாடி அணிந்திருந்த வாலிபர் தன்னைத்தான் கண்ணாடி என்று கூறி கேலி செய்வதாக நினைத்து அய்யனாரப்பன் மற்றும் அவரது நண்பர்களிடம் கேட்டார்.
இதனால் இருதரப் பினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. இதில், ஆத்திரம் அடைந்த 3 வாலிபர்களும் ஒன்று சேர்ந்து அய்யனாரப்பனையும், அவர்களது நண்பர்களையும் சரமாரியாக தாக்கினர். மேலும் பீர் பாட்டிலை உடைத்து அய்யனாரப்பனை குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் காயம் அடைந்த அய்யனாரப்பன், ராஜ்கிரண், சந்தோஷ்குமார் ஆகிய 3 பேரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில், ராஜ்கிரண், சந்தோஷ்குமார் ஆகியோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். அய்யனாரப்பன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ் பெக்டர் கீர்த்தி நாராயணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அய்யனாரப்பன் மற்றும் அவரது நண்பர்களை தாக்கிய வாலிபர்கள் வாணரப்பேட்டையை சேர்ந்த ஸ்ரீகாந்த் (28), நாகமுத்து (28) மற்றும் நைனார் மண்டபத்தை சேர்ந்த சிவகுருநாதன் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்